54 வயதில் 2வது திருமணம் செய்த துரந்தர் வில்லன் நடிகர்.. 8 வருட காதலுக்கு இப்போது அடையாளம்
சென்னை: பாலிவுட்டில் ஹீரோவாகவும், துரந்தர் படத்தில் வில்லனாகவும் கலக்கிய நடிகர் அர்ஜுன் ராம்பால் தற்போது தனது தனிப்பட்ட வாழ்க்கையில் புதிய அத்தியாயத்தை தொடங்கியிருக்கிறார். நீண்ட காலமாக காதலித்து வந்த தென் ஆப்பிரிக்காவில் சேர்ந்த மாடலும் பேஷன் டிசைனரும் ஆன கெப்ரியெல்லா டொமெட்ரியேட்ஸை கோவாவில் திருமணம் செய்து கொண்டிருக்கிறார். கடந்த பல வருஷங்களாக திருமணம் செய்து கொள்ளாமலே இருவரும் சேர்ந்து வாழ்ந்து வந்த 2 குழந்தைகளையும் பெற்றெடுத்த நிலையில் தற்போது தங்களுடைய உறவுக்கு சட்டபூர்வமாக அங்கீகாரத்தை கொடுத்துள்ளனர்.
8 வருட காதல்
நடிகர் அர்ஜுன் ராம்பால் மற்றும் கேப்ரியல்லா இருவரும் 2018 ஆம் ஆண்டு பரஸ்பர நண்பர்கள் மூலம் சந்தித்ததாகவும் சில மாதங்களுக்கு பிறகு காதலில் விழுந்ததாகவும் எனவே வெளியாகி இருந்தது. 2019 ஆம் ஆண்டில் இவர்களுக்கு முதல் மகன் பிறந்தார். அதற்கு பிறகு 2023 2வது மகனும் பிறந்தார். இப்படி திருமணம் செய்து கொள்ளாமல் குடும்பமாக வாழ்ந்து வந்த இருவரும் 2025 டிசம்பரில் ரியா சக்கரவர்த்தி இன் பாட்காஸ்டில் தாங்கள் நிச்சயதார்த்தம் செய்து கொண்டதை முதல் முறையாக அறிவித்தனர்.

ரிஜிஸ்டர் மேரேஜ்
அப்போது திருமணம் குறித்து கேட்கப்பட்டபோது கேப்ரியல்லா இப்போது திருமணமாகவில்லை என்று சொல்ல, உடனே அர்ஜுன் ராம்பால் நாங்கள் நிச்சயதார்த்தம் செய்து கொண்டோம் என்று சொல்லி அந்த விஷயத்தை அனைவருக்கும் தெரியப்படுத்தினார். அதற்கு பிறகு திருமணம் எப்போது என்று எதிர்பார்ப்பு ரசிகர்களிடம் இருந்து வந்த நிலையில் இப்போது கோவாவில் திருமணத்தை பதிவு செய்துள்ளனர்.
ஆகஸ்ட் 21 அன்று வடக்கு கோவாவில் உள்ள மபுசா துணை பதிவாளர் அலுவலகத்தில் அர்ஜுன் ராம்பாலும் திருமணத்தை பதிவு செய்தனர். நெருங்கிய நண்பர்கள் மட்டுமே இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டதாக தகவல்கள் வெளியாகி இருக்கின்றன. இருவரும் சாதாரண உடையிலே வந்து திருமணத்தை பதிவு செய்து இருக்கின்றனர்.
முதல் திருமணம்
அர்ஜுன் ராம்பாலின் வாழ்க்கையில் இது முதல் திருமணம் கிடையாது. முன்னாள் சூப்பர் மாடல் மெஹர் ஜெசியாவை 1998 ஆம் ஆண்டு திருமணம் செய்தார். சுமார் 20 வருஷம் இருவரும் திருமண வாழ்க்கையில் இருந்தனர். இவர்களுக்கு மகிஹா மற்றும் மைரா என்ற இரண்டு மகள்கள் உள்ளனர். 2018 ஆம் ஆண்டு இருவரும் பிரிவதாக அறிவித்த நிலையில் 2019 நவம்பரில் விவாகரத்து சட்டபூர்வமாக முடிவுக்கு வந்தது.
துரந்தர் பட நடிகர்
அதுபோல அர்ஜுன் ராம்பால் ஆரம்பத்தில் ஹீரோவாக நடிக்க தொடங்கி பிறகு வில்லனாகவும் நடித்துக் கொண்டு இருந்தார். சமீபத்தில் வெளியான துரந்தர் படத்தில் அவருடைய நடிப்பு ரசிகர்களிடம் கவனத்தைப் பெற்றது. அந்த படத்தின் வெற்றிக்கு பிறகு தான் அவருடைய தனிப்பட்ட வாழ்க்கை பற்றிய பேச்சு மீண்டும் அதிகரித்தது.


Click it and Unblock the Notifications
