சன் டிவி டாப் சீரியல் நடிகைகளின் சம்பளம் எவ்வளவு தெரியுமா? அதுவும் இந்த நடிகைக்கு தான் அதிகமாமே..!
சென்னை: சன் டிவியில் முன்னணி நடிகைகள் வாங்கும் சம்பள விவரங்கள் தற்போது இணையத்தில் வெளியாகி இருக்கிறது.
டிஆர்பியில் முன்னணி இடத்தில் இருக்கும் நடிகைகளில் யார் அதிகமாக சம்பளம் வாங்குகிறார்கள் என்ற லிஸ்ட் லீக்காகி இருக்கிறது. அதில் ஒரு நாளைக்கு பிரபல நடிகைகள் வாங்கும் சம்பள விவரங்கள் லீக் ஆகி இருக்கிறது. அதே நேரத்தில் யார் அதிகமாக சம்பளம் வாங்குகிறார்கள் என்ற விவரங்களை விரிவாக பார்க்கலாம்.

பொதுவாக சீரியல்கள் சினிமாக்களை போன்று கிடையாது. குறிப்பிட்ட நாட்களுக்கு மட்டும்தான் நடிகர்களால் சீரியலில் கால்ஷீட் கொடுக்கப்படுகிறது. தொடர்ச்சியாக பல வருடங்களாக சீரியல் ஒளிபரப்பாகி வரும் நிலையில் மாதத்தில் 15 நாட்கள் பொதுவாக சீரியல் நடிகர்கள் கால்ஷீட் கொடுத்து இருக்கிறார்கள். அதற்கு தகுந்த மாதிரி அவர்களுக்கு என சம்பளமும் வழங்கப்பட்டு வருகிறது.
அதிலும் சீரியலுக்கு என்றே பல வருடங்களாக சிம்மாசனம் இட்டு அமர்ந்திருக்கும் சன் டிவி சீரியலுக்கு எப்போதுமே தனி மவுசுதான். அதனால்தான் சன் டிவி சீரியல் தான் டிஆர்பியிலும் முதல் இடங்களை பிடித்துக் கொண்டிருக்கிறது. இதற்கு போட்டியாக எத்தனையோ சேனல்கள் புதிது புதிதாக தொடங்கினாலும் அதில் எல்லாம் சன் டிவி சீரியல்களை அடித்துக் கொள்ள முடியாது என்ற நிலைமை தான் நிலவி வருகிறது.
காலை 10 மணி முதல் கிட்டத்தட்ட இரவு 11 மணி வரைக்கும் அலுக்காமல் சீரியல் பார்க்கும் ரசிகர்கள் இருக்கிற வரைக்கும் சேனல் தரப்பினர்களுக்கு கவலை இல்லை. இந்த நிலையில் சன் டிவியில் காலை 10 மணியிலிருந்து சீரியல்கள் தொடங்குகிறது. அதே நேரத்தில் மதியம் ஒரு திரைப்படம் ஒளிபரப்பாகிறது. அதைத் தொடர்ந்து மீண்டும் மூன்று மணி மணியிலிருந்து சீரியல்கள் தொடங்குகிறது. இடையில் ஒரு முறை செய்தியும் ஒளிபரப்பாகிறது
இப்படிப் பிஸியாக போய்க்கொண்டிருக்கும் நிலையில் சீரியல்களில் ஒரு சீரியல் டிஆர்பி யில் டாப்பில் வந்தாலோ அல்லது விறுவிறுப்பாக கதைக்களம் அமைந்தாலோ உடனே அந்த சீரியல் ஒரு மணி நேரம் சிறப்பு காட்சிகளாக ஒளிபரப்பாகிறது. அதிலும் சமீபத்தில் எதிர்நீச்சல் சீரியல் திங்கள் முதல் ஞாயிறு வரை என அனைத்து நாட்களிலுமே ஒளிபரப்பாகி வருகிறது. அதற்கு காரணம் ரசிகர்களின் மத்தியில் அந்த சீரியல் குறித்து அதிகமான எதிர்பார்ப்பு இருப்பது தான்.
இப்படியாக போய்க்கொண்டிருக்கும் நிலைமையில் சமீபத்தில் டிஆர்பி யின் அடிப்படையில் எதிர்நீச்சல் சீரியல், கயல், வானத்தைப்போல, இனியா, சுந்தரி என சில சீரியல்கள் டாப் 5 இடங்களுக்குள் வந்திருக்கிறது. இந்த நிலையில் இந்த சீரியல்களில் நடிக்கும் நடிகர்களும் ரசிகர்களின் மத்தியில் அதிகமாக பிரபலமடைந்து கொண்டிருக்கின்றனர். இந்த நிலையில் இந்த சீரியல்களில் நடிக்கும் நடிகைகளின் சம்பள விபரங்களும் இப்போது இணையத்தில் வெளியாகி இருக்கிறது. அது பற்றி பார்க்கலாம்.
- (கயல் சீரியல்) சைத்ரா ரெட்டி- ரூ. 20,000
- (இனியா) ஆலியா மானசா- ரூ. 20000
- (சுந்தரி)கேப்ரில்லா- ரூ.12,000
- (எதிர்நீச்சல்) மதுமிதா- ரூ.20,000
-
இந்த வாரம் ஓடிடியை கலக்க வரும் 11 படங்கள், வெப் சீரிஸ்கள்.. தனுஷின் ‘கர’ முதல் ‘ஸ்பைடர்-நுவார்’ வரை -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது -
22 வயசுல அமலா பாலுக்கு அம்மா.. இப்போ அரசு வேலையில் கலக்கும் நடிகை! மைனா பூவிதாவின் மறுபக்கம் -
“விஜய் - அஜித் சாதனைக்கு ஓவர்டேக் போட்ட சூர்யா!.. 12 நாளில் ‘கருப்பு’ காட்டிய பாக்ஸ் ஆபிஸ் மாஸ்!” -
“ஒரு சூப்பர் ஸ்டார் நடிகர் செய்த துரோகம்.. சினிமாவை விட்டே போனேன்” - சோனா பேட்டி.. கிளம்பிய சர்ச்சை -
Khushbu: “ரவி மோகன் பற்றிய கேள்வி”.. குஷ்புவின் ரியாக்ஷன்.. ஒரே வார்த்தையில் பதிலடி -
டெல்லியிலும் கொங்கு சமையல் மணக்கப்போகுது.. முதல்வர் விஜய்க்கு சமைக்கும் மாதம்பட்டி ரங்கராஜ்! -
உதயநிதி வீட்டை கேட்கும் ஆதவ் அர்ஜுனா.. இந்த வீடுதான் வேண்டும்.. கோட்டையில் நீடிக்கும் மல்லுக்கட்டு -
சீமான் வீட்டு விசேஷத்தில் தாய்மாமன் சீருடன் அனிதா ராதாகிருஷ்ணன்! வாசல் வரை வரவேற்று.. என்ன ஒரு பாசம் -
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்?












Click it and Unblock the Notifications