தெய்வமகள் சீரியல் “ஜெய்ஹிந்த் விலாஸ்” ஞாபகம் இருக்கா? இப்போ எப்படி இருக்கு பாருங்க.. ஐயோ என்ன ஆச்சு?
சென்னை: சன் டிவியில் சில வருடங்களுக்கு முன்பு தெய்வமகள் சீரியல் ஒளிபரப்பாகி வந்தது.
இந்த சீரியலில் நடித்த நடிகை வாணி போஜன் தற்போது வெள்ளி திரையில் முன்னணி நடிகையாக வலம் வந்து கொண்டிருக்கிறார். அதே நேரத்தில் இந்த சீரியலின் முக்கிய கருவாக இருந்த ஜெய்ஹிந்த் விலாஸ் தற்போதைய நிலை குறித்து இந்த செய்தியில் விரிவாக பார்க்கலாம்.

90ஸ் கிட்ஸ்களின் ஃபேவரைட் சீரியல்களில் தெய்வமகள் சீரியலுக்கு தனி ரசிகர்கள் கூட்டம் உண்டு. இந்த சீரியல் அந்த காலகட்டத்தில் பள்ளி கல்லூரி படித்து முடித்து டியூசனுக்கு போயிட்டு வீட்டிற்கு வரும் நேரத்தில் சரியாக அனைத்து வீடுகளிலும் ஒளிபரப்பாகி வரும். அதிலும் தெய்வமகள் சீரியலில் அந்த பாடல், மியூசிக் பலருக்கும் ஃபேவரைட் ஆக இருக்கும்.
தெருவில் நடந்து போகும்போது கூட பல வீடுகளில் தெய்வமகள் சீரியலின் மியூசிக் வெளியே கேட்க முடியும். அந்த அளவிற்கு 90ஸ் கிட்ஸ்களுக்கு பரீட்சையமாக இந்த சீரியல் மாறி இருக்கும். இந்த சீரியலில் பிரகாஷ் மற்றும் சத்யாவின் ஜோடி பொருத்தம் அதிகமான ரசிகர்களுக்கு பிடித்ததாக இருக்கும். இவர்கள் இருவருக்கும் காதல், மோதல் பலரும் ரசித்தது. அதிலும் பிரகாஸூக்கும் அவருடைய அண்ணியார் காயத்ரிக்கும் நடக்கும் யுத்தம் இந்த சீரியலின் ஹைலட் என்று சொல்லலாம்.

அண்ணி என்றால் அம்மா மாதிரி என்று சொல்லி வந்த போக்கு பல வீடுகளில் இல்லை என்று தெய்வமகள் சீரியல் வெளிச்சத்துக்கு கொண்டு வந்தது. அதுபோல இந்த சீரியலின் ஹைலைட்டாக இருந்த இடம் ஜெய்ஹிந்த் விலாஸ் தான். இதை அடைவதற்காக தான் அண்ணியார் அதாவது காயத்ரி பிரகாஷ் மற்றும் சத்யாவை பாடாய்படுத்தி எடுப்பார். பிரகாஷூம் சத்தியாவும் அண்ணியாரிடம் இந்த வீட்டை காப்பாற்றிக் கொள்வதற்காக தான் போராடிக் கொண்டிருந்தார்கள்.
அந்த அளவிற்கு இந்த சீரியலின் ஜெய்ஹிந்த் விலாஸ் ஒரு கேரக்டர் போலவே அமைந்திருக்கும். அதிலும் பிரகாஷின் அப்பா அடிக்கடி ஜெய்ஹிந்த் விலாஸ் பற்றி பெருமையாக பேசிக் கொண்டிருப்பார். இந்த நிலையில் தற்போது இந்த வீடு பாழடைந்த நிலையில் இருக்கிறது. தெய்வமகள் சீரியலுக்குப் பிறகு இந்த வீட்டில் வைத்து எந்த சூட்டிங் எடுக்கப்படவில்லை போல. அதனால் தான் அந்த வீட்டிற்கான சரியான பராமரிப்பு இல்லாமல் இருக்கிறது. அதை பார்த்த பலரும் இந்த வீடு முன்னாடி எப்படி இருந்தது ஆனால் இப்போ இப்படி மாறிவிட்டதே என்று கூறி வருகிறார்கள்.

அந்தளவிற்கு வருத்தமான நிலையில் இந்த வீடு அமைந்திருப்பது சென்னையில் டீ நகரில் தான். தற்போது இந்த தெருவில் கடந்து போகும் பலரும் இது தெய்வமகள் சீரியல் ஜெய்ஹிந்த் விலாஸா? என்று நலம் விசாரிப்பது போன்று பரிதாபமாக பார்த்துவிட்டு செல்கின்றனர். இந்த நிலையில் இந்த வீடு இருக்கும் வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.












Click it and Unblock the Notifications