சித்தாள் மகள் நடிகையான கதை.. விமர்சனத்தை முறியடித்து உயரத்தை தொட்ட சரண்யா ரவிச்சந்திரன்.. குட்நியூஸ்

Subscribe to Oneindia Tamil

சென்னை: இளம் நடிகை சரண்யா ரவிச்சந்திரனுக்கு வாழ்த்துக்கள் குவிந்து வருகின்றன.. தன்னுடைய திருமணத்தை பகிரங்கமாக அறிவித்துள்ளதுடன், திருமண போட்டோக்களையும் சோஷியல் மீடியாவில் பகிர்ந்துள்ளார் சரண்யா.

பொதுவாக, நாம் உதிர்க்கும் வார்த்தைகளும், உயர்வான எண்ணங்களும்தான், நம்மை சுற்றிலும் நேர்மறை அதிர்வுகள் உள்ளதை உணர வைக்கின்றன.. அந்தவகையில், "பாசிடிவ் எனர்ஜி"யை தன்னை சுற்றிலும் மட்டுமல்ல, பிறருக்கும் பரவ செய்பவர் நடிகை சரண்யா ரவிச்சந்திரன்.

television saranya

திருச்சிக்கு பக்கத்தில் கே.கள்ளிக்குடி என்கிற கிராமத்தை சேர்ந்தவர்.. அப்பா விவசாயி, அம்மா சித்தாள் வேலை பார்க்கிறார்.. பி.எஸ்ஸி மைக்ரோபயாலஜி படித்து முடித்தாலும், படிப்பின்மீது தீராத காதல் கொண்ட சரண்யாவுக்கு, தொடர்ந்து படிக்க முடியாத சூழல் ஏற்பட்டுவிட்டது. அப்பாவின் விபத்து, தாலி அடகுவைத்து குடும்பத்தை காப்பாற்றிய தாய், 2 தம்பிகள் படிப்பு என வறுமையின் சூழலுக்குள் திணறிப்போனது குடும்பம்.

கம்பெனிகள்: சென்னையில் தெருத்தெருவாக அலைந்து பொருட்களை விற்று வேலை பார்த்துள்ளார்.. 500 ரூபாய் அதிகம் கிடைக்கும் என்றால், ஒரு கம்பெனியிலிருந்து இன்னொரு கம்பெனிக்கு மாறிவிடுவாராம்.

இப்படிப்பட்ட சூழலில்தான், குடும்ப சூழல், நடிப்பின் மீதான காதல் காரணமாக, சினிமாவுக்குள் நுழைந்தார் சரண்யா. நம்முடைய நாட்டில் கிராமத்து பெண்கள் சினிமாவில் நடிப்பது என்பது, மிகப்பெரிய கனவாக இருக்கும் நிலையில், அதைதான் முதலில் உடைத்துள்ளார் சரண்யா.. மூக்குத்தி, பூ, செருப்புகளை பார்த்து கிண்டல் செய்தவர்கள் மத்தியிலேயே, தனக்கான சினிமா வாய்ப்புகளை தேட துவங்கினார் சரண்யா.

கிராமத்து பேச்சு: "வயசுக்கு வந்த பொண்ண ஏன் சினிமாவுக்கெல்லாம் விடுறீங்க?" என்ற தன்னுடைய சொந்தங்களின் எதிர்ப்புகளையும், நல்ல படிப்பு படிச்சிட்டு ஏன் இந்த துறைக்கு வந்தீங்க? என்று சொந்த துறையினரின் பேச்சுக்களையும் சமாளித்து கொண்டே, இன்று 50-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்து முடித்துவிட்டார் சரண்யா.

வல்லமை தாராயோ என்ற சீரியல்தான், சரண்யா ரவிச்சந்திரனை தமிழக மக்களின் கவனத்தை ஈர்த்தது.. நம்முடைய பக்கத்து வீட்டுப் பெண் போலவே இருப்பது சரண்யாவுக்குரிய பிளஸ் பாயிண்ட்டாகும்.. சீரியல், ஷார்ட் பிலிம், சினிமா என படிப்படியாக முன்னேறி வருகிறார் சரண்யா.. சமீபத்தில், "பைரி" என்ற படத்தின் மூலமாக ஏராளமான ரசிகர்களின் ஆதரவை பெற்றுவிட்டார்..

பெண்கள்: ஒரு பேட்டியில் சொல்கிறார் சரண்யா, "மேலதிக படிப்பு + வாழ்க்கையையும் பார்த்து கொண்டு வீட்டிற்கு பணம் அனுப்ப வேண்டும் என்று தனக்குள் ஒரு கோட்பாட்டை வைத்திருப்பர் சரண்யா.. அதுமட்டுமல்ல, பெண்கள் தங்களுக்கிருக்கும் தடைகளை, விமர்சனங்களை உடைத்து, தங்களுக்கு பிடித்த விஷயங்களையும் செய்யும் அளவுக்கு மேலே வரணும்" என்கிறார்.

வாழ்த்துக்கள்: கடந்த வாரம் சரண்யாவுக்கு திருமணம் நடந்துள்ளது.. பரத் என்பவரை திருமணம் செய்துள்ளார்.. இந்த திருமணத்தை தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் நேற்று அறிவித்திருக்கிறார் சரண்யா..

இந்த திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் ஏராளமான பிரபலங்கள் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தியிருக்கிறார்கள்.. இந்த போட்டோக்கள்தான் இணையத்தில் வைரலாகி வருகிறது. அதிலும் மணமகன் தாலி கட்டும்போது சரண்யா ரொம்பவே எமோஷனல் ஆகிவிட்டார்.. அவரது கண்ணிலிருந்து கண்ணீர் தாரை தாரையாக கண்ணீர் கொட்டுவது, வீடியோக்களில் பதிவாகியிருக்கிறது.

சினிமா துறைக்குள் கனவுகளை சுமந்துகிட்டு வர்றவங்களுக்கு, முன்னுதாரணமாக இருக்க வேண்டும் என்ற லட்சியத்துடன் இருக்கும் சரண்யா தம்பதிக்கு நம்முடைய திருமண வாழ்த்துக்களையும் தெரிவித்து கொள்வோம்..!!!

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+