Drishyam 3: த்ரிஷ்யம் 3 ரிலீஸ்.. “ஆண்டுகள் கடந்தாலும்.. கடந்த காலம் மாறாது” மிரட்டும் மோகன்லால்!
சென்னை: த்ரிஷ்யம் என்ற பெயர் கேட்டாலே சஸ்பென்ஸ், புத்திசாலித்தனம், அமைதியான பயம் எல்லாமே ஒரே நேரத்தில் நினைவுக்கு வரும். அந்த அளவுக்கு ரசிகர்களின் மனதில் ஆழமாக பதிந்த படம் தான் த்ரிஷ்யம். முதல் இரண்டு பாகங்களும் பெற்ற அமோக வரவேற்புக்கு பிறகு, அதன் மூன்றாம் பாகம் எப்போது வரும் என்ற எதிர்பார்ப்பு கடந்த சில ஆண்டுகளாகவே ரசிகர்களிடம் இருந்தது. அந்த எதிர்பார்ப்புக்கு இப்போது அதிகாரப்பூர்வமான பதில் கிடைத்திருக்கிறது.
த்ரிஷ்யம் 3 படத்தின் படப்பிடிப்பு கடந்த 2025-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் தொடங்கியது. வழக்கம்போல் பாரம்பரிய முறையில் விளக்கேற்றல், பூஜையுடன் தொடங்கிய இந்த விழாவில், மோகன்லால், இயக்குநர் ஜீத்து ஜோசப் மற்றும் தயாரிப்பாளர் ஆண்டனி பெரும்பாவூர் ஆகியோர் கலந்து கொண்டனர். தொடக்கத்திலேயே, "இது சாதாரண மூன்றாம் பாகம் இல்லை" என்பதைக் காட்டும் விதமாகவே இந்த விழா பேசப்பட்டது.

ஜார்ஜ்குட்டி இன்னும் நிழலாகவே தொடர்கிறார்
த்ரிஷ்யம் என்றாலே மோகன்லால் நடித்த ஜார்ஜ்குட்டி கதாபாத்திரம் தான் அனைவருக்கும் நினைவுக்கு வரும். 2013-ல் வெளியான முதல் பாகத்தில், ஒரு சாதாரண குடும்பஸ்தனாக இருந்து, தனது குடும்பத்தை காப்பாற்ற புத்திசாலித்தனமான முடிவுகளை எடுக்கும் ஜார்ஜ்குட்டி, ரசிகர்களை வியக்க வைத்தார்.
ஒரு ஐ.ஜி. அதிகாரியின் மகன் காணாமல் போன வழக்கில், சந்தேகத்தின் மையமாக மாட்டிக்கொள்ளும் ஒரு மனிதன், அதிலிருந்து எப்படி தப்பிக்கிறான் என்பதையே த்ரிஷ்யம் மையமாக எடுத்துச் சொன்னது. அதே கதையை இரண்டாம் பாகம் இன்னும் ஆழமாக கொண்டு சென்றது. அந்த இரண்டாம் பாகம் நேரடியாக ஓடிடி தளத்தில் வெளியானாலும், அதற்கான வரவேற்பு திரையரங்கு படங்களுக்கு நிகராக இருந்தது.
இதையெல்லாம் பார்த்த பிறகு, மூன்றாம் பாகம் வருமா? வந்தால் என்ன நடக்கும்? ஜார்ஜ்குட்டியின் கடந்த காலம் உண்மையிலேயே முடிந்துவிட்டதா? என்ற கேள்விகள் ரசிகர்களை தொடர்ந்து துரத்திக் கொண்டே இருந்தன.
த்ரிஷ்யம் 3 ரிலீஸ் தேதி
இந்த நிலையில், நடிகர் மோகன்லால் தனது எக்ஸ் (ட்விட்டர்) பக்கத்தில் ஒரு சிறிய டீசர் வீடியோவுடன் த்ரிஷ்யம் 3-ன் ரிலீஸ் தேதியை அறிவித்துள்ளார். "ஆண்டுகள் கடந்தன. ஆனால் கடந்த காலம் கடக்கவில்லை" என்ற வரியுடன், ஏப்ரல் 2 அன்று படம் திரையரங்குகளில் வெளியாகும் என்று அறிவித்துள்ளார்.
இந்த ஒரு வரி போதுமானதாக இருந்தது. ரசிகர்கள் மத்தியில் மீண்டும் த்ரிஷ்யம் பற்றிய விவாதங்கள் சூடுபிடிக்க ஆரம்பித்துவிட்டன. குறிப்பாக, முதல் பாகம் திரையரங்கில் வெளியாகி, இரண்டாம் பாகம் ஓடிடியில் வந்த நிலையில், மூன்றாம் பாகம் மீண்டும் பெரிய திரையில் வருவது கூடுதல் எதிர்பார்ப்பை உருவாக்கியுள்ளது.
படக்குழு மற்றும் தயாரிப்பு விவரங்கள்
த்ரிஷ்யம் 3-ஐ ஜீத்து ஜோசப் தான் எழுதி இயக்குகிறார். இந்த தொடரின் உயிரே அவரின் திரைக்கதை என்பதால், மூன்றாம் பாகத்திலும் அவர் தான் கதை சொல்லுவார் என்பதே ரசிகர்களுக்கு பெரிய நம்பிக்கையாக இருக்கிறது.
