Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

எதிர்நீச்சல் அருண் யார் தெரியுமா? நடிகை அசினோடு உள்ள உறவு? இத்தனை திரைப்படங்களில் நடித்திருக்கிறாரா?

Subscribe to Oneindia Tamil

சென்னை: எதிர்நீச்சல் சீரியலில் அருண் கேரக்டரில் நடிகர் சாணக்கியா நடித்து வருகிறார். அவர் எதிர்நீச்சல் சீரியலில் நடிக்க வருவதற்கு முன்பு பல திரைப்படங்களிலும் சீரியல்களிலும் நடித்து பிரபலம் அடைந்திருக்கிறார்.

ஆனால் குழந்தை நட்சத்திரமாக நடித்திருந்த சாணக்கியனை பலருக்கும் தெரிந்திருக்க வாய்ப்பு இல்லை.அதிலும் குறிப்பாக நடிகை அசினுக்கு மகனாகவும் சூர்யாவின் சின்ன வயது குழந்தையாகவும் கூட இவர் நடித்திருக்கிறார்.

Do you know who is Ethirneechal serial Arun? Relationship with actress Asin?

அதுமட்டுமல்லாமல் எதிர்நீச்சல் சீரியலில் நடிப்பதற்காக சாணக்கியாவிற்கு எப்படி வாய்ப்பு கிடைத்தது என்றும் அவர் இதற்கு முன்பு எத்தனை திரைப்படங்கள் சீரியல்களில் நடித்திருக்கிறார் என்பது போன்ற தகவல்களை விரிவாக பார்க்கலாம்.

Do you know who is Ethirneechal serial Arun? Relationship with actress Asin?

சன் டிவியில் யாரும் எதிர்பார்க்காத அளவிற்கு டிஆர்பியில் கடந்த வாரம் முன்னணி இடத்தை பிடித்த எதிர்நீச்சல் சீரியல் பற்றி தான் சின்னத்திரை வட்டாரத்தில் அதிகமாக பேசப்பட்டு வருகிறது. அதற்கு காரணம் அந்த சீரியலில் ஆதிரை திருமணம் டிராக் தான். ஆரம்பத்தில் இருந்தே ஆதிரை அருணை திருமணம் செய்ய போகிறாரா? அல்லது கரிகாலனை திருமணம் செய்ய போகிறாரா? என்ற எதிர்பார்ப்பு இருந்தது.

Do you know who is Ethirneechal serial Arun? Relationship with actress Asin?

ஆனால் கடைசி நேரத்தில் சற்றும் எதிர்பார்க்காத வகையில் கரிகாலன் ஆதிரைக்கு தாலி கட்டி விட்டார். ஜனனி எத்தனையோ பிளான்களை போட்டு வைத்திருந்தாலும் அருணால் கடைசி நேரத்திற்கு அங்கே வர முடியவில்லை. அதே நேரத்தில் அருணுக்கு ஆக்சிடென்ட் நடந்து அவர் ஹாஸ்பிடலில் ஆபத்தான நிலையில் தான் இருக்கிறார். இந்த நிலையில் அருணுக்கு ஆக்சிடெண்ட் செய்தது யார் என்பது பற்றி இனி ஜனனி தான் கண்டுபிடிக்க இருக்கிறார்.

Do you know who is Ethirneechal serial Arun? Relationship with actress Asin?

இந்த நிலையில் எதிர்நீச்சல் சீரியலில் நடித்துக் கொண்டிருக்கும் அருண் யார் என்பது பற்றி விரிவாக பார்க்கலாம். நடிகர் சாணக்கியா எதிர்நீச்சல் சீரியலில் நடிப்பதற்கு முன்பு ஜீ தமிழில் "கன்னத்தில் முத்தமிட்டாய்" என்ற சீரியலில் நடித்திருக்கிறார். அது மட்டும் அல்லாமல் பல திரைப்படங்களிலும் சீரியல்களிலும் குழந்தை நட்சத்திரமாக நடித்திருக்கிறார்.

முதல் முதலாக சன் டிவியில் ஒளிபரப்பான மெட்டி ஒலி சீரியலில் குழந்தை நட்சத்திரமாக அதுவும் கோபியின் மகனாக இவர் தான் நடித்திருப்பார். அதுபோல வெள்ளி திரையில் நடிகை அசினோடு "கஜினி" திரைப்படத்தில் நடித்திருக்கிறார். அசின் ஒரு விளம்பரத்தில் நடிப்பது போன்று சூட்டிங் எடுக்கப்படுமில்ல அதில் நடித்த குழந்தை இவர்தான்.

அதுமட்டுமல்லாமல் எஸ்ஜே சூர்யா நடிப்பில் பெரிய அளவில் ஹிட்டான "வியாபாரி" திரைப்படத்தில் இடம் பெற்ற "ஆசைப்பட்ட எல்லாத்தையும் காசிருந்தா வாங்கலாம்" எனும் பாடலில் டான்ஸ் ஆடும் குட்டி பையன் இவர்தானாம். அதைத்தொடர்ந்து நடிகர் அஜித்தோடு "பரமசிவன்" திரைப்படத்திலும் இவர் நடித்திருக்கிறார்.

Do you know who is Ethirneechal serial Arun? Relationship with actress Asin?

அதுபோல "அவள் பெயர் தமிழரசி" என்ற திரைப்படத்தில் நடிகர் ஜெய்யின் குழந்தை பருவ காட்சிகளில் இவர்தான் நடித்திருக்கிறார். இதுபோலவே நடிகர் சூர்யா நடிப்பில் பெரிய அளவில் பெயர் வாங்கிய "ஆதவன்" திரைப்படத்தில் குழந்தை பருவ சூர்யாவாக இவர் தான் நடித்திருக்கிறார். அதற்குப் பிறகு தான் சூர்யா விஎப்எஸ் எல்லம் பயன்படுத்தி சூர்யாவே அந்த கேரக்டரில் நடித்து இருப்பார்.

இந்த அளவிற்கு பல சீரியல்களிலும் திரைப்படங்களிலும் நடித்து வந்த அருண் எதிர்நீச்சல் சீரியலில் முக்கியமான கேரக்டரில் நடித்து வரும் நிலையில் இனி வரும் காலத்தில் அவருக்கு அதிகமான முக்கியத்துவம் இருக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. காரணம் இனி கரிகாலனை ஆதிரை வேண்டாம் என்று தூக்கி எறிந்து விட்டு அருணை கல்யாணம் செய்யப் போகிறாரா? அல்லது கரிகாலனோடு சேர்ந்து வாழ போகிறாரா? என்பது எதிர்பார்ப்பாக இருக்கிறது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+