Dragon movie ott release: வசூலில் கலக்கிய டிராகன் படத்தின் ஓடிடி ரிலீஸ் தேதி.. லீக்கான தகவல்!
சென்னை: அஸ்வந்த் மாரிமுத்து இயக்கத்தில் பிரதீப் ரங்கநாதன் மற்றும் அனுபமா பரமேஸ்வரன், கயாடு லோயர், கௌதம் மேனன் கே எஸ் ரவிக்குமார் விஜே சித்து உட்பட பலர் நடித்து வெளியான டிராகன் திரைப்படத்தின் ஓடிடி ரிலீஸ் தேதி வெளியாகி இருக்கிறது. அது எந்த ஓடிடி தளத்தில் ரிலீஸ் ஆகப்போகிறது என்று விரிவாக பார்க்கலாம்.
சமீபகாலமாகவே வெளியாகும் சில திரைப்படங்கள் மட்டும் தான் மக்கள் மத்தியில் நல்ல கருத்தை சொல்லும் வகையில் இருக்கிறது. ஒரு சில திரைப்படங்களில் மக்களை தவறாக வழி நடத்தும் வகையில் கதாநாயகனே திருடனாகவும், வன்முறை செய்பவனாகவும் இருக்கிறார். அந்த படங்கள் மக்கள் மத்தியில் வன்முறை மற்றும் தவறான உதாரணத்தை ஏற்படுத்துகிறது.

ஆனால் ஒரு சில திரைப்படங்கள் மக்கள் கொண்டாடும் திரைப்படங்களாக வெளியாகி இருக்கிறது. அந்த வரிசையில் டிராகன் திரைப்படத்திற்கும் நல்ல வரவேற்பு கிடைத்திருக்கிறது. இந்த திரைப்படத்தில் ஒரு மனிதன் தன்னுடைய சுய லாபத்திற்காக பல பொய்கள் சொல்கிறான். அதனால் அடுத்தவர்களுடைய வாழ்க்கை எவ்வளவு கஷ்டப்படுகிறது என்பதை அழகாக காட்டி இருக்கிறார்கள்.
பிரதீப் ரங்கநாதன் நடித்த லவ் டுடே திரைப்படம் பெரிய அளவில் மக்கள் மத்தியில் கொண்டாடப்பட்டது. அந்த திரைப்படத்திற்குப் பிறகு இளைஞர்கள் மத்தியில் பிரதீப் ரங்கநாதனுக்கு நல்ல வரவேற்பு இருக்கிறது. இந்த நிலையில் ஓ மை கடவுளே என்ற படத்தை இயக்கிய அஸ்வந்த் மாரிமுத்து, இந்த திரைப்படத்தில் கல்லூரி காலத்தில் அரியர் வைத்து ஜாலியாக ஹீரோயிசம் காட்டிக் கொண்டிருக்கும் ஒருவனுடைய வாழ்க்கையில் பிரச்சனை ஏற்படும் பிரச்சனைகள், காதல் போன்றவற்றை ரசிகர்கள் விரும்பும் வகையில் வெளிப்படுத்தி இருக்கிறார்.
இந்த படத்திற்கு முதல் நாள் சரியான ரெஸ்பான்ஸ் இல்லாமல் இருந்தது. ஆனால் இரண்டாம் நாள் படத்தின் விமர்சனங்களை பார்த்து ரசிகர்கள் தியேட்டருக்கு படையெடுக்க தொடங்கிவிட்டனர். அதேபோல ஞாயிற்றுக்கிழமையில் பெரும்பாலான தியேட்டர்கள் ஹவுஸ்புல் ஆகவே இருக்கிறது. இந்த நிலையில் இந்த திரைப்படம் எப்போது ஓடிடியில் வெளியாகும் என்பது பலருடைய எதிர்பார்ப்பாக இருக்கிறது.
அதே நேரத்தில் இந்த படம் வரும் மார்ச் 28-ம் தேதி ஓடிடியில் வெளியாகும் என்று தகவல்கள் பரவி வருகிறது. டிராகன் படத்திற்கான டிஜிட்டல் ஸ்ட்ரீம் உரிமையை netflix நிறுவனம் கைப்பற்றி இருக்கிறது. வரும் 28ஆம் தேதி இந்த படம் ஸ்ட்ரீம் ஆகும் என்று கூறப்படுகிறது. ஒரு படம் திரையரங்கில் வெளியாகி 28 நாட்களுக்குப் பிறகு ஒடிடியில் வெளியாகும் இதுதான் ரூல்ஸ் ஆக இருக்கிறது.

அதே நேரத்தில் சில படங்கள் தியேட்டரில் நல்ல வசூலை பெற்று வந்தால் ஓடிடி ரிலீஸ் தள்ளிப் போகும். இப்படி இருக்கும் நிலையில் கடந்த பிப்ரவரி 21ஆம் தேதி தியேட்டரில் வெளியான டிராகன் படம் வரும் மார்ச் எட்டாம் தேதி ஒடிடிக்கு வருவதற்கு வாய்ப்பு இருக்கிறது என்று கூறப்படுகிறது.
இந்த திரைப்படத்தில் நடித்த நடிகை கயோடு இப்போது இளைஞர்களின் கனவு கன்னியாக மாறி இருக்கிறார். இவருடைய புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது. இந்த நிலையில் இவர் சில கல்லூரி நிகழ்ச்சிகளிலும் கலந்து கொண்டு வருகிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications