சன் சிங்கர்.. எல்லாமே ரேட்டிங் சாமி ரேட்டிங்.. செம டிராமா பாஸ்!
சென்னை: சன் டிவியின் இந்த சீசன் சன் சிங்கரில் வயது வரம்பு இல்லை என்பதால், 18 வயதுக்கு மேற்பட்ட பலரும் பல விதமாக பாடி அசத்தி வருகிறார்கள்.
கிராமத்தில் இருந்து வந்திருக்கும் நடுத்தர வயது உடையவர், பார்வை திறனற்ற மாற்றுத் திறனாளி பாடகர் என்று சன் சிங்கர் களைக்கட்டி வருகிறது.
நிகழ்ச்சியில் நடுவர்களாக மனோ இருப்பது நிகழ்ச்சிக்கு கூடுதல் பிளஸ் என்று சொல்லலாம். இயல்பாகவே இவருக்கு நகைச்சுவை நன்றாகவே வருகிறது.

ஐயோ ஆதவன்
நிகழ்ச்சித் தொகுப்பாளர் ஆதவன் ஷோவிற்கு நகைச்சுவை சேர்ப்பார் என்று ஆரம்பத்தில் சில எபிசோட்களில் கொண்டு வந்து இருந்தார்கள். நடுவில் சிலதில் காணாமல் இருந்தாலும், வரப்போகும் ஞாயிறு எபிசோடில் சிறப்பு அழைப்பாளராக வந்திருக்கிறார். இவர் முதலில் அடிக்கும் ஜோக்குகளே ஐயோ என்று இருந்தது.

என்ன செய்யப் போகிறார்
இப்போது ஷோவில் என்ன செய்யப் போகிறாரோ தெரியவில்லை.ஆனால், வாயைக் கொடுத்து மாட்டிக் கொண்டது போல நாடகம் அரங்கேறி இருக்கிறது. மனோ நான் ரொம்ப கோவமாகப் போகிறேன் என்பது போல, காமெடியாக வெளியேறுகிறார்.

வசமாக ஆதவன்
எல்லாம் ரேட்டிங் செய்யும் வேலைதாங்க இது. இந்த வார சுற்று சூப்பர் ஸ்டார் சுற்று. சூப்பர் ஸ்டாரின் பாடல்களை நிகழ்ச்சி போட்டியாளர்கள் பாட வேண்டும். ஒரு பெண் மின்சார கண்ணா பாடல் பாடியதை ஆதவன் பாராட்டி பேசினார். மனிதர் அதோடு நிறுத்தாமல் இன்னொன்றையும் சொல்லி வசமாக மாட்டிக்கொண்டார் போலும்.

ரேட்டிங் வேலை
ஆதவன் ஒரிஜினல் பாட்டு பட்டியவரை விட மிக அருமையாக மின்சார கண்ணா பாடலை பாடினீர்கள் என்று சொல்ல... வந்தது வினை. மனோ எப்படி அப்படி சொல்லலாம் என்று கேட்க, மனசில் பட்டதை சொன்னேன்னு ஆதவன் சொல்ல. மனோ கோபமாக எழுந்து போகிறார். அங்கு ஒரு நாடகம் ரேட்டிங் பெயரில் அரங்கேறி ப்ரோமோவாக ஒளிபரப்பாகி வருகிறது. பொறுத்திருந்து பார்க்கலாம்.
-
இனி 18 வயதுக்கு மேற்பட்டோருக்கு ஆதார் கார்டு கிடையாது.. அறிவித்த ஒடிசா அரசு.. காரணம் இதுதான் -
டாஸ்மாக்கில் பாட்டிலுக்கு 10 ரூபாய் பிரச்சனைக்கு தீர்வு.. இயந்திரங்களை நிறுவ அரசு திட்டம்.. சாத்தியமா? -
யாரோட பிடிலையும் திருவண்ணாமலை கிடையாது.. செய்யாறில் ஆதவ் அர்ஜுனா பேசியது என்ன? -
தமிழக சட்டமன்ற வரலாற்றில் தவறான முன்னுதாரணம்.. சபாநாயகர் முடிவுக்கு விகே சசிகலா எதிர்ப்பு -
அரசியல் என்ட்ரி.. அதிகாரப்பூர்வமான அறிவிப்பை வெளியிட்ட திரிஷா.. சக நடிகை கமெண்ட் ஹைலைட் -
"காலம் எனக்கு ஆப்பு வைத்து விட்டது.." கடவுள் தான் காப்பாற்றினாரு..! பாடகி ராஜலட்சுமி உருக்கம் -
சட்டமன்றத்துக்கே 11 மணிக்கு தான் வருவார்.. உதயநிதி எல்லாம் பேசலாமா.. செங்கோட்டையன் காட்டம் -
கடைசியில் பாரதிராஜா சொன்ன கண்ணீர் வார்த்தைகள்.. தேனியில் என்னை கிடத்திடுங்க.. பிரபலம் சொல்வதென்ன -
இந்துக்களின் கயிறு உறுத்துகிறா? முதல்வர் விஜய் அதிகாரத்தை இழக்க நேரிடும்.. வானதி சீனிவாசன் வார்னிங் -
பாரதிராஜாவின் இறுதி சடங்கில் மகள்- மருமகள் சண்டை? என்ன நடந்தது? கங்கை அமரன் கோபத்துக்கு இதுதான் காரணமா? -
ரூ.115 லட்சம் கோடி சொத்து இருந்து என்ன பயன்.. எலான் மஸ்க் வீட்டை பார்த்தீங்களா.. ஒரு 3BHK வீட்டை விட சிறியது? -
திமுக மகளிரணி கூட்டத்திற்கு வந்து! வரவேற்க யாரும் இல்லாததால் திரும்பிச் சென்ற துரைமுருகன்












Click it and Unblock the Notifications