மயில்சாமி தைரியம் யாருக்கு வரும்? அதிமுகவில் இருந்த போதே ரஜினிகாந்தை அழைத்து செய்த சம்பவம்!
சென்னை: நடிகர் மயில்சாமியின் தைரியம் யாருக்கு வரும் சொல்லுங்கள். அதிமுகவில் இருந்த போதே இப்படி ஒரு சம்பவத்தை செய்துள்ளார்.
இதுகுறித்து செல்வன் அன்பு என்பவர் தனது சமூகவலைதள பக்கத்தில் கூறியிருப்பதாவது: டேப்ரெக்கார்டர் இருந்த காலத்தில் தான் மயில்சாமியின் அறிமுகம். இவரும் லகஷ்மண் ஸ்ருதியின் லகஷ்மணும் சேர்ந்து வெளியிட்ட 'சிரிப்போ சிரிப்பு' கேசட் காப்பி போட்டுக் கொடுத்து காசு சம்பாதித்த ரெக்கார்டிங் சென்டர்கள் ஏராளம். (யூ டியூபில் இருக்கிறது).

ஷோலே படத்தின் மெஹபூபா பாடலை அன்றைய ரஜினி, ராஜேந்தர், பாக்யராஜ், நம்பியார் எனப் பேசி அசத்தி இருந்தனர். அன்றைய மயில்சாமி சினிமாப் பக்கமும், மாநிலக் கல்லூரி மாணவர் லகஷ்மண் தன் அண்ணன் ராமுடன் இணைந்து லகஷ்மண்-ஸ்ருதி ஆர்க்கஸ்ட்ரா என வேறு வேறு பாதைகளில் பயணித்து உச்சத்தை தொட்டனர்.
பின்னாளில் மயில்சாமியை கன்னிராசி படத்தில் கவுண்டமணி வீட்டுக்கு மளிகை சாமான் கொண்டு வரும் பையனாகத்தான் பார்க்க நேர்ந்தது. பின் கமலின் நண்பராக சில படங்களில் பயணம். குஷ்புவின் அண்ணனாக வெற்றி விழாவில் வருவார். பின் தனிக் காமெடியனாக பயணித்து அவர் தன் இடத்தைப் பிடிக்க பயணப்பட்ட வருடங்கள் ஏராளம்.
மாயாண்டி குடும்பத்தாரின் அந்த குடிகார மாமா, கோரிப்பாளையத்தின் ரிட்டயர்டு ரௌடி என தனியாளானாலும், விவேக்கோடு தூள் படத்தில் அந்த திருப்பதி ஜாங்கிரியானாலும் அவர் நிச்சயம் சிரிக்க வைத்திருக்கிறார்.
திடீரென டிவி விவாதங்களில் பங்கெடுத்த போது அவரை நெட்டிசன்கள் 'நிதி ஆலோசகர்' என பரிகசித்ததுண்டு.
அதிமுக ஆதரவாளராக இருந்த போதும் திமுக எம்எல்ஏ பிச்சாண்டியின் மகளை தன் மகனுக்கு திருமணம் செய்து வைத்து அதற்கு ரஜனியையும் அழைத்து வந்த தைரியம் அவருக்கு இருந்தது. அப்படி இணக்கமானவராகத்தான் மயில்சாமி
இருந்திருக்கிறார்.
மயில்சாமி என்றதுமே குடுகுடுப்பைக்காரர் போட்டோ தான் நினைவுக்கு வரும். அவர் வாயால் ஏற்படுத்தும் குடுகுடுப்பை சப்தமே அலாதி. Im venugopal from tidal park.....சிரித்து சிரித்து வயிறு வலித்த காமெடி.
'காமெடி டைம்' மூலம் எல்லோரது வீடுகளுக்குள்ளும் நுழைந்து அனைவருக்கும் பரிச்சயமானவர் மயில்சாமி. 57 வயதில் பிரிந்திருப்பது மிகவும் வேதனையான ஒன்றாக இருக்கிறது.. மயில்சாமி.....மறக்க முடியாது உங்களை... இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications