ஜோவிகாவை பிக்பாஸ் வீட்டுக்குள் அனுப்பி வைத்துவிட்டு! வனிதா விஜயகுமார் செய்யுற காரியத்தை பாருங்க!
சென்னை: மூத்த மகள் ஜோவிகாவை பிக்பாஸ் நிகழ்ச்சியில் விட்டுவிட்டு வனிதா விஜயகுமார் செய்திருக்கும் காரியத்தை பார்த்தீர்களா?
நடிகை வனிதா விஜயகுமாரின் மகள் ஜோவிகா. இவருக்கு 18 வயதாகிறது. இவர் 9ஆம் வகுப்பு வரை படித்துள்ளார். அதற்கு மேல் அவரால் படிக்க முடியவில்லை என்பதால் சினிமாவில் நடிக்க விரும்பியுள்ளார்.

சினிமாவில் நடிக்க பிக்பாஸ் புகழ் முக்கியம் என்பது கடந்த காலங்களில் நடந்த சம்பவங்கள் சொல்கின்றன. இதை ஜோவிகாவும் அறிமுக நாளன்று வீடியோவில் தெரிவித்திருந்தார். வனிதாவின் மகள் ஜோவிகாவுக்கு அடிப்படை கல்வி அவசியம் என பிக்பாஸ் ஹவுஸ்மேட்ஸ் அறிவுறுத்தினர்.
ஆனால் ஜோவிகாவே இந்த டாப்பிக்கை பற்றி பேச வேண்டாம் என கூறியிருந்தார். இந்த நிலையில்தான் விசித்ரா, அடிப்படை கல்வி குறித்து பேசியது ஜோவிகாவுக்கு பெரும் கோபத்தை ஏற்படுத்தியது. விசித்ரா தான் பொதுவாக சொன்னதாகவும் ஜோவிகாவோ அவர் தன்னைத்தான் சுட்டிக் காட்டியதாக பெரும் சண்டை கட்டினார்.
ஒரு கட்டத்தில் விசித்ராவை நீ , வா போ என ஒருமையில் கூட பேசினார் ஜோவிகா. விசித்ராவும் எங்க தமிழ் எழுதி காண்பி டி என ஒருமையில் பேசியிருந்தார். வயதில் சிறிய பெண் என்றாலும், தனது தோழியின் பெண் என்றாலும் அவர் இங்கு ஒரு போட்டியாளர் என்பதை தாண்டி விசித்ரா அதிக உரிமை எடுத்துக் கொண்டதால் வந்த வினை என்கிறார்கள்.

இந்த நிலையில் தற்போது அடிப்படை கல்வி முக்கியமா என்பது குறித்து விவாதங்கள் சமூகவலைதளங்களில் நடந்து வருகின்றன. மேலும் ஜோவிகாவுக்கு படிப்பு வரவில்லை அவர் நடிக்க சென்றுவிடுவார். ஆனால் ஏழை குழந்தைகள் படிப்பு வராவிட்டால் அவர்களை அப்படியே விட்டுவிட்டால் அவர்கள் கூலி வேலைக்கு செல்ல வேண்டுமா என்ற கருத்தும் நிலவுகிறது.
ஜோவிகா சொல்வதை போல் படிப்பு வராமல் இன்று எத்தனையோ மாணவர்கள் இறக்கிறார்கள். அப்படி இறந்துதான் படிக்க வேண்டும் என்றில்லை என்பது போன்ற கருத்தும் எழுகிறது. விசித்ராவை விட்டுவிட்டு தற்போது ஜோவிகாவின் சண்டை பிரதீப் ஆன்டனி பக்கம் திரும்பியுள்ளது. வனிதாவை போலவே அவருடைய மகள் சண்டை கட்டுகிறார் என நெட்டிசன்கள் பேசுகிறார்கள்.
இந்த நிலையில் வனிதா தனது மூத்த மகளை பிக்பாஸ் வீட்டிற்குள் அனுப்பிவிட்டு அந்த ஷோ குறித்த ரெவ்யூவை செய்து வருகிறார். மேலும் தனது இளைய மகள் ஜெய்னிதாவுடன் வெளிநாட்டுக்கு அவர் சென்றுள்ளார். அங்கு தாய்லாந்து தலைநகர் பாங்காக்கில் இருக்கும் புகைப்படங்களை தற்போது வனிதா தனது சமூகவலைதள பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications