நடிகர் வினீத் ஞாபகம் இருக்கா? அவருடைய மனைவி இந்த பிரபலம் தானா? வெளியான குடும்ப புகைப்படங்கள்

Subscribe to Oneindia Tamil

சென்னை: 90ஸ் காலகட்டத்தில் பிரபலமான பல திரைப்படங்களில் நடித்த நடிகர் வினீத் குடும்ப புகைப்படங்கள் இணையத்தில் அதிகமாக பகிரப்பட்டு வருகிறது.

சமீப காலமாக வினீத் அதிகமான திரைப்படங்களில் நடிக்காமல் இருக்கும் நிலையில் அவர் பரதநாட்டியம் ஆடும் வீடியோக்களை தன்னுடைய சமூக வலைதள பக்கங்களில் பகிர்ந்து இருக்கிறார்.

 Do you remember actor Vineeth? Is his wife this celebrity

அதே நேரத்தில் வினீத் மற்றும் அவருடைய குடும்பத்தை பற்றி பல தகவல்கள் வெளியாகி இருக்கிறது. அது குறித்து விரிவாக பார்க்கலாம்.

நடிகர் வினீத் 90களில் காலகட்டத்தில் முன்னணி நடிகராக வலம் வந்த நிலையில் இப்போது அதிகமான திரைப்படங்களில் நடிக்கவில்லை. ஆனாலும் அவர் பல ரசிகர்களின் மனதில் தனக்கான அடையாளத்தை ஏற்படுத்தி இருக்கிறார். அவர் நடித்த திரைப்படங்களில் உள்ள பாடல்களைப் பார்க்கும்போது கூட அதிகமான ரசிகர்கள் இவர் ஏன் இப்போது சினிமாவில் அதிகமாக காணவில்லையே என்று கேள்வி எழுப்பி வருகின்றனர்.

 Do you remember actor Vineeth? Is his wife this celebrity

நடிகர் வினீத்தை பலருக்கும் நடிகராக மட்டும்தான் தெரிந்திருக்கும். ஆனால் இவர் ஒரு பரதநாட்டிய நடன கலைஞராகவும் இருக்கிறார். அதோடு டப்பிங் ஆர்டிஸ்ட் ஆகவும், நடன இயக்குனராகவும் இருக்கிறார். அதுவும் தமிழில் மட்டுமல்லாமல் மலையாளம், தெலுங்கு போன்ற பல மொழி திரைப்படங்களிலும் இவர் நடித்திருக்கிறார். அதிலும் இரண்டு கேரள மாநில திரைப்பட விருதுகளையும், தமிழக அரசின் கலைமாமணி விருதுகளையும் இவர் பெற்றிருக்கிறார்.

அதுபோல வினீத் முதல்முறையாக ஆவாரம் பூ என்ற திரைப்படத்தின் மூலமாக தான் தமிழில் அறிமுகமாகி இருந்தார். முதல் திரைப்படத்திலேயே இவருக்கு தமிழ் நாட்டின் திரைப்பட ரசிகர் சங்கத்தின் சிறந்த புதுமுகம் விருது வழங்கப்பட்டது. அதைத் தொடர்ந்து ஜாதிமல்லி, காதல் தேசம், சிம்ம ராசி, சுயம்வரம், வேதம், பிரியமான தோழி, உளியின் ஓசை என பல திரைப்படங்களில் தொடர்ச்சியாக நடித்துக் கொண்டே இருந்தார்.

 Do you remember actor Vineeth? Is his wife this celebrity

அந்த நேரத்தில்தான் திடீரென்று இவர் சில வருடங்களாக தமிழ் சினிமாவில் இருந்து ஒதுங்கி இருந்தார். அதற்குப் பிறகு நடிகர் ரஜினிகாந்தின் நடிப்பில் வெளியான சந்திரமுகி திரைப்படத்தில் பரதநாட்டிய கலைஞராகவே நடித்து அதற்குப் பிறகு அதிகமான தமிழ் திரைப்படங்களில் காணாமல் இருக்கும் நிலையில் இவர் சமூக வளைத்தளத்தில் ஆக்டிவாக இருந்து வருகிறார்.

தான் கலந்து கொண்ட பரதநாட்டிய வீடியோக்கள் மற்றும் தன்னுடைய மாணவர்கள் கலந்து கொள்ளும் பரதநாட்டிய வீடியோக்களுக்கு தன்னுடைய சமூக வலைத்தள பக்கங்களில் வினீத் தொடர்ச்சியாக பதிவிட்டு வருகிறார். அதுபோல வினீத் கடந்த 2004 ஆம் ஆண்டு ப்ரிசிலா மேனன் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு ஒரு மகள் இருக்கிறார்.

 Do you remember actor Vineeth? Is his wife this celebrity

இந்த நிலையில் வினீத் தன்னுடைய குடும்ப புகைப்படங்களை தற்போது இணையதள பக்கத்தில் பதிவிட்டு இருக்கும் நிலையில் அது பலருடைய பாராட்டுகளை பெற்று வருகிறது. அதுவும் இவருக்கு இவ்வளவு பெரிய மகள் இருக்கிறாரா? என்று பலர் கேள்வி எழுப்பி வருகின்றனர். அத்தோடு விரைவில் இவர் மீண்டும் தமிழ் திரைப்படங்களில் நடிக்க வேண்டும் என்றும் ரசிகர்கள் வேண்டுகோள் வைத்து வருகின்றனர்.

 Do you remember actor Vineeth? Is his wife this celebrity
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+