அந்த ஹீரோ.. ரகசியத்தை உடைத்த ஸ்ரீபிரியா.. நடிகர் சிவக்குமாருடன் நான் பேசல.. ஆஹா வணக்கத்துக்குரியவர்
சென்னை: நடிகர் சிவக்குமார் பற்றி, நடிகை ஸ்ரீபிரியா சொல்லியிருக்கும் கருத்துக்கள் பலருக்கும் வியப்பையும், ஆச்சரியத்தையும் ஏற்படுத்தி கொண்டிருக்கிறது. இது தொடர்பான வீடியோ ஒன்று இணையத்தில் வெளியாகி, ஏகப்பட்ட கமெண்ட்ஸ்களை பெற்று வருகிறது.
மூத்த பத்திரிகையாளரும், தயாரிப்பாளருமான சித்ரா லட்சுமணன் தன்னுடைய யூடியூப் சேனலுக்காக ஸ்ரீபிரியாவிடம் பேட்டி எடுத்துள்ளார்.. இது பழைய பேட்டி போல தெரிகிறது. ஆனால், இப்போது மறுபடியும் இந்த வீடியோவை அப்லோடு செய்துள்ளனர்.. இதுதான் தற்போது டிரெண்டாகி வருகிறது.

நடிகை ஸ்ரீபிரியா: "ஆட்டுக்கார அலமேலு" படத்துக்கு பிறகு, பல படங்களில் சிவக்குமாருடன் பேசாமலேயே நடித்ததாக பல பேட்டிகளில் நீங்க சொல்லி இருக்கீங்க.. ஆட்டுக்கார அலமேலுக்கு முன்பேயே இந்த பிரச்சனை ஆரம்பித்ததா? என்று சித்ரா லட்சுமணன் கேள்வி எழுப்பினார்.
அதற்கு ஸ்ரீபிரியா, "ஆட்டுக்கார அலமேலுவில்தான் பிரச்சனை வந்தது. எனக்கு ஒரு தவறான தகவல் தரப்பட்டது. என்னை இந்த படத்தில் நடிக்க வைக்க வேணாம்னு சிவக்குமார் சொன்னாராம்.. இப்படி ஒரு தகவல் எனக்கு கிடைக்கவும், மனசுலயே நான் வெச்சிக்கிட்டு இருந்தேனே தவிர, வெளியில காட்டிக்கல.
கோபம்: நான் நடிச்சிட்டு இருக்கும்போது, என்ன இப்படி வேம்பிஷ்ஷா (Vampish) நடிக்கறேன்னு சொன்னார்.. 2முறை சொன்னார்.. 3வது முறை சொல்லும்போது, நான் உடனே கோபத்தில் வெளியே எழுந்து போயிட்டேன். இது அவருக்கும் கோபமாகிவிட்டது. என்கிட்ட பேசல.. நானும் பேசல.. இப்படியே 2 வருஷம் ஓடிருச்சு.
ஆனால், நான் சிவக்குமார் சாரை பார்த்து ரொம்ப வியக்குறேன்.. மதிக்கிறேன்.. சினிமா துறையை பொறுத்தவரை ஆணாதிக்கம் நிறைந்த துறை.. ஹீரோ சொல்றபடிதான் எல்லாம் இங்கு நடக்கும்.. நான் இந்த பொண்ணுகூட நடிக்க மாட்டேன்னு என்னை அவரால் சொல்லியிருக்க முடியும்.. ஆனால், அவர் அப்படி சொன்னதே இல்லை.. ஒருவரையொருவர் கட்டிப்பிடித்து நடிப்போம்.. கட் என்றதுமே, அடுத்த செகண்ட் ஆளுக்கொரு பக்கம் பிரிந்து போயிடுவோம்.
என்னடி மீனாட்சி: "என்னடி மீனாட்சி" படத்தில் நிறைய ரொமான்டிக் சீன் இருக்கும்.. அப்பகூட ஒரு பிரச்சனையும் வந்ததில்லை.. அவர் நடிக்க முடியாது என்று சொல்லியிருந்தால், அத்தனை படங்கள், அவருடன் நான் சேர்ந்து நடித்திருக்க முடியாது.. இதுக்கெல்லாம் ஒரு பெரிய மனசு வேணும்.. இது பர்சனல், இது தொழில் என்று தனித்தனியாக பிரித்து பார்க்க அவருக்கு தெரிந்திருக்கிறது.
நடிகைகள், நடிகர்கள் சண்டை போட்டுக்கிட்டு நடிக்காமல் போறாங்க., அது போன்றோருக்கெல்லாம் நாங்கள் முன்னுதாரணமாக இருக்கிறோம்.. பேசாமலேயே சேர்ந்து நேடிக்க முடியும் என்பதை நானும் சிவக்குமார் சாரும் நிரூபித்துள்ளோம்.. என்னைப் பொறுத்தவரை சிவக்குமார் வணக்கத்துக்குரியவர்..
நடிகை ராதிகா: பாடாத தேனீக்கள் படத்தில் நடிக்கும்போது, ராதிகா ஏதோ அப்செட்டில் இருந்தாங்க.. அப்போ என்கிட்ட சிவக்குமார் வந்து ராதிகா பற்றி ஏதோ கேட்டார்.. நானும் அவரது பிரச்சனையை சொன்னேன்.. அப்படியே சகஜமாக நாங்க பேச ஆரம்பிச்சிட்டோம்" என்றார் ஸ்ரீபிரியா.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications