பிக் பாஸ் 10 போட்டியாளர்கள் யாரெல்லாம் தெரியுமா? லீக்கான லிஸ்ட்.. எதிர்பார்க்காத கண்டஸ்டண்ட்!

Subscribe to Oneindia Tamil

சென்னை: பிக் பாஸ் தமிழ் சீசன் 10 தொடங்குவதற்கு முன்பே போட்டியாளர்கள் குறித்த எதிர்பார்ப்பு எகிற தொடங்கிவிட்டது. சினிமா, சின்னத்திரை, யூடியூப், இன்ஸ்டாகிராம் என பல பக்கங்களில் இருந்தும் ஆட்களை தேடி வருகிறார்கள். இந்த லிஸ்டில் காமன் மேன் நிகழ்ச்சியில் நைட்டி அணிந்து வந்து சர்ச்சையில் சிக்கிய பிரியதர்ஷினி முதல் தேவயானி மகள் வரை பல சுவாரசியமான பெயர்கள் அடிபடுகின்றன.

விஜய் டிவியில் செப்டம்பர் முதல் வாரத்தில் பிக் பாஸ் தமிழ் சீசன் 10 தொடங்கும் என எதிர்பார்க்கப்படும் நிலையில் இந்த முறை பொதுமக்களில் இருந்தும் சிலரை தேர்வு செய்யும் முயற்சியாக பிக் பாஸ் தி காமன்மேன் நிகழ்ச்சி நடத்தப்பட்டு வருகிறது. இதனால் வழக்கமான சினிமா சின்னத்திரை முகங்களுடன், சமூக வலைத்தளங்களில் பிரபலமான சில முகங்களுக்கும் கதவு திறந்திருக்கிறது.

காமன்வென் நிகழ்ச்சியில் நைட்டி அணிந்து வந்து ஏற்கனவே பெரிய அளவில் கவனம் பெற்றவர் பிரியா வர்ஷினி. ஆடிஷனில் நடுவர்களுடன் வாக்குவாதம் செய்து, ரெட் கார்டு வாங்கி வெளியே வந்ததும் பேட்டிகள் என ஒரு சீசனுக்கு தேவையான சர்ச்சை கண்டெண்டை முன்கூட்டியே கொடுத்துவிட்டார். அவர் பிக்பாஸ் 10 நிகழ்ச்சியில் எதிர்பார்க்கப்படும் ஒருவராக மாறி இருக்கிறார்.

Bigg Boss Tamil Bigg Boss vijay tv

அடுத்ததாக லுங்கி பாய் ராஜ் பிரியன்

பெண்களுக்கு நைட்டி என்றால் ஆண்களுக்கு லுங்கி என்று சொல்வது போல லுங்கி வைத்து சோசியல் மீடியாவில் ஒரு ரசிகர்கள் கூட்டத்தை உருவாக்கி வைத்து இருப்பவர் ராஜ்ப்ரியன். லுங்கி கட்டிக்கொண்டு இவர் செய்யும் காமெடி வீடியோக்கள் யூடியூபில் கவனம் பெற்றுள்ள நிலையில் பிக் பாஸ் வீட்டிற்குள் இவரும் சொல்லலாம் என்ற பேச்சு அடிபடுகிறது.

தேவயானி மகள் இனியா

இந்த லிஸ்டில் கொஞ்சம் ஸ்பெஷலான பெயர் நடிகை தேவயானியின் மகள் இனியா ராஜகுமாரன் தான். பிரபல நடிகையின் மகள் என்ற அடையாளத்தை மட்டும் நம்பாமல் ஜீ தமிழ் இசை நிகழ்ச்சியில் பங்கேற்று தனது திறமையை வெளிப்படுத்தியவர் இனியா. தற்போது விஜய் டிவியின் பார்வையும் அந்த பக்கம் திரும்பி இருப்பதாக கூறப்படுகிறது. ஒருவேளை பிக் பாஸ் வீட்டுக்குள் இனியா சென்றால் தேவயானி மகள் என்று அடையாளத்தை தாண்டி அவருடைய தனிப்பட்ட ஆட்டம் எப்படி இருக்க போகிறது என்பதுதான் அவசியம்.

போட்டியாளரின் பாய் ஃபிரண்ட்

இதைவிட இன்னொரு சுவாரஸ்யமான பெயரும் லிஸ்டில் அடிபடுகிறது முன்னாள் பிக் பாஸ் போட்டியாளரின் பாய் பிரண்ட் என்று பிரபலமான பார்கவ் என்பவரிடமும் நிகழ்ச்சி தரப்பு பேசியிருப்பதாக தகவல் வெளியாகியிருக்கிறது. இதுபோல ஏற்கனவே பல சீசன்களில் முன்னாள் போட்டியாளர்களின் மனைவியோ அல்லது கணவர், பாய் ப்ரெண்ட், கேர்ள் ஃபிரண்ட் என்று பலர் வந்திருக்கிறார்கள். அந்த வரிசையில் இப்போது இவரும் வருவதற்கு வாய்ப்பு இருக்கிறது.

நடிகை ஷப்னம்

சின்னத்திரை ரசிகர்களுக்கு நன்கு அறிமுகமான ஷப்னம் தெய்வமகள், மாரி உள்ளிட்ட சில சீரியல்களில் நடித்துள்ளார். ஏற்கனவே போன சீசனிலே அவர் பெயர் அடிபட்டது. ஆனால் அப்போது அவர் சில தவிர்க்க முடியாத காரணங்களால் கலந்து கொள்ளவில்லை என்று கூறப்படுகிறது. அதனால் இந்த சீசனில் இவரும் கலந்து கொள்ள வாய்ப்பு இருக்கிறது என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ஹார்ட் பீட் சீரிஸ் நடிகர்

இது மட்டுமின்றி ஹார்ட் பீட் சீரிஸில் நடித்த ஒருவர் பெயரும் பிக்பாஸ் 10 போட்டியாளர்கள் லிஸ்டில் அடிபட்டு வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. இதனால் இந்த சீசனில் சினிமா நடிகர்கள், சீரியல் நடிகர்கள் மட்டுமல்லாமல் வெப் சீரிஸ் மற்றும் சோசியல் மீடியா பிரபலங்களும் அதிக முக்கியத்துவம் கொடுக்கப்படலாம் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.

பிக் பாஸ் நிகழ்ச்சி குப்பையா?
தற்போது வெளியாகி வரும் பெயர்கள் எல்லாமே நிகழ்ச்சி தரப்புடன் தொடர்புடைய தகவல்களின் அடிப்படையில் எதிர்பார்க்கப்படும் பெயர்கள் மட்டுமே. இறுதியாக ஒப்பந்தம் கையெழுத்தாகி அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும் வரை யாருடைய பெயரையும் உறுதியான போட்டியாளர் பட்டியல் என்று சொல்ல முடியாது. ஆக பிக்பாஸ் வீடு இன்னும் திறக்கவே இல்லை ஆனால் வெளியே போட்டியாளர்கள் லிஸ்ட் வைத்து மக்கள் ஏற்கனவே ஒரு பிக் பாஸ் வீட்டை கட்டி முடித்து விட்டார்கள். ஆனாலும் இந்த சீசன் கொஞ்சம் ஸ்பெஷலாக இருக்கும் என்று கூறப்படுவதால் என்ன நடக்கப்போகிறது என்று பொறுத்திருந்து பார்ப்போம்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+