ரீல்ஸ் புகழ் டோரா புஜ்ஜி ஜோடிக்கு இந்த நிலைமையா? புஜ்ஜி குற்றச்சாட்டுகளுக்கு பதில் கொடுத்த டோரா
சென்னை: டிக் டாக், இன்ஸ்டாகிராம், யூட்யூப் போன்ற சமூக வலைதள பக்கங்களில் ஹரி மற்றும் தேசராணி என்ற இரண்டு பெண்கள் டோரா புஜ்ஜி என்ற பெயரில் லிவிங் டு கெதரில் இருந்து வந்தார்கள்.
இவர்கள் இருவரும் இரண்டு பெண்கள் என்பதாலும் இவர்களுக்குள் இருந்த காதல் அதிகமாக பேசும் பொருளாக மாறி இருந்தது. ஆனால் அதை கண்டுகொள்ளாமல் இவர்கள் இருவரும் ரிலீஸ் வெளியிட்டு வருவார்கள்.
இந்த நிலையில் புஜ்ஜி கண்ணீரோடு சில நாட்களுக்கு முன்பு டோரா பற்றி பல குற்றசாட்டுகளை வைத்திருந்தார். அதற்கு முதல் முறையாக டோரா விளக்கம் கொடுத்திருக்கிறார். இந்த வீடியோ வைரலாகி வருகிறது.

பலர் சமூக வலைத்தளங்கள் மூலமாக பிரபலங்களாக மாறி இருக்கிறார்கள் தங்களுக்குள் இருக்கும் நடிப்பு திறமையை இந்த செயலி மூலமாக பலர் வெளி உலகத்திற்கு கொண்டு வருகின்றனர். இவர்களுடைய வீடியோக்களை பார்ப்பதற்காக அதிகமான ரசிகர்களும் இருக்கத்தான் செய்கிறார்கள். அதனாலையே இவர்கள் தங்களை ஒரு பெரிய அளவில் செலிபிரிட்டியாக மாற்றிக்கொண்டு இருக்கிறார்கள்.
இந்த மாதிரி ரீல்ஸ் வீடியோ வெளியிடுவதற்கு இவர்களுக்கு வருமானமும் வருகிறது. அதனால் இதனை முழு நேர வேலையாகவும் பலர் செய்து வருகிறார்கள். அந்த மாதிரி சமூக வலைத்தளத்தை பயன்படுத்தும் பலருக்கும் பரீட்சையமான ஜோடி தான் டோரா மற்றும் புஜ்ஜி. இவர்கள் இருவரும் பல வருடங்களாக ரீல்ஸ் வீடியோக்கள் வெளியிட்டு வந்திருந்த நிலையில் இப்போது சில நாட்களுக்கு முன்பு கண்ணீரோடு கதறி அழுதபடி புஜ்ஜி அதாவது தேச ராணி ஒரு வீடியோ ஒன்றை வெளியிட்டு இருந்தார்.
அதில் தேச ராணி நான் ஹரியை நம்பினேன். அவர் என்னை கைவிட மாட்டார் என்று சொல்லித்தான் இருவரும் சமூக வலைத்தளத்தில் வீடியோக்களை பதிவிட்டோம். ஆனால் ஹரி இப்போ தன்னை ஏமாற்றி விட்டதாகவும் தனக்கே தெரியாமல் பல காரியங்களை செய்துள்ளதாகவும் அவர் அதில் தெரிவித்து இருந்தார்.
இவர்கள் நடத்தி வந்த சேனலுக்கு ப்ரோமோஷனுக்காக நிறைய பணம் கொடுப்பார்களாம். அப்படி கிடைக்கும் பணம் அனைத்தையும் ஹரிதான் பார்த்துக் கொள்ள தேச ராணி சொல்லியிருந்தாராம். ஆனால் தனக்கு வரும் பணத்தில் முறையாக கணக்கு சொல்லாமல் ஹரி தன்னை ஏமாற்றி விட்டார் என்பது என்னுடைய வங்கி கணக்கை பார்த்தபோது தான் எனக்கு புரிந்தது என்று தேசராணி சொல்லி இருந்தார்.
மேலும் அவர் பேசுகையில் ஹரி போதை பழக்கத்திற்கு எப்படியோ அடிமையாகி விட்டார். நான் எவ்வளவோ முறை தடுத்தும் அந்த பழக்கத்திலிருந்து விடுபடவில்லை. இது பற்றி அவர்களுடைய வீட்டில் போய் சொன்ன போது ஹரியின் அக்கா தன்னை செருப்பால் அடித்து விட்டார் என்றும் அந்த வீடியோவில் கதறி அழுதிருந்தார்.

