சானைக்கு பிறந்த சோனை! வடிவேல் காமெடியில் கலக்கினாரே தேனி முருகன்! பாரதிராஜாவுக்கு சொந்தமாமே?
சென்னை: வடிவேல் காமெடி சீன்கள் முதல் கனா காணும் காலங்கள் சீரியல் வரை நடித்த தேனி முருகன், இயக்குநர் பாரதிராஜாவுக்கு இப்படி ஒரு சொந்தமா என ரசிகர்கள் வியக்கிறார்கள். இதுவரை இவரைப் பற்றி தெரியாமல் இருந்த நிலையில் மனோஜின் மரணத்திற்கு பிறகு பாரதிராஜா குறித்து பல்வேறு தகவல்கள் வெளியாகி வருகின்றன.
தமிழ் சினிமாவில் துணை கதாபாத்திரங்கள், காமெடி காட்சியில் நடித்தவர்தான் தேனி முருகன். இவர் இயக்குநர் பாரதிராஜாவின் தம்பி என்கிறார்கள். அவருக்கு ஜெயராஜ் என்ற ஒரு தம்பி இருப்பது பெரும்பாலானோருக்கு தெரியும். ஆனால் தேனி முருகன் குறித்த விவரங்கள் தற்போது மீண்டும் வைலராகி வருகின்றன.

நடிகர் தேனி முருகன் ஒரு பிரபல சேனலுக்கு அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது: எனது பெயர் முருகன். சினிமா துறையில் பல்வேறு முருகன்கள் இருந்ததால் என்னை அடையாளப்படுத்திக் கொள்ள வேண்டும் என்பதற்காக தேனி முருகன் என பெயரிட்டுக் கொண்டேன்.
பாரதிராஜா உண்மையிலேயே எனக்கு அண்ணன். அதாவது அவருடைய அம்மாவும் எனது அம்மாவும் அக்கா தங்கைகள். அதாவது அவர் எனக்கு பெரியம்மா பையன் என்ற முறையில் அண்ணன். ஆனால் சினிமா துறையில் நாங்கள் அந்த உறவை பயன்படுத்திக் கொள்ளமாட்டோம். அவர் எப்போதுமே எனது குருதான்.
முதலில் நான் உதவி இயக்குநராக இருந்தேன். அதன் மூலம் எனக்கு சிறிய சிறிய ரோல்கள் கிடைத்தன. வடிவேலுவுடன் நிறைய படங்களில் சின்ன சின்ன ரோல்களில் நடித்து வந்தேன். சாணைக்கு பிறந்த சோனை என்ற வசனம் மிகவும் பிரபலம்.
இதை வடிவேலுவிடம் சொல்வேன். அதற்கு அவர் வாடா பானைக்கு பிறந்த பன்னி என அழைப்பார். அவர் மாதிரி காமெடி காட்சிகளில் யாராலும் நடிக்க முடியாது. ஐயா, தாஜ்மகால், பத்மினியும் பண்ணையாரும், பருத்தி வீரன் உள்ளிட்ட படங்களில் நான் நடித்துள்ளேன்.
பின்னர் விஜய் டிவியில் ஒளிபரப்பான கனா காணும் காலங்கள் தொடரில் பச்சைக்கு அப்பா கதாபாத்திரத்தில் நடித்திருந்தேன். அது போல் காற்றுக்கென்ன வேலி சீரியலில் புலிக்குட்டிக்கு அப்பா ரோலில் நடித்தேன். இந்த சீரியல்களும் மக்கள் மத்தியில் பிரபலம். இப்படியாக தேனி முருகன் தனது அனுபவங்களை பகிர்ந்து கொண்டார். மேலும் அந்த படத்தில் தேனி முருகன், மதுபோதையில் இருப்பது போல் நடித்திருப்பார். அவர் பாட்டிலை வடிவேலுவின் பேக்கில் சொருகி ஐய் குத்திருச்சி, குத்திருச்சி என கூறுவார். மேலும் இவர் கண்ணாடியை செருகியதால் வலியால் வடிவேல் துடிப்பார். அதற்கு தேனி முருகன், இனி ஆட்டாமல் சானை பிடிக்கணும் என்பார்.
அண்மையில் பாரதிராஜாவின் ஒரே மகன் மனோஜ் பாரதிராஜா மாரடைப்பால் காலமானார். இதனால் பாரதிராஜா மிகவும் உடைந்து, தனது மகன் எங்கே என கேட்கும் அளவுக்கு மகனின் மரணம் பாரதிராஜாவின் மனதை பாதித்துள்ளது. கங்கை அமரன் அவரது வீட்டிற்கு சென்று பாட்டு பாடி ஆறுதல் தெரிவித்தார்.
-
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்?












Click it and Unblock the Notifications