சுயமரியாதையை விட்டு கொடுக்கணுமா? பிக் பாஸ் காமன்மேன் டாஸ்கை பார்த்து கடுப்பான பாலாஜி முருகதாஸ்
சென்னை: பிக் பாஸ் வீட்டுக்குள் போகணும்னா என்ன வேணாலும் செய்ய தயாரா? என்ற கேள்வியை இந்த முறை பிக் பாஸ் காமன்மேன் நிகழ்ச்சி பொதுமக்களிடமே கேட்க ஆரம்பித்திருக்கிறது போல, விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் காமன்மேன் நிகழ்ச்சியில் நடக்கும் டாஸ்க்குகளும் போட்டியாளர்கள் நடத்தப்படும் விதமும் சோசியல் மீடியாவில் ஏற்கனவே விவாதத்தை கிளப்பி இருக்கிறது. அந்த வரிசையில் இப்போது பாலாஜி முருகதாஸ் வெளியிட்ட பதிவும் கவனம் பெற்று வருகிறது.
பிக் பாஸ் காமன்மேன் சர்ச்சைகள்
இந்த நிகழ்ச்சியில் கான்செப்ட் ரொம்ப சிம்பிள். இதுவரை பிக் பாஸ் வீட்டை வெளியில் இருந்து பார்த்துக் கொண்டிருந்த பொதுமக்களில் ஒருவருக்கு பிக் பாஸ் சீசன் 10 நிகழ்ச்சியில் வீட்டிற்குள் செல்லும் வாய்ப்பு கிடைக்கிறது. அதற்காக முதலில் காமன்மேன் நிகழ்ச்சியில் பல்வேறு போட்டிகள் சோதனைகள் இன்டர்வியூக்கள் என கடந்து வரவேண்டும். கடைசியில் அதில் ஜெயிக்கும் நபர் பிக்பாஸ் வீட்டிற்கு போகும் வாய்ப்பு கிடைக்கும்.
ஆனால் "வாய்ப்பு கிடைக்கிறது" என்பதற்கும் "அதற்காக என்ன வேண்டுமானாலும் செய்ய வேண்டும்" என்பதற்கும் நடுவில் ஒரு சின்ன கோடு இருக்கிறது. அந்த கோட்டை தான் இந்த நிகழ்ச்சி கொஞ்சம் கொஞ்சமாக அழித்துக் கொண்டிருக்கிறதா என்ற கேள்வி இப்போது எழுந்திருக்கிறது. ஒரு டாஸ்க்கில் எல்லோரும் ஒரே அறைக்குள் அடைக்கப்பட்டு ஆளுக்கு ஒரு நாற்காலியை பிடிக்க வேண்டும், இன்னொரு பக்கம் பேருந்தில் முண்டியடித்து இடம் பிடிக்க வேண்டும் என்ற டாஸ்க் கொடுக்கிறார்கள்.

பிக் பாஸ் டாஸ்க்
இதையெல்லாம் பார்த்தால் சில நேரங்களில் பிக் பாக்ஸ் ஆடிஷனா இல்ல squad game தமிழ்நாடு வெர்சனா என்ற சந்தேகம் வருகிறது. போட்டியாளர்கள் ஒருவரை ஒருவர் தள்ளிக் கொண்டு, முட்டிக்கொண்டு, ஓடிக்கொண்டும் இடம் பிடிக்கிறார்கள். கேமரா எல்லாவற்றையும் பதிவு செய்து கொண்டிருக்கிறது. அதற்கு மேலாக நடுவர்கள் கேள்விகளால் ஒரு பக்கம் போட்டியாளர்களை நொறுக்குகிறார்கள்.
அதாவது நீங்கள் எவ்வளவு திறமையானவர்கள்? என்பதைவிட நீ எவ்வளவு அழுத்தத்தை தாங்குவீர்கள் என்பதுதான் இங்கு முக்கியமான தேர்வாக மாறி இருக்கிறது. இதற்கிடையில் தெலுங்கில் நடந்த நிகழ்ச்சியில் ஒரு போட்டியாளர்களிடம் பிந்து மாதவி செருப்பை சுத்தம் செய்ய சொன்ன டாஸ்க் தொடர்பான வீடியோவும் பேசு பொருளானது. செருப்பை சரியாக சுத்தம் செய்யவில்லை என்று ரெட்கார்டு கொடுத்து வெளியேற்றப்பட்ட சம்பவம் குறித்து விவாதங்கள் எழுந்தன.
பாலாஜி முருகதாஸ் பதிவு
இதை பார்த்து ஏற்கனவே பலரும் கேள்வி எழுப்பி வரும் நிலையில் பிக் பாஸ் போட்டியாளரான பாலாஜி முருகதாஸ் வெளியிட்ட பதிவு இன்னும் கவனத்தை ஈர்த்து இருக்கிறது. அந்த பதிவில் ஒரு ஆடிஷனலுக்காக ஒருவர் தனது சுயமரியாதையை விட்டுக் கொடுக்க வேண்டிய சூழ்நிலை வந்தால் அதற்கு மேல் அந்த வாய்ப்பை வைத்து சாதிக்க வேண்டியது என்ன இருக்கிறது? சுயமுரியாதை தான் முக்கியம். உங்கள் நண்பர்கள், குடும்பத்தினர், வாழ்க்கைத் துணை, குழந்தைகள் என அனைவரும் உங்களைப் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள் என்பதே மறந்து விடாதீர்கள் என்று அவர் பதிவு வெளியிட்டிருக்கிறார்.
இது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. பிக் பாஸ் பாலாஜி முருகதாஸ் பிக் பாஸ் ரசிகர்களுக்கு ஏற்கனவே பரீட்சயமாணவர் தான். பிக் பாஸ் தமிழ் சீசன் 4 நிகழ்ச்சியில் போட்டியாளராக களம் இறங்கிய பாலாஜி முருகதாஸ் அந்த சீசனில் பல்வேறு சர்ச்சைக்கு மத்தியில் இறுதிவரை சென்று ஆரியிடம் டைட்டிலை தவறவிட்டார். அந்த சீசனில் ஆரி பாலாஜி இடையிலான மோதல்கள் அப்போது பெரிய அளவில் பேசப்பட்டது. கடைசியில் அவர் ரன்னராக தேர்வாணர்.


Click it and Unblock the Notifications