அதோடு சமீபத்தில் தேச ராணி தன்னுடைய அம்மாவிடம் கார் வாங்க வேண்டும் என்று கேட்டதால் அவர் 5 லட்சம் கொடுத்ததாகவும் 5 லட்சத்தில் மூன்று லட்சம் மட்டும் காருக்கு கட்டிவிட்டு ஹரி ஏமாற்றி விட்டார் என்றும் இதனால் இ எம் ஐ கட்ட சொல்லி தொந்தரவு ஏற்பட்டது, இது பற்றி அவரிடம் கேட்டு காதலை முறித்துக் கொள்ளலாம் என்று சொன்னபோது instagram பக்கத்தில் தேச ராணியின் பெயர் மற்றும் மொபைல் நம்பரை கொடுத்து தன்னைத் தவறாக சித்தரித்து இருக்கிறார்கள் என்று அந்த வீடியோவில் கதறி அழுதிருந்தார்.
அதற்கு சில நாட்கள் கழித்து இப்போது முதல் முறையாக டோரா விளக்கம் கொடுத்திருக்கிறார். அதில் அவர் பேசுகையில் எங்களுக்குள்ள சின்ன ஒரு மிஸ் அண்டர் ஸ்டாண்டிங் தான் வந்துச்சு. தேவையில்லாம நான் ட்ரக்ஸ் யூஸ் பண்றேன்னு அவங்க சொல்றாங்க... தப்பு யார் தான் பண்ணாம இருக்கா? நான் ட்ரக்ஸ், இன்ஜெக்ஷன் எல்லாம் போட்டுக்கிட்டதே கிடையாது.
மத்தவங்க என்னை பத்தி தப்பா சொல்லி அதை வச்சு புஜ்ஜி (தேசராணி) இப்படி ஒரு வீடியோ போட்டுட்டா. அவளை சிலர் தப்பா வழி நடத்துறாங்க.புஜ்ஜி அப்படிப்பட்ட பொண்ணே கிடையாது. அவ எனக்கு தான் எப்போதும் சப்போர்ட் பண்ணுவா. அஞ்சு வருஷமா நான் அவ கூட தான் இருந்தேன்.
சின்ன சின்ன மிஸ் அண்டர்ஸ்டாண்டிங் சண்ட வந்திருக்கு, இப்போ எங்களுக்குள்ள வந்திருக்கிற சண்டை கூட எங்களுக்குள்ள பிரேக் அப் ஆயிடுச்சின்னு சொல்ல முடியாது. அவ இப்போ என் மேல கோவத்தில் இருக்குறா, அதனால இப்படி எல்லாம் பேசிக்கிட்டு இருக்கிறா. பூஜ்ஜி ரொம்ப நல்ல பொண்ணு.
அவளுக்கு எதுவுமே தெரியாது. நான் தான் அவளுக்கு அப்படி இருக்கணும் இப்படி இருக்கணும்னு சொல்லிக் கொடுப்பேன். எங்களுக்குள்ள சின்ன சின்ன சண்டை வரும்போது மத்தவங்க வந்து சொல்லி சொல்லி தான் நாங்க இன்னைக்கு இந்த நிலைமைக்கு வந்து நிற்கிறோம். நான் அவகிட்ட நிறைய தடவை சொல்லி இருக்கேன். தேசு, நீ யாரு சொல்லையும் கேட்காத என்று சொல்லி இருக்கேன்.

இந்த அஞ்சு வருஷத்துல தெரியாத விஷயமா உனக்கு இப்போ தெரிஞ்சுடுச்சு என்று நான் கேட்கணும்னு நினைக்கிறேன். அதுபோல தேசராணி என் மேல பல குற்றச்சாட்டு வச்சிருக்கா, நான் போதை ஊசி போடுறேன். அவளோட பணத்தை ஏமாத்திட்டேன்னு சொல்லி, அதெல்லாம் உண்மையே கிடையாது. எனக்கும் அவளை மாதிரி ஓன் வாய்ஸ் பேசி வீடியோ போட தெரியும். ஆனா அந்த தப்பை நான் பண்ண மாட்டேன் என்று டோரா பேசி இருக்கும் வீடியோ இப்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.












Click it and Unblock the Notifications