விஜய் மாதிரி நீங்களும் பண்ணிடாதீங்க! முகத்துக்கு நேராக சொன்ன சாய் பல்லவி.. தனுஷ் கொடுத்த ரியாக்ஷன்
சென்னை: தனுஷ் அரசியலுக்கு வருவாரா? என்ற கேள்வி சமீப காலமாகவே சினிமா வட்டாரத்தில் அடிக்கடி எழுந்து வருகிறது. அவருடைய ரசிகர் மன்றத்தில் செயல்பாடுகள் நலத்திட்ட பணிகள் என ஒவ்வொன்றும் இந்த பேச்சை ரசிகர்களிடம் பேச வைத்துக் கொண்டிருக்கிறது. இப்படி ஒரு சூழலில் தனுஷுடன் இணைந்து நடித்திருக்கும் சாய் பல்லவி மேடையில் அவரிடம் ஒரு கோரிக்கையை வைத்திருக்கிறார்.. அதுவும் சாதாரண கோரிக்கை கிடையாது, விஜய் செய்த செயலை நீங்களும் செஞ்சுடாதீங்க என்று சாய்பல்லவி வேண்டுகோள் வைக்கவும் அதற்கு தனுஷ் கொடுத்த ரியாக்ஷன் தான் இணையத்தில் பேசப்படுகிறது.
தனுஷ் நடிப்பில் ராஜ்குமார் இயக்கி உள்ள ஓம் படத்தின் ப்ரோமோஷன் நிகழ்ச்சி தாம்பரத்தில் நடைபெற்றது. இதில் பட குழுவினர் கலந்து கொண்டனர். நிகழ்ச்சிக்கு வரும் வழியில் தனுஷ் ரசிகர்கள் வைத்திருந்த கொடிகளை பார்த்த சாய்பல்லவிக்கு ஏதோ அரசியல் மாநாட்டுக்கு செல்வது போன்று ஏற்பட்டிருக்கிறது. இதைதான் மேடையில் அவர் ஜாலியாக பேசி இருக்கிறார்.
நடிகை சாய் பல்லவி பேச்சு
அதாவது மேடையில் சாய் பல்லவி பேசும்போது, தனுஷ் சார், நான் வரும் வழியில் இருந்த கொடிகளை எல்லாம் பார்க்கும்போது எனக்கு மாநாட்டுக்கு போவது போல இருந்தது. ஆனால் பிரமாண்டமாக இருந்தது. நீங்கள் என்ன முடிவு எடுத்தாலும் உங்களுக்கு என்னுடைய வாழ்த்துக்கள். ஆனால் விஜய் சார் சமீபத்தில் அரசியலுக்கு வந்துவிட்டு நடிப்பதை நிறுத்திவிட்டார், அதேபோல நீங்கள் செய்யக்கூடாது என்று மட்டும் நான் உங்களிடம் வேண்டுகோள் வைக்கிறேன். அது என்னுடைய ஆசை.
தனுஷ் மாதிரி எதார்த்தமான நடிப்பை கொடுக்கக்கூடிய கலைஞர்கள் சினிமாவுக்கு அவசியம். குறிப்பாக பொல்லாதவன் படத்தை பார்த்துவிட்டு நிறைய பேர் அந்த பைக் வாங்கி இருக்கிறார்கள் அந்த படத்தின் பங்க் ஸ்டைலை எத்தனை பேர் பண்ணி இருக்கிறீர்கள்? அப்படி ஒரு எதார்த்தமான நடிப்பை கொடுக்கும் கலைஞர் தனது நடிப்பு பயணத்தை விட்டு விலகக் கூடாது. நீங்கள் எந்த பாதையை தேர்ந்தெடுத்தாலும் தொடர்ந்து நடிக்க வேண்டும். இல்லை என்றால் ஒரு சிறந்த நடிகரை நாங்கள் மிஸ் பண்ணுவோம் என்று அவர் சொன்ன போது அரங்கத்தில் இருந்தவர்கள் ஆரவாரம் செய்தனர்.

