பெப்ஸி உமாவை நினைவிருக்கா? ஓ... 25 ஆண்டுகளுக்கு பிறகு ஹோஸ்ட்களின் ரீயூனியன்.. தீயாய் பரவும் போட்டோ
சென்னை: சன் டிவி தொகுப்பாளர்கள் பெப்சி உமா, விஜய் சாரதி, ரத்னா ஆகிய 3 பேரும் இணைந்திருக்கும் புகைப்படம் ஒன்று வைரலாகி வருகிறது.
சன் டிவியில் 1990 களில் ரசிகர்களால் கொண்டாடப்பட்டவர்கள் தொகுப்பாளர்கள். அவர்கள் ரசிகர்களுடன் தொலைபேசியில் உரையாடல் செய்யப்பட்டு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டது. இதனால் ரசிகர்களுக்கும் தொகுப்பாளர்களுக்கும் நல்லதொரு பாண்டிங் இருந்தது.
1990 களில் இந்த தொகுப்பாளர்கள் போட்ட விதைதான் இன்று ரசிகர்களுடன் தொகுப்பாளர்கள் தொலைபேசி மூலம் உரையாடி தங்கள் நிகழ்ச்சியை பிரபலப்படுத்தி வருகிறார்கள். அந்த வகையில் சன் டிவியில் தொகுப்பாளர்கள் என்றால் மாலா, விஜய் சாரதி, பெப்சி உமா, அர்ச்சனா, சுரேஷ், ரத்னா உள்ளிட்டோரை சொல்லலாம்.

ரியாலிட்டி ஷோக்கள்
இவர் நடத்திய ரியாலிட்டி ஷோக்களை இன்றும் 90 ஸ் கிட்ஸ் நினைவில் வைத்திருக்கிறார்கள். இந்த தொகுப்பாளர்களின் கம்பீர குரல்கள், சிரிப்பு, அழகு, இவற்றை புகழாதவர்கள் யாருமே இருக்க மாட்டார்கள். இவர்களில் பெப்சி உமாவுக்கு ஏராளமான ரசிகர்கள் உண்டு. அவர் பேசும் போது எதார்த்தமாக சொல்லும் "ஓ.. " என்ற வார்த்தை அனைவருக்கும் பிடித்த ஒன்று.

பந்தா இல்லை
எந்த பந்தாவும் இல்லாமல் தேவையில்லாமல் பேசாமல் சுருக்கமாகவும் அதே நேரத்தில் ரசிகர்களுடன் ஒன்றியும் பேசுவார். அந்த வகையில் இவர் நடத்திய பெப்சி உங்கள் சாய்ஸ் என்ற நிகழ்ச்சிக்கு ரசிகர்கள் ஏராளம். இந்த நிகழ்ச்சியை உமா 15 ஆண்டுகள் தொகுத்து வழங்கினார். இதனால் இவரது பெயர் பெப்சி உமா என்றே அழைக்கப்பட்டது. இதன் பின்னர் அவர் எந்த நிகழ்ச்சியையும் தொகுத்து வழங்கவில்லை.

15 ஆண்டுகள்
ஒரே ஒரு நிகழ்ச்சியை அதுவும் 15 ஆண்டுகள் ஒருவரே தொகுத்து வழங்கியுள்ளார் என்றால் அந்த நிகழ்ச்சியை அத்தனை சுவாரஸ்யமாக எடுத்துச் சென்றதன் புகழ் பெப்சி உமாவையே சாரும். அது போல் செய்தி வாசிப்பாளர் ரத்னா, இவருடைய தமிழ் உச்சரிப்பு அழகாக இருக்கும். அது போல் இவர் திரைவிமர்சனமும் செய்துள்ளார். படத்தை பார்க்காமலேயே இவர் திரை விமர்சனம் செய்ததாக பல பேட்டிகளில் கூறியுள்ளார்.

விஜயசாரதி
அடுத்தபடியாக விஜய் சாரதி- நீங்கள் கேட்ட பாடல் எனும் நிகழ்ச்சி மூலம் பிரபலமானவர். அந்த நிகழ்ச்சியில் இவர்தான் பின்னால் நடந்து கொண்டே பேசி தனக்கென ஒரு ஸ்டைலை உருவாக்கியிருந்தார். இவர் 20 ஆண்டுகளுக்கு மேலாக நிகழ்ச்சி தொகுப்பாளராக பணியாற்றியுள்ளார். இவர் சித்தி உள்ளிட்ட நாடகங்களில் நடித்துள்ளார். படையப்பா படத்தில் ரஜினியின் மருமகனாக நடித்திருந்தார்.

டிவிட்டரில் ஆக்டிவ்
இவர் டிவிட்டரில் ஆக்ட்டிவ்வாக இருப்பார். இந்த நிலையில் ஒரு தனியார் தொலைகாட்சி நிகழ்ச்சியின் விருது வழங்கும் விழாவில் இந்த 3 தொகுப்பாளர்களும் சந்தித்து கொண்டு எடுத்த புகைப்படம் தற்போது வைரலாகி வருகிறது. அது போல் பெப்சி உமாவுடன் ரேகா நாயர் எடுத்த புகைப்படத்தை அவர் தனது இன்ஸ்டா பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

குழந்தை பருவ கனவு
அவர் கூறுகையில் குழந்தை பருவ கனவு ஒன்று நினைவானது. ஆண்களில் அஜித்தையும் பெண்களில் பெப்சி உமாவையும் சந்திக்க வேண்டும் என்பது தின கனவாகவே இருந்தது. அந்தக் கனவு நேற்றைக்கு நிஜமானது. 15 நிமிட உரையாடலில் ஐந்து ஆண்டுகளாகவே அவர் வீட்டுக்கு பக்கத்து வீட்டில் தான் நான் வசித்து வருகிறேன் என்பது தெரிந்தது. இருந்தும் ஒரு முறை கூட அவர் வெளியில் வந்து பார்த்ததே இல்லை. நேற்றைக்கு அதைச் சொன்னவுடன் அவர்கள் சிரித்துக் கொண்டு உண்மைதான் நான் வெளியே வருவதில்லை.

அன்போடு அழைத்த பெப்சி உமா
வீட்டுக்கு வாருங்கள் என்று அன்போடு அழைத்த அந்த அழகிக்கு என் வாழ்த்துகள். உங்கள் கொஞ்சும் குரல், உங்கள் அழகிய தமிழ், உங்கள் ஆடை, நீங்கள் வைத்திருக்கும் மல்லிகை பூ என உங்களை நேசிக்க ஆயிரம் உண்டு. ஆதலாலேயே பெண் தொகுப்பாளர்களில் நீங்கள் ஒரு சூப்பர் ஸ்டார். அதை எப்போதும் மகிழ்ச்சியோடு பாராட்டுவேன் வாழ்த்துகள் அக்கா'' என்று குறிப்பிட்டுள்ளார். இந்த புகைப்படமும் தற்போது வைரலாகி வருகிறது.
-
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது -
புதிய தலைமுறை சேனல் நீக்க விவகாரம்: ஜனநாயக குரல்வளையை நெறிக்காதீர்கள்..விஜய் அரசுக்கு அதிமுக கண்டனம்












Click it and Unblock the Notifications