டப்பிங் ஆர்ட்டிஸ்ட் ரவீனாவுக்கு டும் டும் டும்.. இதோ காதலை ஓபனா சொல்லிட்டாரே.. மாப்ளை யார் பாருங்க
சென்னை: டப்பிங் ஆர்ட்டிஸ்ட் ரவீனா, தன்னுடைய சோஷியல் மீடியா பக்கத்தில் பதிவிட்டிருக்கும் ஒரு போட்டோவுக்கு ஏகப்பட்ட வாழ்த்துக்களும், பாராட்டுக்களும் குவிந்து வருகின்றன.. சீக்கிரம் கல்யாண சாப்பாடு போடுங்க மேடம் என்று ரசிகர்களும் உரிமையாக வேண்டுகோள் விடுத்து வருகிறார்கள்.
புகழ்பெற்ற டப்பிங் கலைஞரான ஸ்ரீஜா ரவியின் மகள் ரவீனா ரவி. தன்னுடைய அம்மாவை போலவே இவரும் டப்பிங் துறைக்குள் காலடி வைத்தார்.. ஆரம்பம் முதலே பல முன்னணி நடிகைகளுக்கு குரல் கொடுக்க துவங்கியதையடுத்து, இன்று தவிர்க்க முடியாத டப்பிங் ஆர்ட்டிஸ்ட்டாக விளங்கி வருகிறார்.

எமி ஜாக்சன், அமலாபால், ஸ்ரீ திவ்யா, சமந்தா ஐஸ்வர்யா ராஜேஷ், காஜல் அகர்வால், தீபிகா படுகோனே போன்ற முன்னணி நடிகைகளுக்கு டப்பிங் பேசியிருந்தார் ரவீனா... பின்னர் கடந்த 2017-ல், ஒரு கிடாயின் கருணை மனு என்ற படத்தில் ஹீரோயினாகவும் எண்ட்ரி தந்தார்..
ரவீனா பேட்டி: இதுகுறித்து ஒரு பேட்டியில் ரவீனா சொல்லும்போது, "டப்பிங் பேசச்செல்லும்போது இயக்குநர்கள் என்ன பார்ப்பார்கள். நல்லா தமிழ் பேசும் பொண்ணு இருக்காங்க என்பது தெரியும். என் போட்டோவைப் பார்த்துவிட்டு இயக்குநர் சுரேஷ் சங்கையா 'ஒரு கிடாயின் கருணை மனு' படத்தில் நடிக்க கேட்டிருந்தார். எனது முதல் படம் அதுதான்.
நான் ரொம்ப கூச்ச சுபாவம். டப்பிங் நேரத்தில் பேசும்போது, அழும்போது எல்லோரையும் வெளியே அனுப்பி விடுவேன். ஆனால், நடிக்க வந்ததும் மும்பை சென்று 3 மாதம் நடிப்புப் பயிற்சி கற்றுக்கொண்டேன். அது முடித்தபின்புதான் கூச்ச சுபாவம் போனது" என்று கூறியிருந்தார்.
வரிசை படங்கள்: காவல்துறை உங்கள் நண்பன், ராக்கி, வீரமே வாகை சூடும், என வரிசையாக படங்கள் புக் ஆகின.. இதில் மாமன்னன் மற்றும் லவ் டுடே என்ற இந்த இரண்டு படங்களும் ரவீனாவை தமிழகத்தின் பட்டிதொட்டியெங்கும் கொண்டுபோய் சேர்த்தது..
அதிலும், மாமன்னன் படத்தில் பகத் ஃபாசில் மனைவியாக நடித்திருந்தாலும், ஒருவசனம்கூட இவருக்கு அந்த படத்தில் இல்லாதது வியப்பை தந்தது.. ஒரு டப்பிங் ஆர்ட்டிஸ்ட்டாக இருந்து வசனமே இல்லாமல் ஏன் இவரை நடிக்க வைத்தார்கள்? என்று சிலர் ஆதங்கத்தை கொட்டினார்கள். வசனமே இல்லையென்றாலும்கூட, தன்னால் நடிக்க முடியும் என்று நிரூபித்திருந்தார் ரவீணா.

காதல் மலர்ந்தது: இதையடுத்து, கூடுதல் பட வாய்ப்புகள் தமிழகத்திலும், கேரளாவிலும் குவிந்து வருகிறது. ஏற்கனவே மலையாளத்தில் வாலாட்டி என்ற படத்தில் ரவீனா நடித்திருந்தார். அப்போது அந்த படத்தின் டைரக்டர் தேவன் ஜெயகுமார் என்பவருடன் ஏற்பட்ட நட்பானது, நாளடைவில் காதலாக மாறியது..
இப்போது, முதன்முறையாக தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில், தன்னுடைய காதலை வெளிப்படையாக அறிவித்துள்ளார் ரவீனா... தீபாவளி ஸ்பெஷலாக ரவீணா பதிவிட்டுள்ள இந்த போஸ்ட்தான் இணையத்தில் வைரலாகி கொண்டிருக்கிறது.
திருமணம்: அந்த போட்டோவில் ரவீணாவும், ஜெயக்குமாரும் ஜோடியாக கட்டிப்பிடித்து போஸ் தந்துள்ளனர்.. இதை பார்த்த ரசிகர்கள், இந்த ஜோடிக்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள். தற்போது 30 வயதாகும் ரவீனா ரவிக்கு விரைவில் திருமணம் என்றும் கூறப்படுகிறது.
இதுவரை 70 படங்களுக்கு மேல் டப்பிங் கலைஞராகப் பணியாற்றியிருக்கும் ரவீனா, 1500 படங்களுக்கும் மேல் டப்பிங் கலைஞராகப் பணியாற்றிய ஸ்ரீஜா ரவியின் மகள் ஆவார்.. "இது வரை 104 டைரக்டர்களுடன் பணியாற்றி விட்டேன். பல ஹீரோயின்களுக்கு குரல் தந்து கொண்டிருக்கிறேன். இன்று எனக்கு கிடைத்திருக்கும் புகழுக்கு முக்கிய காரணம் என் அம்மா ஸ்ரீஜா ரவி அவர்கள்தான் என் அம்மா கடந்த 45 வருடங்களாக டப்பிங் துறையில் பணியாற்றி வருகிறார். ஐந்து முறை மாநில அரசின் விருது பெற்றவர்" என்று பெருமிதத்துடன் சொல்லி வருகிறார ரவீனா.












Click it and Unblock the Notifications