சிறகடிக்க ஆசை விஜயாவின் மகள் யாருன்னு தெரியுமா? அம்மாவை போலவே இருக்காங்களே! லீக்கான புகைப்படம்
சென்னை: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சிறகடிக்க ஆசை சீரியல் ரசிகர்களின் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று இருக்கிறது. அதனாலே இந்த சீரியலில் நடிக்கும் நடிகர்கள் ரசிகர்களின் மத்தியில் பிரபலமடைந்திருக்கின்றனர். அந்த வகையில் இந்த சீரியலில் விஜயா கேரக்டரில் நடித்து வரும் நடிகை அணிலா ஸ்ரீ குமாரும் ரசிகர்களின் மத்தியில் பிரபலமாக இருக்கிறார்.
இந்த நிலையில் அணிலா தன்னுடைய சமூக வலைதள பக்கத்தில் தன்னுடைய குடும்ப புகைப்படங்கள் சிலவற்றை பதிவிட்டு இருக்கிறார். அதில் அணிலாவை போலவே இருக்கும் அவருடைய மகளை பார்த்து பல ரசிகர்கள் பாராட்டி வருகிறார்கள்.

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சிறகடிக்க ஆசை சீரியல் விறுவிறுப்பாக கதை அம்சத்தோடு ஒளிபரப்பாகி வருகையில் இந்த சீரியல் டிஆர்பியில் முதலிடத்தில் இருந்து வருகிறது. தொடர்ச்சியாக இந்த சீரியல் விஜய் டிவியில் முதலிடத்தில் பிடித்துக் கொண்டிருக்கும் நிலையில் இந்த சீரியலில் அடுத்து என்ன நடக்கப்போகிறது என்ற எதிர்பார்ப்பும் அதிகமாக இருக்கிறது.
காரணம் சத்யாவை முத்து அடித்து விட்டார் என்று மீனாவும், மீனா குடும்பத்தினரும் கோபமாக இருக்கின்றனர். ஆனால் எதற்காக அடித்தார் என்ற உண்மை யாருக்கும் தெரியாமல் இருக்கிறது. அதே நேரத்தில் முத்து காரை விற்று விட்டு ஆட்டோ ஓட்டிக்கொண்டிருக்கிறார். இதுவும் குடும்பத்திற்கு தெரியாமல் இருக்கிறது. முத்து பற்றிய உண்மைகள் இனி வெளியே தெரியும்போது விஜயா மீனாவை வீட்டில் வைப்பாரா இல்லையா என்பது கேள்விக்குறி தான்.
காரணம் மீனாவை எப்போது வீட்டை விட்டு விரட்டலாம் என்று விஜயா பிளான் போட்டுக் கொண்டிருக்கிறார். முத்துவும் மீனாவும் வீட்டை விட்டு வெளியே போய்விட்டால் ஸ்ருதி மற்றும் ரோகிணி இருவரும் தன்னோடு இருப்பார்கள் என்று விஜய் பிளான் போட்டுக் கொண்டிருக்கிறார். இதனாலையே ரசிகர்கள் விஜயாவை பலர் திட்டிக் கொண்டிருக்கின்றனர். அதோடு பொங்கல் பங்ஷன் கிராமத்தில் கொண்டாடப்படும் போது முத்து தன்னை அண்ணாமலையும் விஜயாவும் கிராமத்தில் கொண்டு விட்டதை சொல்லி ரொம்பவே ஃபீல் பண்ணி இருந்தார்.
இதனால எதற்காக விஜயா முத்து மீது இவ்வளவு கோபப்படுகிறார் என்ற உண்மையை தெரிந்து கொள்வதற்காகவும் ரசிகர்கள் ஆர்வத்தோடு இருக்கின்றனர். அதே நேரத்தில் இந்த சீரியலில் விஜய் ஆக நடிக்கும் அணிலா தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தன்னுடைய மகள் மற்றும் குடும்பத்தோடு எடுத்த புகைப்படத்தை வெளியிட்டு இருக்கிறார்.

அதே நேரத்தில் அணிலா ஸ்ரீகுமார் கேரளாவில் சேர்ந்தவராக இருக்கையில் விஜய் டிவியில் சின்னத்தம்பி, பாவம் கணேசன் என ஒரு சில சீரியலில் நடித்திருக்கிறார். இந்த நிலையில் கேரளாவில் ஆற்றுக்கால் பொங்கல் கொண்டாடப்பட்டது. அதில் எடுத்த தன்னுடைய நிஜ குடும்ப புகைப்படத்தை அணிலா ஸ்ரீ பகிர்ந்து இருக்கையில் அது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.
-
அஜித் மாதிரி யாராலும் இருக்க முடியாது.. சூட்டிங் ஸ்பாட்டில் நடந்த சம்பவம்.. ரகசியங்களை உடைத்த பிரபலம் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா?












Click it and Unblock the Notifications