சோனா ஞாபகம் இருக்கா? பிரபல நடிகையின் வீட்டிற்குள் நுழைந்த 2 பேர் யார்? சென்னை மதுரவாயலில் பரபரப்பு
சென்னை: சென்னையிலுள்ள நடிகை சோனாவின் வீட்டில் அதிர்ச்சி சம்பவம் நடந்துள்ளது.. இது தொடர்பாக போலீசில் புகார் தந்ததையடுத்து, போலீசாரும் சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில் விசாரணையை முன்னெடுத்து வருகிறார்கள். என்ன நடந்தது?
தென்னிந்திய திரையுலகில் 90களில் பிரபலமாக இருந்தவர் நடிகை சோனா... ஆரம்பத்தில் ஒன்றிரண்டு சீன்களில் நடித்து கொண்டிருந்தவர், பிறகு தன்னுடைய நடிப்பு திறமையால், 2வது ஹீரோயினாக உயர்ந்தார்...

எனினும், கவர்ச்சி நடிகையாகவே பெரும்பாலும் அறியப்படுகிறார்.. காமெடி ரோலில் நடித்தாலும்கூட, கிளாமரையும் கொட்டியே நடித்திருந்தால், கவர்ச்சி நடிகை என்ற முத்திரையே இவர்மீது விழுந்துவிட்டது.
கவர்ச்சி நடிகை: இவர் உச்சத்தில் இருந்தபோதுதான, பிரபல பாடகர் எஸ்பிபி சரண் தன்னிடம் அத்துமீறி நடந்து கொண்டதாக போலீஸில் புகாரை தந்து தென்னிந்திய மாநிலங்களை அதிர வைத்தார்.. சில மாத காலம் இது தொடர்பான சர்ச்சைகள் நீடித்து, சினிமா உலகில் பரபரப்பையும் தந்திருந்தது. அதற்கு பிறகு, அந்த சர்ச்சை மெல்ல ஓய்ந்ததையடுத்து, திரையுலகில் சோனாவும் காணாமல் போனார்..
நீண்ட காலத்துக்கு பிறகு, "ஷார்ட்பிளிக்ஸ்" என்ற ஒடிடி தளத்தில் ஒளிபரப்பாகவுள்ள 'ஸ்மோக்' என்கிற வெப்சீரிஸ் மூலமாக டைரக்டராக மீண்டும் திரையுலக பயணத்தை துவங்கியிருக்கிறார்..
நடிகை சோனா: இப்படிப்பட்ட சூழலில், இவர் வீட்டில் யாரோ 2 பேர் கத்தியோடு நுழைந்துவிட்டார்களாம்.. சென்னை மதுரவாயலில் நடிகை சோனாவின் வீடு அமைந்துள்ளது.. கிருஷ்ணா நகர், 28 வது தெருவில் தனது குடும்பத்துடன் வசித்து வருகிறார்.
நேற்று மதியம் மர்ம நபர்கள் 2 பேர், சோனாவின் வீட்டு காம்பவுண்ட் சுவரை எகிறி குதித்துள்ளனர்.. வீட்டின் வெளிப்புறம் பொருத்தப்பட்டுள்ள AC யூனிட்டையுடம் திருட முயன்றுள்ளனர்.. மர்மநபர்களை கண்டதுமே, சோனா வளர்க்கும் நாய் குரைத்துள்ளது.. நாய் நீண்ட நேரமாக குரைத்தால், சத்தம் கேட்டு சோனா வெளியே வந்து பார்த்துள்ளார்.. அப்போது 2 மர்ம நபர்கள் சோனாவை பார்த்ததுமே அங்கிருந்து தப்ப முயன்றிருக்கிறார்கள்.
அலறி கத்திய சோனா: ஆனால், அதற்குள் சோனா கத்தி கூச்சலிட்டுள்ளார்.. உடனே அந்த மர்ம நபர்களும், கையில் மறைத்து வைத்திருந்த கத்தியை காட்டி மிரட்டியிருக்கிறார்கள்.. இதனால் பயந்துபோன சோனா, அங்கிருந்து தப்பி செல்ல முயன்றுள்ளார்..
அப்போது, திடீரென கீழே தடுமாறி விழுந்துவிட்டார்.. இதில் அவருக்கு லேசான காயம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது... எப்படியும் சோனா கத்தி கூச்சலிட்டுவிடுவார் என்பதால், திருட வந்த 2 மர்மநபர்களும், அங்கிருந்து எகிறி தப்பி, வெளியில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த தங்களுடைய பைக்கை எடுத்துக்கொண்டு பறந்துள்ளனர்.. இதற்கு பிறகு, போலீஸ் கன்ட்ரோல் ரூமக்கு தகவல் தெரிவித்துள்ளார் சோனா.
விசாரணை: உடனே போலீசாரும் சம்பவ இடத்திற்கு வந்து, சோனா வீட்டின் அருகே பொருத்தப்பட்டுள்ள சிசிடிவி காட்சிகளை கைப்பற்றியுள்ளனர்.. நடிகை சோனாவை கத்தியை காட்டி மிரட்டி சென்ற 2 நபர்கள் யார் என்ற விசாரணையையும் மேற்கொண்டு வருகிறார்கள்.. அதிக அளவு வீடுகள் நிறைந்த குடியிருப்பு பகுதிக்குள் நுழைந்து, நடிகையின் வீட்டில் சுவர் ஏறி குதித்து, கத்தியையும் காட்டி மிரட்டி சென்ற இந்த சம்பவம் பெரும் அதிர்ச்ச்யை தந்து வருகிறது.
-
முதல்வர் விஜய்யின் மகன் ஜேசன் சஞ்சய் இயக்கிய சிக்மா படம் எப்போது ரிலீஸ்? ஜெயிப்பாரா இந்த ஜூனியர்? -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ












Click it and Unblock the Notifications