Lucky Bhaskar Ott: புயல் மாதிரி கலக்கிய துல்கர் சல்மானின் லக்கி பாஸ்கர் படம்.. ஓடிடி-யில் ரிலீஸ்
சென்னை: நடிகர் துல்கர் சல்மான் நடித்துள்ள லக்கி பாஸ்கர் திரைப்படத்தை தியேட்டரில் பார்க்காமல் மிஸ் பண்ணிய ரசிகர்களுக்காக ஓடிடியில் வெளியாகி இருக்கிறது. எந்த தளத்தில் வெளியாகி இருக்கிறது என்று விரிவாக பார்க்கலாம்.
மலையாள சூப்பர் ஸ்டார் மம்முட்டியின் மகன் துல்கர் சல்மான் வாயை மூடி பேசவும் படத்தின் மூலமாக தமிழில் அறிமுகமானார். அதற்கு முன்பு 2012 ஆம் ஆண்டு வெளியான செகண்ட் ஷோ படத்தின் மூலம் திரையில் அறிமுகம் ஆகி இருந்தார். முதல் படமே இவருக்கு தமிழில் நல்ல வரவேற்பை கொடுத்தது.

இந்த நிலையில் அடுத்ததாக மணிரத்தினம் இயக்கிய ஓகே காதல் கண்மணி படத்தில் ரொமான்டிக் ஹீரோவாக நடித்து ரசிகர்களை கவர்ந்திருந்தார். அதைத்தொடர்ந்து பல மொழிகளிலும் தொடர்ச்சியாக திரைப்படங்களில் நடித்துக் கொண்டிருக்கிறார்.
இந்த நிலையில் நடிகர் தனுஷ் நடித்த வாத்தி திரைப்படத்தை இயக்கிய வெங்கி அட்லூரி இயக்கத்தில் துல்கர் சல்மான் லக்கி பாஸ்கர் என்ற திரைப்படத்தில் நடித்திருந்தார். கடந்த அக்டோபர் 31ஆம் தேதி தீபாவளியை முன்னிட்டு இந்த திரைப்படமும் வெளியாகி இருந்தது. தீபாவளிக்கு அமரன், லக்கி பாஸ்கர் உட்பட நான்கு திரைப்படங்கள் வெளியாகி இருந்த நிலையில் அமரன் திரைப்படத்திற்கு அடுத்தபடியாக லக்கி பாஸ்கர் ரசிகர்களை கவர்ந்த வெற்றி படமாக மாறியது.

இந்த திரைப்படத்தில் ஸ்டார் மார்க்கெட் மோசடி கதைக்களமாக வைத்து உருவாக்கப்பட்டுள்ள நிலையில் குடும்ப ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது. அதனாலே 100 கோடி வரை வசூல் செய்தது. துல்கர் சல்மான் நடிப்பில் 100 கோடி வசூல் செய்த முதல் படம் இதுதான் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த திரைப்படம் இன்று முதல் ஓடிடியில் ஸ்ட்ரீம் ஆகி வருகிறது. அதுவும் netflix தளத்தில் தான் இன்று நவம்பர் 28ஆம் தேதி முதல் ஸ்ட்ரீம் ஆகி இருக்கிறது.












Click it and Unblock the Notifications