அங்கதான் நான் உஷாரா இருந்திருக்கனும்.. தப்பு பண்ணிட்டேன்.. நாக சைதன்யா, சோபிதா பற்றி சமந்தா ஆதங்கம்!
சென்னை: ஆர்மாண்ட் ஹேமில்டன் இன்டர்நேஷனல் மார்க்கெட்டிங் நிறுவனம் வெளியிட்ட செப்டம்பர் மாதத்தின் உலக அளவிலான பிரபல நடிகைகள் பட்டியலில் நடிகை சமந்தா முதலிடத்தை பிடித்துள்ளார். அமேசான் பிரைம் ஓடிடி தளத்தில் வெளியாகும், Citadel: Honey Bunny என்ற வெப் தொடரின் ப்ரமோஷனும் இதற்கு முக்கிய காரணம்.
இந்த தொடரில் சமந்தா ஒரு ரகசிய புலனாய்வாளராக நடித்துள்ளார். அவரது திறமையான நடிப்பு மற்றும் ஆக்ஷன் காட்சிகள் உலகளவில் பாராட்டைப் பெற்றுள்ளன. சிட்டாடல் என்ற அமெரிக்க பிரபல வெப் தொடரைத்தான் ஹிந்தியில் ரீமேக் செய்து முக்கிய பாத்திரத்தில் சமந்தா நடித்துள்ளார். இந்த புகழைத் தொடர்ந்து, சமந்தா பாலிவுட்டில் மிகவும் பிரபலமான நடிகைகளில் ஒருவராக உயர்ந்துள்ளார்.

சமந்தாவின் தொழில்முறை வாழ்க்கை சிறப்பாக இருந்தாலும், அவரது தனிப்பட்ட வாழ்க்கையில் பல ஏற்ற இறக்கங்கள் மன உளைச்சல்களை சந்தித்துள்ளார். குறிப்பாக நாக சைதன்யாவை விவாகரத்து செய்த பிறகு, தனிப்பட்ட வாழ்க்கை பிரச்சினைக்காக தொடர்ந்து சமந்தா செய்திகளில் அடிபட்டு வருகிறார்.
சமந்தா மற்றும் நாக சைதன்யா விவாகரத்துக்குப் பிறகு, நாக சைதன்யா மற்றும் நடிகை ஷோபிதா துலிபாலா இருவரும் பலமுறை ஒன்றாக வெளியில் சென்ற புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலானது. இதனால், இருவரும் காதலிப்பதாகவும், சமந்தாவை விட்டு பிரிய நாக சைதன்யாவே காரணம் என்றும் பலர் குற்றம் சாட்டினர். சமந்தாவுடன் திருமண பந்தத்தில் இருந்தபோதே ஷோபிதா துலிபாலாவுடன் நாக சைதன்யா காதல் கொண்டிருக்கலாம் என்று ரசிகர்கள் குற்றம்சாட்ட இந்த போட்டோக்கள் ஒரு முக்கிய ஆதாரமாகும். இந்த நிலையில்தான் விரைவில் நாகசைதன்யா-துலிபாலா திருமணம் நடைபெற உள்ளது.
இதனிடையே, சமந்தா தற்போது ஒரு நேர்காணலில், தான் நிஜ வாழ்க்கையிலும் ஒரு ரகசிய புலனாய்வாளராக இருந்திருக்க வேண்டும் என்று கூறியுள்ளார். இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. அவர் தனது கருத்தை மேலும் தெளிவுபடுத்தவில்லை என்றாலும், அவரது இந்த வார்த்தைகள், நாக சைதன்யாவுடனான துலிபாலா உறவை தான் கண்டுபிடிக்காமல் வாழ்ந்துவிட்டதற்கான அறிகுறி என்று சமந்தா ரசிகர்கள் கூறுகிறார்கள்.
"இந்த சீரிஸில் நீங்கள் ஸ்பை ஏஜெண்டாக நடித்தீர்களே... நிஜ வாழ்க்கையில் கூட ஸ்பையாக செயல்பட்டீர்களா?" என்ற கேள்விக்கு, சமந்தா பதிலளித்தார். அப்போது, "நிஜ வாழ்க்கையில் கூட நான் அப்படி செய்ய வேண்டியிருந்தது. அப்படி செய்யாமல் இருந்தது மிகவும் தவறு. ஸ்பை ஆகாததால் தான் என் வாழ்க்கை இப்படி ஆனது" என்று கூறியுள்ளார் சம்மு.
சமந்தாவுடன் பிரியும் முன்பே சோபிதாவுடன் நாக சைதன்ய உறவு வைத்திருந்தார். அதை சமந்தா கண்டுபிடிக்க முடியவில்லை. அப்படி நடந்திருந்தால் சமந்தா எச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்திருப்பார். எல்லாம் நடந்துவிட்ட பிறகு வருத்தப்பட்டு பயன் இல்லை என்று சமந்தாவின் ரசிகர்கள் கூறுகின்றனர்.
-
மாமூல் தொல்லையில் இருந்து முதல்வர் விஜய் எங்களை காப்பாற்றிவிட்டார்.. டாஸ்மாக் பணியாளர் சங்கம் -
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
"முதலமைச்சருக்கு நன்றி.. ஆனால்! எதிரியின் எதிரி நண்பனா? விஜய் ரசிகர்கள் குறித்து பேசிய அஜித் சகோதரர் -
வீரமணி ஒரே போடு.. திருச்சியில் முதலமைச்சர் விஜய் பேசிய அந்த பேச்சால் மொத்த பேருக்கும் முகச்சுளிப்பு? -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம் -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
கோவையில் அருவியாக மாறிய மேம்பாலம் .. மேட்டுப்பாளையம் ஊட்டி செல்லும் வழியில் மாறிய காட்சி -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
அரசியல் மோதலை விடுங்க.. 'கலைஞர்' கருணாநிதி பிறந்தநாளுக்கு முதல்வர் விஜய் போட்ட பதிவு! -
விஜய்க்கு அரசு பாதுகாப்பு மேல நம்பிக்கை இல்லையா? தனி பாதுகாவலரோடு வருவது ஏன்? லாக் செய்த அதிமுக












Click it and Unblock the Notifications