கௌதம் மேனன் இயக்கத்தில் மம்முட்டியின் Dominic படம் எப்படி இருக்கு? 11 மாதம் கழித்து ஓடிடியில் ரிலீஸ்

Subscribe to Oneindia Tamil

சென்னை: மம்மூட்டி நடித்த படம் என்றாலே, "இந்த தடவை என்ன மாதிரி கேரக்டர்?"ன்னு ஒரு எதிர்பார்ப்பு இயல்பாகவே வரும். அந்த எதிர்பார்ப்போட தான் பலரும் பார்த்த படம் தான் 'Dominic and the Ladies' Purse'.

மலையாளத்தில் வெளியான இந்த படம், கெளதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் உருவானது என்பதாலேயே கூடுதல் கவனம் பெற்றது. ஒரு சீரியஸ் கிரைம் திரில்லராக இருக்கும்னு நினைச்சு போனவர்களுக்கு, படம் கொஞ்சம் வேற மாதிரியான அனுபவத்தையே கொடுத்தது.

Mammootty ZEE5 OTT

படத்தில் மம்மூட்டி நடிக்கும் டொமினிக் ஒரு முன்னாள் போலீஸ் அதிகாரி. இப்போது அவர் தனியாக விசாரணைகள் செய்யும் ஒரு டிடெக்டிவ். பெரிய பெரிய கேஸ்கள் இல்லை; சின்ன சின்ன விஷயங்களை கவனிச்சு தீர்க்கும் வகையிலான ஆள். அந்த மாதிரி ஒரு சாதாரணமான வழக்கில் தான், ஒரு பெண்களின் ஹேண்ட் பேக் சம்பந்தப்பட்ட விஷயம் வழியாக பெரிய சிக்கலுக்குள் கதை நகர ஆரம்பிக்குது.

கதை கேட்கும்போது சுவாரஸ்யமா தோன்றும். ஆனால் திரையில் அது முழுசா தாக்கத்தை ஏற்படுத்துதா என்றால், அங்க தான் சிலருக்கு ஏமாற்றம் வந்தது. விசாரணை மெதுவாக போகுது. சில இடங்களில் சஸ்பென்ஸ் இருக்கிறது. சில இடங்களில் நகைச்சுவை சேர்க்க முயற்சி செய்திருக்காங்க. ஆனா இந்த இரண்டுமே ஒன்றோட ஒன்று சரியா கலக்காத மாதிரி தெரிகிறது.

சீரியஸான விசாரணை போய்க்கிட்டிருக்கும்போது திடீர்னு வரும் லைட் காமெடி காட்சிகள், அந்த மூட்டைச்சுமையை கொஞ்சம் கலைக்கிறதுக்கு பதிலா, கவனம் சிதற வைக்குது. இந்த எல்லாத்துக்கும் நடுவிலும் மம்மூட்டியின் நடிப்பு மட்டும் எங்கயும் தடுமாறல. அவர் நடக்குற விதம், பேசுற ஸ்டைல், விசாரணையை அணுகுற அமைதி - எல்லாமே அந்த கேரக்டருக்கு ரொம்ப பொருத்தமா இருக்கு.

"இந்த கேரக்டருக்காகவே படம் பார்க்கலாம்"ன்னு சொல்ற ரசிகர்களும் இருக்காங்க. ஆனா, அவரை சுற்றி கட்டப்பட்ட கதையோ, அதே அளவுக்கு வலுவா இல்லன்னு தான் பெரும்பாலான விமர்சனம். படம் வெளியான போது திரையரங்குகளில் கலந்த விமர்சனங்களையே பெற்றது. சிலர் இதை ஒரு மெதுவான, ஆனால் நிதானமான டிடெக்டிவ் படம் என்று ரசித்தார்கள்.

இன்னும் சிலர், "மம்மூட்டியை வைத்து இன்னும் ஒரு ஸ்ட்ராங்கான திரில்லர் எடுத்திருக்கலாம்"ன்னு நினைத்தார்கள். அதனாலேயே படம் பெரிய வசூல் சாதனைகள் எதையும் செய்யாமல், ஒரு சராசரி ஓட்டத்திலேயே திரையரங்குகளில் முடிந்தது. இதற்கு பிறகு, இந்த படம் எப்போ ஓடிடியில் வரும் என்பதற்காக ரசிகர்கள் நீண்ட நாட்கள் காத்திருந்தார்கள்.

வழக்கமாக சில மாதங்களில் ஓடிடி ரிலீஸ் கிடைக்கும். ஆனா இந்த படம் விஷயத்தில் அது நடக்கல. ரிலீஸ்க்கு பிறகு சுமார் பத்து மாதங்களுக்கு மேலாக ஓடிடி அப்டேட் இல்லாம இருந்தது. இதனால் "இது ஓடிடிக்கு வருமா வராதா?"ன்னு கூட சிலர் சந்தேகப்பட்டார்கள். இப்போ அந்த காத்திருப்புக்கு முடிவு வந்திருக்கு. 'Dominic and the Ladies' Purse' படம் தற்போது ஜி5 ஓடிடி தளத்தில் டிசம்பர் 19ஆம் தேதி வெளியாகியுள்ளது.

மொத்தத்தில் சொல்லப் போனால், இது ஒரு மோசமான படம் இல்லை. அதே நேரத்தில், மிகச் சிறந்த திரில்லரும் இல்லை. மம்மூட்டியின் ரசிகர்களுக்கு அவர் நடித்த விதம் திருப்தி தரும். ஆனால் கதையிலும் திரைக்கதையிலும் இன்னும் கொஞ்சம் பிடிப்பு இருந்திருந்தா, இந்த படம் வேற லெவலுக்கு போயிருக்கும் என்ற எண்ணம் தான் படம் முடிந்ததும் மனசுல நின்று போகுது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+