படத்தை ஆண்டனி பெரும்பாவூர் தலைமையிலான ஆசீர்வாத் சினிமாஸ் தயாரித்துள்ளது. மேலும், இந்த படத்தின் உலகளாவிய திரையரங்கு மற்றும் டிஜிட்டல் உரிமைகளை பனோரமா ஸ்டுடியோஸ் மற்றும் பென் ஸ்டுடியோஸ் இணைந்து பெற்றுள்ளன. இதனால், மலையாளம் மட்டுமல்லாமல், மற்ற மொழிகளிலும் படம் ஒரே நேரத்தில் கவனம் பெறும் என்ற எதிர்பார்ப்பு உள்ளது.
படம் குறித்து பேசிய மோகன்லால், "என் எண்ணங்களிலும், பார்வையாளர்களின் உணர்ச்சிகளிலும், ஜார்ஜ்குட்டி கடந்த நான்கு வருடங்களாக என்னுடன் பயணிக்கிறார்" என்று கூறியுள்ளார்.
இந்த ஒரு வரியே, த்ரிஷ்யம் 3 சாதாரணமாக உருவாக்கப்பட்ட ஒரு சீக்வல் அல்ல, மிக கவனமாக செதுக்கப்பட்ட ஒரு தொடர்ச்சி என்பதைக் காட்டுகிறது. குறிப்பாக, கடந்த காலம் எவ்வளவு மறைக்கப்பட்டாலும், அது ஒருநாள் வெளியே வரும் என்ற அடிப்படை கருவை வைத்து தான் இந்த பாகமும் நகரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
த்ரிஷ்யம் முதல் பாகம் வெறும் மலையாள சினிமாவுக்கான வெற்றி மட்டும் இல்லை. அது இந்திய சினிமாவுக்கே ஒரு பெஞ்ச்மார்க். அந்த அளவுக்கு, பாலிவுட்டில் அஜய் தேவ்கன் நடிப்பிலும், தெலுங்கு, தமிழ் உள்ளிட்ட பல மொழிகளிலும் ரீமேக் செய்யப்பட்டது. தமிழில் கமல்ஹாசன் நடிப்பில் உருவான 'பாபநாசம்' படம் கூட பெரிய வெற்றியை பெற்றது.
இதையெல்லாம் பார்த்தால், த்ரிஷ்யம் 3-க்கு இருக்கும் எதிர்பார்ப்பு சாதாரணமானது இல்லை. ஜார்ஜ்குட்டியின் கதைக்கு உண்மையிலேயே ஒரு முடிவு கிடைக்கப் போகிறதா? இல்லை, இன்னும் ஒரு அதிர்ச்சி திருப்பம் காத்திருக்கிறதா? என்பதுதான் இப்போது அனைவரின் கேள்வி.
-
சல்லி சல்லியாக நொறுங்கிடுச்சே.. துபாய் அஸ்திவாரமே ஆடுதுங்க.. 'சொர்க்க பூமி' இப்படி ஆகிடுச்சே! -
விஜய் ஏமாத்திட்டாரு.. பருத்தி மூட்டை குடோனிலேயே இருந்திருக்கலாம்.. திமுகவில் இணையும் செங்கோட்டையன்? -
விஜய் வந்தால்! அதிமுக 134 தொகுதிகளில் மட்டுமே போட்டியிடும்? எடப்பாடி பழனிசாமியின் சீட் கணக்கு! -
இப்போ வேண்டாம்.. தேர்தலுக்கு பின் ஆதரவு தருகிறேன்.. சிஎம் போஸ்ட் தாங்க.. பாஜகவிடம் பேசிய விஜய்? -
Election Exclusive: நெருங்குது கிளைமேக்ஸ்..தாமரையுடன் கைகோர்க்கும் விசில்! நள்ளிரவில் ஹோட்டல் மீட்டிங்.. டோட்டல் மாற்றம் -
விஜய்க்கு புது ஆஃபர் கொடுக்கும் பாஜக? 80 தொகுதி + துணை முதல்வர் பதவி! டெல்லியில் பரபர பாலிடிக்ஸ் -
திருவள்ளூர் மக்கள் ஏக்கத்துடன் பார்த்த பல ஆண்டு கனவு... ரயில் நிலையத்தில் பார்த்துமே பெரு மகிழ்ச்சி -
"இது" இல்லை என்றால் சிலிண்டர் வராது! புக்கிங் விதிகளை திடீரென மாற்றிய மத்திய அரசு! முக்கிய அறிவிப்பு -
தேர்தல் தேதிகளை அறிவித்த நொடி.. சட்டென தேனி வருசநாடு பற்றி பேசிய தேர்தல் ஆணையர்.. ஏன் தெரியுமா? -
பெரிய பிரச்சனையில் சிக்கும் இந்தியா! அமெரிக்காவுடன் சேர்ந்ததுக்கு மொத்தமா முடிய போகுது! -
வேலைக்கு ஆகாத டிரம்ப் பிளான்! அமெரிக்காவின் தலைமையை ஏற்க தயங்கும் உலக நாடுகள்! ஈரான் வெற்றி! -
போச்சு.. திமுக கூட்டணியில் முதல் விக்கெட்? பாஜக பக்கம் சாயும் பண்ருட்டி வேல்முருகன்? என்ன காரணம்?












Click it and Unblock the Notifications