தனுஷ் முன்னாடியே சாய் பல்லவி இவ்வளவு வெளிப்படையாக பேசிக் கொண்டிருக்கும் சமயத்தில் தனுஷ் எந்த பதிலும் கொடுக்காமல் இறுக்கமாக அமர்ந்திருந்தார். அதனால் சாய் பல்லவி பேசியது தனுஷுக்கு பிடிக்கவில்லையா? அதுவும் விஜயுடன் ஒப்பிட்டு பேசியது தனுஷுக்கு பிடிக்கவில்லையா? என்ற கேள்வியும் எழுந்து வருகிறது. ஆனால் சாய் பல்லவி பேச பேச அரங்கத்தில் இருந்தவர்கள் கத்தி ஆரவாரம் செய்தனர். இதனால் ரசிகர்கள் தனுஷ் தொடர்ந்து திரைப்படத்தில் நடிக்க வேண்டும் என்று விரும்புகிறார்கள் என்பது தெரிகிறது.
தனுஷ் கொடுத்த ரியாக்ஷன்
ஆனாலும் தனுஷ் எப்போதும் தன்னைப் பற்றி யாராவது பேசினால் உடனே சிரித்து விடுவார் அல்லது தலையை ஆட்டிக் கொண்டு இருப்பார். ஆனால் இப்போ அதெல்லாம் செய்யாமல் அவர் உம்மென்று பார்த்துக் கொண்டிருந்தது தான் விவாதத்தை ஏற்படுகிறது. ஆனால் இதுவரைக்கும் தனுஷ் அரசியல் தொடர்பான கேள்விகளுக்கு எந்த விளக்கத்தையும் கொடுக்கவில்லை. அதிலும் தேசிய விருது பெற்ற பிறகு செய்தியாளர்கள் கட்சி தொடங்குவது எப்போது என்று கேட்டபோது கூட சிரித்து விட்டே போய்விட்டார்.
விஜய்யுடன் ஒப்பீடு
இப்படி இருக்கும் போது சாய்பல்லவி ஓபனாகவே நீங்க அரசியலுக்கு வந்தாலும் சினிமாவில் தொடர்ந்து நடிக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்திருப்பது கவனம் பெறுகிறது. அதுபோல சாய்பல்லவி பேசியதற்கு தனுஷ் மறுப்பு எதுவும் தெரிவிக்காததால் கன்பார்ம் அரசியலுக்கு என்ட்ரிதான், அடுத்த தேர்தலை தனுஷ் எதிர்கொள்ள தயாராகிக் கொண்டிருக்கிறார் என்றும் பலர் சொல்லி வருகிறார்கள். ஏற்கனவே முதல்வர் விஜய் நடிகராக இருந்த சமயத்தில், தான் இனி அரசியலில் முழு கவனத்தை செலுத்தப் போகிறேன் என்று அறிவித்த போது அதற்கு பிறகு சினிமாவில் நடிக்க மாட்டேன் என்று அறிவித்துவிட்டார்.
ரசிகர்கள் கருத்து
அதிலும் ஜனநாயகன் படத்தில் இசை வெளியீட்டு விழாவில் அதிகாரப்பூர்வமாகவே அவர் சொன்னது அந்த சமயத்தில் பெரிதாக பேசப்பட்டது. அதேபோல இப்போது தனுஷும் தொடர்ந்து படத்தில் நடித்துக் கொண்டிருக்கும் சமயத்திலேயே அரசியலுக்கு வந்துவிட்டால் நடிப்பாரா? இல்லையா? என்ற கேள்வி பலருக்கும் இருக்கும் சமயத்தில் அதைத்தான் சாய்பல்லவி கேட்டு இருக்கிறார். ஏற்கனவே தனுஷ் நடிப்பில் சமீப காலமாக வெளியாகும் படங்கள் பெரிய அளவில் வசூல் பெறாததால் இவர் சினிமாவை விட்டு போனாலும் கவலை இல்லை என்பது போல ஒரு சிலர் கமெண்ட் கொடுக்கின்றனர். அதே நேரத்தில் தனுஷின் தீவிர ரசிகர்கள் தனுஷ் தொடர்ந்து நடிக்க வேண்டும் நாங்கள் இருக்கோம் அவருக்கு என்று சப்போர்ட்டாகவும் கமெண்டில் கொடி பிடிக்கிறார்கள்.



Click it and Unblock the Notifications
