என்னாது.. பஞ்சு மிட்டாய்க்கும் பட்டர் பிஸ்கட்டுக்கும் ட்ரீம் சாங்கா? அட நீங்க வேற!

Subscribe to Oneindia Tamil

சென்னை: சன் டிவியின் லட்சுமி ஸ்டோர்ஸ் சீரியல் ரொம்ப ஜாலியா நல்லாருக்கு. வேலைக்காரி பொன்னம்மாவின் நகைச்சுவை பிரமாதம்.

எல்லாருக்கும் ஜூஸ் போட்டு தர்றான் ரவி.யாருக்கும் தெரியாம டாக்டர் உமா அண்ணி, பாக்கியலட்சுமிக்கு கலந்த மருந்து ஜூஸை, ஒண்ணும் தெரியாத ரவி ஸ்பெஷல் ஜூஸ்னு பாக்கியலட்சுமிக்கு குடுக்கறான்.

பாக்கியலட்சுமி எனக்கு நீங்கதான் ஸ்பெஷல்னு சொல்லி, இந்தாங்கன்னு ரவிக்கு ஜூஸை கொடுக்க டாக்டர் அண்ணி கலந்து குடுத்த மருந்து ஜூஸ் மாறிப்போச்சு.

துப்பட்டா

துப்பட்டா

மொட்டை மாடியில் ஜூஸ் குடிக்கும்போது பறந்து வந்த துப்பட்டா, ரவி, பாக்கியலட்சுமி இருவரையும் கவர் செய்துடுது. உடனே காதல் அணுக்கள் எத்தனை.. நியூட்ரான்.. எலக்ட்ரான் காதல் அணுக்கள் எத்தனைன்னு எந்திரன் பாடலுக்கு கனவுக்கு போயிடறான் ரவி.

அடிக்கடி

அடிக்கடி

இப்படி அடிக்கடி இருவரும் நல்ல நல்ல பாடலுக்கு கனவுலகத்துக்கு போயிடறாங்க.இதில் கனவு காணுவது ரவிதான். பாக்கியலட்சுமிக்கு ரவி மேல் ஆசை இருந்தாலும் தாத்தாவுக்கு செய்து வந்த சத்தியத்துனால சொல்லாம இருக்கா. ஆனா, இந்த கனவு பாடலில் ரெண்டு பேரும் நல்லா ஒட்டி உறவாடறாங்க.. பார்க்க நல்லாத்தான் இருக்கு.

ரவியை

ரவியை

ரவி ஹாலில் எல்லாருடனும் உட்கார்ந்து கிரிக்கெட் பார்க்கறான். அவனுக்காக வேண்டிக்க அவனுடன் கோயிலுக்கு போக ஆசைப்படறா பாக்கியலட்சுமி. அவனை கூப்பிட ஸ்ஸ்..ஸ்ஸ்..என்று சத்தம் போட டாக்டர் உமா அண்ணி பார்த்துடறாங்க.

ஈ விரட்ட

ஈ விரட்ட

பாக்கியலட்சுமி ஈ விரட்ட ஆரம்பிக்க.. என்ன பாப்பா இல்லாத ஈயைஓட்டறியாக்கும்னு கிண்டல் பண்றாங்க பொன்னம்மா. இல்லக்கா ரவியை கூட்டிகிட்டு கோயிலுக்கு போகணும்.. கூப்பிட்டேன்.. அவர் பார்க்கலை.. உமா மேடம் பார்த்துட்டாங்கன்னு சொல்றா..

உலகம்

உலகம்

ஏன் பாப்பா.. படிச்சவுங்களுக்கு மூளையே வேலை செய்யாதா.. கையில உலகம் இருக்குன்னு போனை சொல்றீங்க..அந்த போனை பண்ணு பாப்பான்னு சொல்றாங்க பொன்னம்மா பாக்கியலட்சுமி மெசேஜ் பண்றா, ரவி திரும்பி பார்க்க, தள்ளிப் போயி போன் பண்ணுங்கன்னு சொல்றா.

போலாம்

போலாம்

அவன் உடனே போயி சொல்லு பஞ்சுன்னு சொல்றான். நான் பக்கத்துல இருக்க கோயிலுக்கு போறேன்.. நீங்க வந்திருங்கன்னு சொல்றா. அவனும் சரின்னு சொல்ல, பொன்னம்மா காதை பொத்திகிட்டு நான் ஒண்ணும் கேட்கலை பாப்பான்னு சொல்றாங்க.

காதலர்

காதலர்

என்ன பொன்னம்மாக்கா நீங்களும் என்னை கலாய்க்கறீங்கன்னு சொல்றா. பாப்பா எனக்கும் என்னை விட்டு ஓடிப்போன என் காதலர் போன் செய்யணும்னு வேண்டிக்கோ பாப்பானு சொல்றாங்க.. இப்படி போகுது கதை.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+