ஆஹா கல்யாணம் பிரபா யார் தெரியுமா? நடிகை ஆயிஷாவிற்கும் இவருக்கும் இப்படி ஒரு சம்பந்தமா?
சென்னை: விஜய் டிவியில் ஆஹா கல்யாணம் எனும் புது சீரியல் ஒளிபரப்பாகி வருகிறது.
இந்த சீரியலில் பிரபா கேரக்டரில் நடிகை பவ்யஸ்ரீ நடித்து வருகிறார்.
நடிகை பவ்யஸ்ரீ பற்றிய பல தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.
விஜய் டிவியில் சமீபத்தில் ஒளிபரப்பாகி சூப்பர் ஹிட் ஆக ஓடிக்கொண்டிருக்கும் சீரியல்களில் ஒன்றுதான் ஆஹா கல்யாணம். இந்த சீரியலில் 3 பெண் பிள்ளைகளை பெற்ற தாய் தனது பிள்ளைகளை பெரிய கோடீஸ்வரர் வீட்டில் திருமணம் செய்து வைக்க வேண்டும் என்று எவ்வாறு எல்லாம் போராடுகிறார் என்பதையே இந்த சீரியல் எடுத்துக்காட்டுகிறது.

இந்த சீரியலில் பல புது முகங்கள் நடித்திருந்தாலும் ஒரு சில சின்னத்திரை பிரபலங்கள் இதில் நடிக்கிறார்கள். அதில் நடிகை மௌனிகாவும் ஒருவர். அவர்தான் மூன்று பெண் குழந்தைகளின் அம்மாவாக நடித்து வருகிறார். பல வருடங்களுக்கு பிறகு இந்த சீரியலில் மௌனிகா நடித்து வருகிறார். இந்த நிலையில் இந்த சீரியலில் பிரபா கேரக்டரில் பாப் கட்டிங்கில் வரும் கதாநாயகி பற்றி பல தகவல்களை இதில் பார்க்கலாம்.
பிரபா என்று இந்த சீரியலில் அழைக்கப்படும் நடிகையின் பெயர் பவ்யஸ்ரீதானாம், இவர் 1999 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 31ஆம் தேதி பிறந்திருக்கிறார். இப்போதைக்கு இவருடைய வயது 24 ஆக இருக்கிறது. இவர் கல்லூரி படிப்பை படித்துக் கொண்டிருக்கும் போதே மாடலிங்கிலும் கலக்கிக் கொண்டிருக்கிறார். பிறகு மாடலிங்கில் முழு நேரமாக தன்னுடைய கவனத்தை செலுத்தி வந்திருக்கிறார். அப்போதுதான் இவருக்கு சின்னத்திரையில் வாய்ப்பு கிடைத்திருக்கிறது.
முதல் முதலாக ஜீ தமிழில் ஒளிபரப்பான திருமதி ஹிட்லர் எனும் சீரியல் மூலம் சின்னத்திரையில் அறிமுகம் ஆகி இருக்கிறார். அதைத்தொடர்ந்து செம்பருத்தி சீரியலிலும் நடித்திருக்கிறார். அது மட்டுமல்லாமல் விஜய் டிவியில் ஒளிபரப்பான சிப்பிக்குள் முத்து என்னும் சீரியலில் கதாநாயகி லாவண்யாவின் தங்கச்சியாக இந்த சீரியலில் இவர் நடித்திருப்பார்.

அதுமட்டுமல்லாமல் தற்போது விஜய் டிவியில் சூப்பர் ஹிட்டாக ஒளிபரப்பாகி வரும் பாண்டியன் ஸ்டோர் சீரியலில் மீனாவின் தங்கச்சியாகவும் இவர் இப்போது நடித்துக் கொண்டிருக்கிறார். ஏற்கனவே இந்த கேரக்டரில் வேறொரு நடிகை நடித்துக் கொண்டிருந்த நிலையில் இவர் தற்போது அந்த சீரியலில் நடித்து வருகிறார். சமீபத்தில் தான் அந்த சீரியலில் இவருடைய திருமணம் நடந்து முடிந்தது. திருமணத்தில் தான் பெரிய ட்விஸ்ட் வைத்து சீரியல் டிஆர்பி தாறுமாறாக உயர்ந்தது.
தற்போது ஆஹா கல்யாணம் சீரியலில் இவர் நடித்து வரும் நிலையில் இந்த சீரியலில் இவருடைய கெட்டப் ஏற்கனவே ஜீ தமிழில் ஒளிபரப்பான சத்யா சீரியலில் சத்யா போலவே இருக்கிறது என்று பலர் கலாய்த்து கொண்டிருந்தாலும், இவருடைய நடிப்புக்காகவே இவருக்கு அதிகமான ரசிகர்களும் கிடைத்துக் கொண்டிருக்கிறார். இவருடைய சமூக வலைதள பக்கங்களில் இவருக்கு ஆஹா கல்யாணம் சீரியலுக்கு பிறகு அதிகமான ரசிகர்கள் வந்த வண்ணமாக இருக்கின்றனர்.
-
Blast Movie Review: ப்ளாஸ்ட் படம் எப்படி இருக்கு? கதை இதுதான்! அர்ஜுனுக்கு கம்பேக்? முழு விமர்சனம் இதோ! -
ஒருபுறம் அஜித் அம்மா மறைவு... மறுபுறம் அனாதையாக விடைபெற்ற சத்யேந்திரா! சமூகத்தின் இரட்டை முகமா? -
பிரச்சனை இருந்தது.. விட்டு கொடுக்க மனசு இல்ல.. ஆனாலும், கருப்பு படம் குறித்து நடிகர் இந்திரன்ஸ் உருக்கம் -
அஜித்துக்கு அடுத்த பேரிழப்பு.. தந்தையை தொடர்ந்து தாயாரும் மறைவு.. சோகத்தில் பிரபலங்கள் வருத்தம் -
முத்துவின் விபரீத முடிவு.. சிந்தாமணியின் சூழ்ச்சியை முறியடிக்க முடியுமா? சிறகடிக்க ஆசையில் பரபரப்பு -
இந்த வார இறுதியில் ஓடிடியில் என்ன பார்க்கலாம்? ‘வாரண்ட்’ சீரிஸ் விமர்சனம்! விலங்கு கொடுத்த அதே தரமா? -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக












Click it and Unblock the Notifications