சொம்பை தூக்கி வீசிய மணிமேகலை..1 எழுத்து சேனலுக்கு தாவுகிறாரா? விஜய் டிவி பிரியங்காவுக்கு நிம்மதி போல

Subscribe to Oneindia Tamil

சென்னை: மணிமேகலைக்கு எதிராக விஜய் டிவியின் பிரபலங்கள் ஒவ்வொருவராக விமர்சனங்களை முன்வைத்து வரும்நிலையில், முக்கிய தகவல் ஒன்று சோஷியல் மீடியாவில் பரபரத்து வருகிறது. ஆனால், அதற்குள்ளாகவே, இணையவாசிகள் மணிமேகலைக்கு வாழ்த்து சொல்ல ஆரம்பித்துவிட்டார்கள்.

மணிமேகலை வெளியிட்ட அறிக்கையின் அதிர்வலைகள் இன்னமும் அடங்கவில்லை.. இதையடுத்து, பிரியங்கா மீதான குற்றச்சாட்டை பிரபலங்கள் ஒவ்வொருவராக பகிர்ந்து வந்த நிலையில், தற்போது அது மெல்ல ஓய்ந்துள்ளது.

television manimegalai priyanka

பிரியங்காவை அட்ஜஸ்ட் செய்தால் மட்டுமே அங்கு நிகழ்ச்சி தொகுப்பாளராக இருக்க முடியும் என்ற குற்றச்சாட்டு, விஜய் டிவிக்கே எதிராக திரும்பியிருந்த நிலையில், திடீரென பிரபலங்கள் பலர் பிரியங்காவுக்கு ஆதரவை வழங்கி வருகிறார்கள். அத்துடன் மணிமேகலையை மறைமுகமாக விமர்சித்தும் வருகிறார்கள்.

விமர்சனங்கள்: நாளுக்கு நாள் தன்னை இவர்கள் அனைவரும் மறைமுகமாக விமர்சிக்கவும், "பிரியங்காவின் சொம்பு" என்று குறிப்பிட்டு சமீபத்தில் மணிமேகலை வீடியோ ஒன்றினை வெளியிட்டிருந்தார்.. சொம்புக்கு எல்லாம் என்னடா மரியாதை? என்று கேட்டிருந்த கேள்வியும், அந்த வீடியோவும் சோஷியல் மீடியாவில் வைரலானது.. மணிமேகலையின் இந்த பதிவுக்கும், விஜய் டிவி பிரபலங்கள் தங்கள் எதிர்ப்பை மறைமுகமாக வெளிப்படுத்தி வருகிறார்கள்..

ஆனால், இந்த விவகாரம் கிளம்பியதிலிருந்தே, பிரபல சேனலுக்கு செல்வதற்காகத்தான் மணிமேகலை இந்த குற்றச்சாட்டை பிரியங்கா மீது வீசியிருப்பதாக சிலர் சொல்லி வருகிறார்கள்.

மணிமேகலை:
குறிப்பாக, குக் வித் கோமாளி போலவே, சன் டிவியில் நடத்தப்பட்டு வரும் குக்கிங் நிகழ்ச்சி படுசூப்பராக நடந்து வருவதால், அங்குதான் மணிமேகலையும் செல்லவிருப்பதாக கூறுகிறார்கள். இந்த நிகழ்ச்சியில்தான், ஏற்கனவே வெங்கடேஷ் பட் உள்ளிட்டோர் இருப்பதுடன், மணிமேகலையின் தாய் வீடாகவும் சன் டிவி இருப்பதால், அங்கே பிரதானமாக செல்வார் என்கிறார்கள்.

இதற்கு நடுவில், மணிமேகலை தானாக வெளியேறவில்லை, அவர் விஜய் டிவி நிறுவனத்தாலேயே வெளியேற்றப்பட்டார் என்றும் தகவல்கள் வெளியானது. ஆனால், எப்படி பார்த்தாலும், விஜய் டிவிக்குள் இனி மணிமேகலை செல்ல வாய்ப்பில்லை என்றே தெரியவருகிறது. இப்படிப்பட்ட சூழலில், மற்றொரு தகவல் வெளியாகி வருகிறது.

உண்மையா: அதாவது, ஜீ தமிழ் மணிமேகலை விரைவில் செல்லக்கூடும் என்றும், இதுகுறித்து அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகும் எனவும் தகவல்கள் வருகின்றன.. ஏற்கனவே விஜய் டிவியின் பிரபலங்கள் பலர், ஜீ தமிழில் உள்ளனர்.

ஆனால், இதுநாள்வரை சன் டிவி பக்கம் செல்லுவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், ஜீ தமிழ் சேனலுக்கு மணிமேகலை செல்வதாக கூறப்படுவது பரபரப்பை தந்து வருகிறது. ஏற்கனவே விஜய் டிவியின் நேரடி போட்டி சேனலாக ஜீ தமிழ் கருதப்படுதால், மணிமேகலையும் அந்த சேனலுக்கு செல்ல வாய்ப்புள்ளதாக சொல்லப்படுவது மிகுந்த எதிர்பார்ப்பை உண்டுபண்ணி வருகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+