மீனா ஒரே போடு.. "நான் ஹிந்தியில் பேசணுமா? இது ஹிந்தி விழாவா?" ஒரே நொடியில் முகம் சிவந்த நடிகை.. செம
சென்னை: நடிகை மீனாவின் வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகி கொண்டிருக்கிறது.. இதைப்பார்த்த தென்னிந்திய மக்கள், திரண்டு சென்று வாழ்த்தையும், பாராட்டையும் மீனாவுக்கு சொல்லி கொண்டிருக்கிறார்கள்.. மேலும், இந்த வீடியோவை பெருமளவில் ஷேர் செய்தும் வருகிறார்கள்.
நடிகை மீனா இன்னமும் ரசிகர்களின் கனவு தேவதையாகவே வலம் வருபவர்.. தென்னிந்திய மொழிகளில் முன்னணியில் நடித்தவர்.. அதுவும் குழந்தையிலிருந்தே நடித்து வருவதால், அந்தந்த மாநிலங்களில் மீனாவுக்கான ரசிகர் கூட்டம் அதே கட்டுக்கோப்புடன் உள்ளது.

திருமணம்: இவரது வித்யாசாகர் மறைவுக்கு பிறகு, மகள் நைனிகா, தன்னுடைய அம்மா என குடும்பத்துடன் வசித்து வருகிறார்.. திரிஷியம் 2, ப்ரோ டாடி படங்களில் மீனா நடித்திருந்தார். இப்போதுகூட 2 படங்களில் நடித்து கொண்டிருக்கிறார்.
இந்நிலையில், மீனாவின் பேட்டி ஒன்று இணையத்தில் வைரலாகி கொண்டிருக்கிறது. 2024 சர்வதேச இந்திய திரைப்பட அகாடமி விருதுகள் வழங்கும் விழா அபுதாபியில் நடைபெற்றது. செப்டம்பர் 27 முதல் 29 வரை மூன்று நாட்கள் இந்த விழா நடைபெற்றது. செப்டம்பர் 27 முதல் 29 வரை மூன்று நாட்கள் இந்த விழா நடைபெற்றது.
திரைப்பட விழா: சிறந்த நடிகர், சிறந்த திரைப்படம் என பலப் பிரிவுகளுக்கு விருதுகள் வழங்கப்பட்டது. இந்த சினிமா விருது விழாவில் மீனாவும் கலந்துகொண்டுள்ளார்.. அப்போது அங்கிருந்த செய்தியாளர்கள் மீனாவை பேச அழைத்தனர்.. மீனாவும் பேச சென்றபோது, அங்கே ஏராளமான மைக்குகள் வைக்கப்பட்டிருந்தன.
அப்போது செய்தியாளர்களில் ஒருவர் அவரிடம் "ஹிந்தியில் பேசுங்கள்" என்றார்.. உடனே அதைக்கேட்டு டென்ஷனான மீனா, "இது ஹிந்தி விழாவா? ஹிந்தியில்தான் பேசணுமா? அதுக்கு எதுக்கு என்னை கூப்பிட்டீங்க?
வீடியோ: தென்னிந்தியர்கள் மட்டும்தான் இங்கே வருகிறார்கள் என்று நினைத்தேன்.. தென்னிந்திய மொழி படங்கள் சிறப்பாக இருக்கின்றன... தென்னிந்தியராக இருப்பதில் நான் மிகவும் பெருமைப்படுகிறேன்.. ஐபா உர்சவம் தென்னிந்தியா மட்டுமின்றி வட இந்திய சினிமாக்காரர்களையும் ஒன்றிணைத்து பெரிய நிகழ்வாக நடத்துகிறது" என கூறிவிட்டு சென்றார்.
வட இந்திய, தென் இந்திய சினிமா உலகினரை ஒன்றிணைத்து பெரிய நிகழ்வாக இந்த விழா நடத்தப்பட்டுள்ளது என்று அதிர சொன்ன நடிகை மீனாவின் இந்த வீடியோதான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
ஏ.ஆர். ரகுமான்: வடமாநில செய்தியாளர்களுக்கு பலமுறை இதுபோல நெத்தியடி பதிலை இசையமைப்பாளர் ஏ.ஆர். ரகுமான் தந்திருக்கிறார்.. சென்னையில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட ஏ.ஆர்.ரகுமான், தமிழ் படங்களை எங்கு பார்த்தாலும் நாம் பெருமைப்பட வேண்டும். ஒரே இந்தியா தான் வட இந்தியா, தென்னிந்தியா என்றில்லை" என்றார்.
அப்போது செய்தியாளர் ஒருவர் இந்தியாவின் இணைப்பு மொழியாக ஹிந்தியை ஏற்க வேண்டும் என அமித் ஷா பேசியதை பற்றி கேள்வி எழுப்பினார்.. அதற்கு ஏ.ஆர்.ரகுமான் "தமிழ்தான் இணைப்பு மொழி" என ஒற்றை வரியில் பதிலளித்திருந்தது இங்கு நினைவுகூரத்தக்கது.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications