மெட்டி ஒலி விஜியை நினைவு இருக்கிறதா?காதலை கைவிட்டு.. இளம் வயதில் இறந்ததற்கு இத்தனை காரணங்களா?
சென்னை: சன் டிவியில் ஒளிபரப்பான மெட்டி ஒலி சீரியலில் விஜி கேரக்டரில் நடிகை உமா மகேஸ்வரி நடித்திருந்தார்.
அவர் கடந்த 2021 ஆம் ஆண்டு திடீரென்று உயிரிழந்திருந்தார்.
இந்த நிலையில் அவரைப் பற்றி சில தகவல்கள் மீண்டும் பரவி வருகிறது.
90ஸ் ஃபேவரைட் சீரியல்களில் ஒன்றாக சன் டிவியில் ஒளிபரப்பான மெட்டி ஒலி சீரியல் இருந்து வந்தது. இந்த சீரியலில் ஐந்து பெண்களின் அப்பா மற்றும் அந்த ஐந்து பெண்களின் குடும்ப வாழ்க்கை, சந்தோஷங்கள் பார்ப்பதற்கு பக்கத்து வீட்டுக் கதைப் போலவே இருப்பதாகவே இந்த சீரியலுக்காக அதிகமான ரசிகர்கள் இப்ப வரைக்கும் இருந்து வருகின்றனர்.

இந்த சீரியலில் நடித்து பிரபலமான நடிகைகள் இப்ப வரைக்கும் இந்த சீரியலின் பெயராலே அறியப்பட்டு வருகிறார்கள். அந்த வகையில் ஒருவர்தான் விஜி கேரக்டரில் நடித்த உமா மகேஸ்வரி. அவருடைய நிஜப்பெயர் பலருக்கும் தெரியாது. இப்ப வரைக்கும் அவருடைய நினைவுகளை மெட்டி ஒலி விஜி என்று தான் கூறி வருகிறார்கள்.
அந்த அளவிற்கு விஜி கேரக்டரில் அனைவருடைய மனதையும் கவர்ந்த உமா மகேஸ்வரி கடந்த 2021 ஆம் ஆண்டு திடீரென்று உயிரிழந்தார். இளம் வயதில் திடீரென்று உயிரிழந்த விஜயின் மரணத்தால் பலரும் வேதனை அடைந்தனர். அவருடைய திடீர் மரணத்திற்கு அப்போது மூன்று காரணங்கள் சொல்லப்பட்டது. மெட்டி ஒலி சீரியலில் மட்டுமல்லாமல் பல சீரியல்களிலும் திரைப்படங்களிலும் நடித்திருக்கிறார்.
உன்னை நினைத்து, வெற்றி கொடி கட்டு போன்ற சில திரைப்படங்களிலும் அவர் நடித்திருந்தார். இப்படி சினிமாவில் வளர்ந்து கொண்டிருக்கும் நேரத்தில் தான் சினிமா சம்பந்தமே இல்லாத ஒரு நபரை உமா மகேஸ்வரி திருமணம் செய்திருந்தார். அத்தோடு நன்றாக போய்க் கொண்டிருந்த வாழ்க்கையில் மெட்டிஒலி விஜியின் வாழ்க்கை மாறி இருக்கிறது.
திருமணத்திற்கு பிறகு மீண்டும் நடிக்க வேண்டும் என்று விஜி கேட்டதற்கு அவருடைய கணவர் சம்மதிக்க வில்லையாம். அக்கா மாதிரி நானும் நடிக்க வேண்டும் என்று இவர் ஆசைப்பட்டாராம். ஆனால் அவருடைய கணவர் அதற்கு நீ சினிமாவில் உள்ளவரை திருமணம் செய்திருக்க வேண்டும் என்னை பண்ணியிருக்கக் கூடாது என்று அப்போது கூறியதாகவும் அதனால் அவர்கள் இருவருக்கும் தினந்தோறும் சண்டை ஏற்பட்டதாகவும் தகவல்கள் அந்த நேரத்தில் பரவி வந்தது.
அடிக்கடி பிரச்சினையினால் நிம்மதி இல்லாமல் இருந்த விஜி உடல் இளைத்து மஞ்சள் காமாலை ஏற்பட்டு மிக மோசமான நிலைமைக்கு வந்து விட்டாராம். அது மட்டும் அல்லாமல் மெட்டி ஒலி சீரியல் இயக்குனர் திருமுருகனை காதலித்ததாகவும் அவரை திருமணம் செய்திருக்க வேண்டும் இல்லையென்றால் இவருடைய நடிப்பு ஆசையை முழுமையாக புரிந்து கொண்டவரை திருமணம் செய்திருக்க வேண்டும் என்றெல்லாம் அப்போது செய்திகள் பரவி வந்தது.
கடைசியில் காதலையும், தொலைத்து உயிரையும் விட்டுவிட்டார். வெறும் 40 வயதில் விஜி திடீரென்று இறந்து போனதற்கு காரணம் இதுவாகத்தான் இருக்கும் என்று செய்திகளும் பரவி வந்தது. இப்ப வரைக்கும் இவருடைய புகைப்படங்களை பார்க்கும்போது ரசிகர்கள் ஃபீல் பண்ணி வருகின்றனர். ஆனால் இவருடைய மரணத்திற்கான உறுதியான காரணங்கள் தெரியவில்லை. ஆனாலும் அவர் சம்பவத்தன்று ரத்த வாந்தி எடுத்ததாகவும் பிறகு உயிரை இழந்ததாகவும் கூறுகின்றனர்.












Click it and Unblock the Notifications