குட் பேட் அக்லி படத்திற்கு அஜித் முதல் த்ரிஷா வரை யாருக்கு எவ்வளவு ஊதியம்? வெளியான பரபரப்பு தகவல்!
சென்னை: குட் பேட் அக்லியில் நடித்தவர்கள் பெற்ற ஊதியம் குறித்த தகவல்கள் வெளியாகியுள்ளன. அதில் அஜித் முதல் ஆதிக் ரவிச்சந்திரன் வரை யார் யார் எவ்வளவு ஊதியம் பெற்றார்கள் என்பதை பார்க்கலாம்.
ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித், பிரசன்னா, சுனில், அர்ஜுன் தாஸ், சிம்ரன், த்ரிஷா, பிரியா பிரகாஷ் வாரியர் உள்ளிட்டோர் நடிப்பில் குட் பேட் அக்லி படம் வெளியாகியுள்ளது.

இந்த படம் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. இதனால் வெளியான முதல் நாளே பெரும் வரவேற்பு கிடைத்துள்ளது. இந்த படத்தின் முதல் நாள் காட்சியை ஷாலினியும் அவரது மகளும் கோயம்பேடு ரோகிணி தியேட்டரில் வந்து பார்த்தனர்.
அஜித் ரசிகர்கள்
அவரை பார்த்த ரசிகர்கள் அஜித்தே கடவுளே ஷாலினி என ஆரவாரம் செய்தனர். இந்த நிலையில் இந்த படத்தில் நடித்த பிரியா வாரியர், படப்பிடிப்பு தளத்தில் இருந்த எல்லாரையுமே நன்றாக பார்த்துக் கொண்டீர்கள். கப்பலில் எங்களுடன் சேர்ந்து சாப்பிட்ட போது ஜோக்குகளை மறக்க முடியாது.
கார் ரேஸ்
கார் ரேஸ் குறித்து நீங்கள் பேசும் போது உங்கள் கண்களில் ஒளிரும் பார்வை திருவிழா மாதிரி இருந்தது. நீங்கள் சுற்றியிருந்தவர்களை எப்போதுமே கவனித்தீர்கள். உங்களது அமைதியையும் அக்கறையையும் நான் என் வாழ்க்கை முழுவதும் எடுத்துச் செல்வேன். நீங்கள் ஒரு ரத்தினம். எந்த உயரத்திற்கு சென்றாலும் தாழ்மையாக இருக்க வேண்டும் என்பதை உங்களிடம் கற்றுக் கொண்டேன் என குறப்பிட்டுள்ளார்.
யாருக்கு எவ்வளவு ஊதியம்
இந்த நிலையில் யார் யாருக்கு எவ்வளவு ஊதியம் என்ற தகவல்கள் வெளியாகியுள்ளன. அது குறித்து பார்க்கலாம். குட் பேட் அக்லி ஏப்ரல் 10 ஆம் தேதி வெளியான நிலையில் ஊதியம் குறித்த விவரங்களை பார்க்கலாம்.
விடாமுயற்சி
விடாமுயற்சி படத்திற்கு ரூ 105 கோடி ஊதியமாக பெற்றதாக கூறப்படும் அஜித்குமார், குட் பேட் அக்லி படத்திற்கு தனது ஊதியத்தை 5 கோடி உயர்த்திக் கொண்டார். இதனால் அவருடைய ஊதியம் இந்த படத்திற்கு ரூ 110 கோடி என்கிறார்கள். மேலும் இதன் மூலம் இந்தியாவிலேயே அதிக ஊதியம் பெறும் நபராகவும் அஜித் கருதப்படுகிறார்.
குட் பேட் அக்லி
குட் பேட் அக்லியில் த்ரிஷாவுக்கு ரோலே சரியில்லை. அவர் ஏன் அந்த படத்தில் நடித்தார் என்ற கேள்வி எழுந்துள்ளது. அவரை நெட்டிசன்கள் தொடர்ந்து விமர்சித்து வருகிறார்கள். இந்த நிலையில்தான் அவர் தனது இன்ஸ்டா ஸ்டோரியில் நெட்டிசன்களை காட்டமாக விமர்சித்துள்ளார்.
டாக்சிக் மக்களே
அந்த பதிவில் அவர் கூறியிருப்பதாவது: டாக்சிக் மக்களே! நீங்கள் எப்படி வாழ்க்கையை வாழ்கிறீர்கள், நன்றாக தூங்குகிறீர்கள்? சமூக ஊடகங்களில் உட்கார்ந்து கொண்டு மற்றவர்களை பற்றி ஒன்றுமே இல்லாத விஷயங்களை பதிவிடுவதுதான் உங்களுக்கு மகிழ்ச்சியாக இருக்கிறதா?
கோழைத்தனம்
உங்களுடன் இருப்பவர்களுக்காகவும் உங்களைச் சுற்றியிருப்பவர்களுக்காகவும் உண்மையில் நான் வருத்தப்படுகிறேன். பெயரே குறிப்பிடாமல் கோழைத்தனமான பதிவுகளை போடுகிறீர்கள். கடவுள் உங்கள் அனைவரையும் ஆசிர்வதிக்கட்டும் என அந்த பதிவில் த்ரிஷா குறிப்பிட்டுள்ளார்.
த்ரிஷாவுக்கு குட் பேட் அக்லியில் ஊதியம்
இந்த நிலையில் த்ரிஷாவுக்கு குட் பேட் அக்லி படத்திற்கு ரூ 4 கோடி ஊதியமாக கொடுக்கப்பட்டதாக சொல்லப்படுகிறது. "கைதி" புகழ் அர்ஜுன் தாஸுக்கு ரூ 50 லட்சமும் பிளாஸ்ட் மோகனாக ரஜினியின் ஜெயிலர் படத்தில் நடித்திருந்த சுனிலுக்கு ரூ 50 லட்சமும் ஊதியமாக வழங்கப்பட்டது.
ஆதிக் ரவிச்சந்திரன்
கேப்டன் ஆஃப் தி ஷிப்- இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரனுக்கு ரூ 3 கோடி ஊதியம் தந்ததாக சொல்லப்படுகிறது. அஜித்தை வைத்து ஒரு படம் இயக்க வேண்டும் என நீண்ட கால கனவு என ஆதிக் தெரிவித்திருந்தார்.
ஜிவி பிரகாஷ்
இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ் குமாருக்கு ரூ 4 கோடி ஊதியமாக வழங்கப்பட்டதாக சொல்லப்படுகிறது. இந்த படத்தின் மொத்த பட்ஜெட்டே ரூ 190 கோடி முதல் ரூ 200 கோடி வரை என்கிறார்கள். அஜித் படங்களில் மிகவும் காஸ்ட்லியான படம் இது என்றும் கூறப்படுகிறது.












Click it and Unblock the Notifications