Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

டிராகன், தனுஷின் நிலவுக்கு என் மேல் என்னடி கோபம் படங்களில் ஹீரோயின்கள் மது குடிக்கும் சீன்கள் ஏன்?

Subscribe to Oneindia Tamil

நீண்ட நாட்களாக, தமிழ் திரைப்படங்களில் மதுவுடனான தொடர்பு பெரும்பாலும் கதாபாத்திரத்தின் தன்மைகளை வெளிப்படுத்த ஒரு கருவியாக பயன்படுத்தப்பட்டு வந்துள்ளது. ஆனால் சமீபகாலமாக, குறிப்பாக நாயகிகள் மது அருந்துவதை இயல்பாகவே நடக்கும் விதமாக கதைகளை உருவாக்கி வருகின்றனர். பெண்கள் குடிப்பது தவறில்லை என்பதற்காகவே இவ்வாறு காட்சிகளைச் செறிவூட்டுகிறார்களா? அல்லது இது ஒரு வியாபார நுணுக்கமா?

மது + நவீன வாழ்க்கை - இயக்குநர்களின் பார்வை

இப்போது திரையுலகம் நகர்ப்புற கலாச்சாரத்தை முன்வைக்க அதிக ஆர்வம் காட்டுகிறது. பெரும்பாலான திரைப்படங்கள் மெட்ரோ நகரங்களை மையமாகக் கொண்டு தயாரிக்கப்படுகின்றன. இயல்பாகவே, நகரங்களின் சமூக வாழ்க்கையில் கிளப், பார்கள், இரவு வாழ்க்கை போன்றவை முக்கியமான இடம் பெறுகின்றன. இதனால், 'நவீன பெண்' என ப்ரெஸென்ட் செய்யும் முயற்சியில், இயக்குநர்கள் நாயகிகளை மது அருந்தும் விதமாக காட்சிகளை உருவாக்குகிறார்கள்.

television dragon neek

ஒரு பெண் தனக்காக வாழ விரும்பினால், அவள் பாரில் போய் குடிக்க வேண்டும் என்ற அர்த்தம் திரைத்துறையில் உருவாகி வருகிறது.

காதல் தோல்வி, வேலை அழுத்தம் போன்ற விஷயங்களை சமாளிக்க பெண்கள் மதுவில் தம்மை மூழ்கடிக்க வேண்டும் என்ற தவறான கருத்து திரையில் அதிகமாக இடம் பெறுகிறது.

பெண்கள் இப்போது 'சுதந்திரமானவர்கள்' என்பதைக் காட்ட இந்த மாதிரி காட்சிகள் எழுதப்படுகின்றன. இது உண்மையான சுதந்திரமா? இல்லையெனில், பெண்களை தவறான பாதைக்கு அழைக்கும் ஒரு வியாபார யுக்தியா?

"முன்பு நாயகன் குடித்தால் வில்லன், இப்போது நாயகி குடித்தால் ஹீரோயின்" என்ற நிலையை நம் திரை உலகம் காண்கிறது. இது உண்மையில் அவர்களுக்கான சுதந்திரத்தின் அடையாளமா?

வியாபார நோக்கமா, சமூக மாறுதலா?

இந்த மாதிரி காட்சிகள் அதிகம் இடம் பெறுவதற்கான முக்கிய காரணம், திரைப்பார்ப்பவர்களின் நவீன மென்டாலிட்டி என்று கூறலாம். ஆனால், இது ஒரு பெரிய வியாபார நுணுக்கம் எனவும் கூறலாம்.

மது நிறுவனங்களின் மறைமுக விளம்பரங்கள். கிளப் கலாச்சாரம்.

நகர்ப்புற வாழ்க்கையை முன்வைக்கும் முயற்சி

இதெல்லாம் நேரடியாக திரைப்படங்களின் சூழலுக்கு இணைக்கப்படுகிறது. ஒரு கதாநாயகி பாரில் போய் குடிப்பது என்றால், அது 'ஸ்டைலாக' மாறிவிடுகிறது. அது ஒரு புது "ட்ரெண்ட்" ஆகி விடுகிறது. பல்வேறு நிறுவனங்களும், விளம்பரத் துறையும் இதனை ஊக்குவிக்கின்றன.

இது திரையுலகின் வணிக நோக்கத்தை வெளிப்படுத்துகிறது. ஒரு பக்கம், குடும்பம், மதிப்புகள், கலாச்சாரம் என்று பேசும் தமிழ் சினிமா, இன்னொரு பக்கம் இந்த மாதிரி "போதை கலாச்சாரம்" வளர்ச்சியடைய உதவுகிறது.

இவை அனைத்தும் சேர்ந்து, தமிழ் திரை உலகில் பெண்கள் குடிப்பதை இயல்பாக்கும் ஒரு புது கலாச்சாரத்தை உருவாக்குகின்றன.

நாம் என்ன செய்ய வேண்டும்?

பெண்கள் குடிக்கக் கூடாது என்று கூறுவது ஒரு புறக்கணிப்பு அல்ல, அவர்கள் உண்மையான சுதந்திரம் அடைய வேண்டும் என்பதற்காகவே இங்கு விவாதிக்கப்படுகிறது. ஒருவரின் உடல் ஆரோக்கியம், குடும்பம், சமூகத்திற்கான பொறுப்பு ஆகியவை முன்னிலையிலேயே சிந்திக்க வேண்டும். திரைத்துறையினரும், பிரபலங்களும், இளைஞர்களும் சமூகத்தில் நல்லதொரு தாக்கத்தை ஏற்படுத்த முயல வேண்டும்.

திரைப்படங்கள் ஒரு கலாச்சார அங்கமாகவே இருந்து வர வேண்டும், அதனால் வரும் எதிர்ப்பலன்களை கவனமாக அணுக வேண்டியது அவசியம்.

-குரு கிருஷ்ணன்

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+