பிக்பாஸ் தமிழ் சீசன் 6 : இந்த வாரம் வெளியேறியது இவரா? இதெல்லாம் அநியாயம்! கொதிக்கும் நெட்டிசன்கள்!
சென்னை: பிக்பாஸ் தமிழ் சீசன் 6 நிகழ்ச்சியிலிருந்து வெளியேற போகும் அந்த நபர் யார் என்பது குறித்த தகவல் வெளியாகியுள்ளது.
பிக்பாஸ் தமிழ் சீசன் 6 நிகழ்ச்சி கடந்த அக்டோபர் மாதம் 9 ஆம் தேதி தொடங்கியது. இந்த நிகழ்ச்சியில் 22 போட்டியாளர்கள் அறிமுகப்படுத்தப்பட்டனர். அவர்களில் இருவர் பொதுமக்களில் இருந்து தேர்வு செய்யப்பட்டனர்.
மொத்தம் 105 நாட்களில் 34 நாட்கள் சென்றுவிட்டன. இந்த நிகழ்ச்சியில் வெற்றியாளராக வருவார் என எதிர்பார்க்கப்பட்ட ஜிபி முத்து, திடீரென அவரது மகனுக்காக நிகழ்ச்சியிலிருந்து வெளியேறினார்.

சாந்தி மாஸ்டர்
13 ஆவது நாளில் ஜிபி முத்து வெளியேறினார். அதே வாரத்தில் சாந்தி மாஸ்டர் நிகழ்ச்சியை விட்டு எவிக்ட் ஆகி சென்றார். அதற்கு அடுத்த வாரம் அசல் கோளாறு, பின்னர் ஷெரீனா ஆகியோரும் நிகழ்ச்சியிலிருந்து வெளியேற்றப்பட்டனர். வாரந்தோறும் எவிக்ஷன் உள்ள நிலையில் இந்த வாரம் யார் வெளியேற்றப்படுவார் என்ற எதிர்பார்ப்பு எழுந்தது.

விஜே மகேஸ்வரி
அதன்படி இன்றைய தினம் எலிமினேஷனில் உள்ள விஜே மகேஸ்வரி வெளியேறுவதாக தகவல்கள் கிடைத்துள்ளன. மகேஸ்வரி சாணக்கியன்- இவர் நடிகையும் ஆவார். இவர் புது கவிதை, சென்னை 28, ரைட்டர், விக்ரம் உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். இவரது கணவர் சாணக்கியன், இவரும் இவரது குடும்பத்தினரும் உடல் ரீதியாகவும் மன ரீதியாகவும் தன்னை கொடுமை செய்ததாக மகேஸ்வரி தெரிவித்திருந்தார்.

குடும்ப பெயர்
அது போல் குடும்ப பெயர் கெட்டுவிடும் என்பதால் என்னை ஆங்கரிங் செய்யவோ நடிக்கவோ கூடாது என கட்டளை இட்டதாகவும் மகேஸ்வரி தெரிவித்திருந்தார். பல்வேறு துன்புறுத்தல்களுக்கு பிறகுதான் சாணக்கியனை விவாகரத்த செய்யும் முடிவுக்கும் வந்ததாக தெரிவித்துள்ளார். இதன் பின்னர் தனது மகனை வளர்ப்பதில் தீவிரம் காட்ட முடிவு செய்துள்ளதாகவும் மகேஸ்வரி தெரிவித்திருந்தார்.

நெட்டிசன்கள் கேள்வி
விஜே மகேஸ்வரி பிக்பாஸ் நிகழ்ச்சியில் வாய் வந்தபடி பேசுவதாக நெட்டிசன்கள் கருத்து தெரிவித்து வருகிறார்கள். எனினும் ராம், ஏடிகே உள்ளிட்டோரால் இந்த விளையாட்டில் எந்த பயனும் இல்லாத நிலையில் விஜே மகேஸ்வரியை வெளியேற்றியதை ஏற்க முடியாது என நெட்டிசன்கள் தெரிவித்துள்ளனர். அவர் பிக்பாஸில் நன்றாகத்தான் விளையாடி வருகிறார். அப்படியிருக்கும் போது அவரை வெளியேற்றியது எந்த வகையில் நியாயம் என நெட்டிசன்கள் தங்கள் தரப்பு கருத்தை தெரிவித்து வருகிறார்கள்.
-
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது? -
இடைத்தேர்தலில் பொது வேட்பாளர்களை நிறுத்தி வெற்றி பெறச் செய்வோம்.. விஜய்க்கு அன்புமணி எச்சரிக்கை -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
எடப்பாடி வீட்டிற்கு வந்த எஸ்பி வேலுமணி.. சிவி சண்முகம் மட்டும் மிஸ்ஸிங்.. தனித்துவிடப்படுகிறாரா?












Click it and Unblock the Notifications