விஜய்யின் வேலாயுதம் பட காவிரியை ஞாபகம் இருக்கா? குழந்தையுடன் வெளியிட்ட போஸ்ட்! குவியும் கமெண்ட்ஸ்
சென்னை: நடிகர் விஜய் நடித்த வேலாயுதம் படத்தை நினைத்தாலே ரசிகர்கள் மனதில் முதலில் அண்ணன் தங்கச்சி பாசம் தான் நினைவில் வரும். அந்த படத்தில் விஜய்யின் தங்கச்சியாக காவிரி கேரக்டரில் நடித்த சரண்யா மோகனை அவ்வளவு ஈசியாக ரசிகர்கள் மறந்திருக்க முடியாது. அந்த அளவிற்கு அந்த கேரக்டரோடு அவர் ஒன்றி போயிருந்தார்.
வேலாயுதம் படத்தில் மட்டுமல்லாமல் யாரடி நீ மோகினி படத்தில் நயன்தாராவின் தங்கச்சியாக வந்து பலரையும் சிரிக்க வைத்திருந்தார். ஆனால் சில வருடங்களாக அவர் சினிமாவில் விட்டு விலகி இருந்தாலும் இப்போது அவருடைய குழந்தையுடன் எடுத்த புகைப்படங்கள் வெளியிட்டு இணையத்தில் வைரலாகி இருக்கிறார்.

நடிகை சரண்யா மோகன் லேட்டஸ்ட் போட்டோஸ்
சரண்யா மோகனின் லேட்டஸ்ட் போட்டோவை பார்த்ததும் வேலாயுதம் காவேரி இப்போ இவ்வளவு மாறிட்டாரே! என்று பலரும் ஆச்சரியத்துடன் அது ஷேர் செய்து வருகின்றனர். கேரளாவை சேர்ந்த சரண்யா மோகன் சின்ன வயதிலேயே குழந்தை நட்சத்திரமாக திரையுலகில் அறிமுகமானார். பிறகு கதாநாயகியாகவும் துணை கேரக்டர்களிலும் நடித்து ரசிகர்களின் கவனத்தை ஈர்த்திருந்தார்.
சரண்யா மோகன் நடித்த திரைப்படங்கள்
அதிலும் தமிழில் யாரடி நீ மோகினி, வெண்ணிலா கபடி குழு, ஈரம், வேலாயுதம், ஒஸ்தி உள்ளிட்ட படங்கள் அவருக்கு நல்ல பெயரை வாங்கி வைத்துக் கொடுத்தது. குறிப்பாக குடும்ப பாசம் நிறைந்த கேரக்டரில் அவருடைய இயல்பான நடிப்பு ரசிகர்களால் பாராட்டப்பட்டது. தனுஷ், நயன்தாரா நடித்த யாரடி நீ மோகினி திரைப்படத்தில் நயன்தாராவின் தங்கச்சியாக நடித்த சரண்யா மோகன் தனுஷ் மீது அவருக்கு இருக்கும் சின்ன கிரஸ் காட்சி கூட ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது.
அதுபோல வேலாயுதம் படத்தில் விஜய் உடன் செய்த செய்த அலப்பறை காமெடி காட்சிகள் இப்போதும் டிவி சேனல்களில் அதிகமாக ஒளிபரப்பாகி வருகிறது. அதிலும் அந்த படத்தில் அண்ணன் மீது உயிரையே வைத்திருக்கும் காவிரி ஆக அவர் நடித்த விதம், விஜய்யுடன் இருந்த எமோஷனல் காட்சிகள், குறிப்பாக கிளைமாக்ஸ் காட்சிகள் இன்று வரை ரசிகர்களால் மறக்க முடியாதது.

திருமணம்
ஆனால் சரண்யா மோகன் சமீப காலமாக தமிழ் திரைப்படங்கள் எதிலும் காணவில்லை. 2015 ஆம் ஆண்டு அரவிந்த் கிருஷ்ணனை திருமணம் செய்து கொண்ட இவருக்கு ஒரு மகனும், ஒரு மகளும் இருக்கின்றனர். அடிக்கடி தன்னுடைய பேமிலி போட்டோக்களை சோசியல் மீடியாவில் வெளியிட்டு வரும் சரண்யா தற்போது தன்னுடைய மகளுடன் எடுத்த புகைப்படத்தை வெளியிட்டு இருக்கிறார்.

சரண்யா மோகன் தற்போதைய நிலை
ரசிகர்கள் சிலர் இவருக்கு இவ்வளவு பெரிய மகளா என்று கேட்கிறார்கள். சில வருடங்களுக்கு முன்பு சரண்யா ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொண்ட போது உடல் எடை மிகவும் அதிகரித்து இருந்தது. அந்த புகைப்படங்கள் சோசியல் மீடியாவில் பரவி வந்தது. அப்போது பலரும் இவருக்கு என்ன ஆச்சு என்று கேள்வி எழுப்பி வந்தனர். அதை தொடர்ந்து அவர் உடற்பயிற்சி செய்து மீண்டும் உடல் எடையை குறைத்து பழைய தோற்றத்திற்கு திரும்பி இருக்கிறார்.
காமெடி நிகழ்ச்சியில் செக்கிழுத்த செம்மல் வ. உ. சி. -யை அசிங்கப்படுத்திய பெண்.. கோபத்தில் மோகன் ஜி விளாசல்
அதோடு சரண்யா மோகன் நடிகை மட்டுமல்லாமல் பாரத நாட்டிய கலைஞரும் தான். பாரம்பரிய நடனத்தில் பயிற்சி பெற்ற அவர் அடிக்கடி பரதநாட்டிய வீடியோக்களையும் சோசியல் மீடியாவில் பகிர்ந்து வருகிறார். அதுபோலத்தான் இப்போது கூட அவர் வெளியிட்ட ஒரு பதிலில் பரதநாட்டியம் பயிலும் பெண்களுடன் ஒரு டான்ஸ் போட்டு இருக்கிறார்.

அதிலும் யாரடி நீ மோகினி படத்தில் அவர் ஆடிய "பாலக்காட்டு ராஜாவுக்கு" என்ற பாடலுக்கு தான் தன்னுடைய தோழிகளுடன் செம ஆட்டம் போட்டு இருக்கிறார். இந்த வீடியோவை பார்த்த ரசிகர்கள் பலர் நீங்க இனி மீண்டும் எப்போ சினிமாவுக்கு கம் பேக் கொடுக்கப் போறீங்க என்று கமெண்ட்ஸ் கொடுக்கிறார்கள்.


Click it and Unblock the Notifications
