கோயில் நிலத்தை விற்கலாமா .. சத்தியம் வாங்கிகிட்டாங்க ஈஸ்வரி அம்மா!
சென்னை: சன் டிவியின் அருந்ததி சீரியல் ரொம்ப பிரமாண்டம். இதுக்கான ப்ரோமோ கூட விதம் விதமா ஒளிபரப்பாகிட்டு இருக்கு.
அமெரிக்காவில் படிச்சுட்டு வர்றான் ஷண்முகம். அங்கேயே ஒரு பெண்ணைப் பார்த்து அவளை இங்க வந்து கல்யாணம் செய்துக்க சொந்த ஊருக்கு வர்றான்.
ஈஸ்வரி அம்மா குடும்பமே முருகன் பக்தர்கள்தான். மிகப்பெரிய முருகனை தங்கள் முருகன் கோயிலில் பிரதிஷ்டை பண்ணி இருக்காங்க

சூப்பர் செட்
முருகன் கோயில்,அதில் மலேசிய முருகன் மாதிரி பிரமாண்ட முருகன் சிலை, கடைகள்னு பிரமாதமா செட் போட்டு எடுத்து இருக்காங்க. தமிழ் கடவுள் முருகனையும் இந்த சீரியலில் காமிக்கறதுனால பார்க்க ஆவலா இருக்கு.

முருகன் கோயிலோட
சண்முகத்துக்கு வேஷ்டி கட்டிவிட்டு அழகு பார்க்கறாங்க ஈஸ்வரி அம்மா. அப்போதான் சண்முகம் சொல்றான்.. நான் என்னோட ஷேர் இடத்தை எல்லாம் விக்கறதுக்கு அமெரிக்காவில் இருந்தே இங்க இருக்க லாயர்கிட்ட பேசி முடிவு பண்ணிட்டேன் அம்மான்னு சொல்றான். அங்கேயே செட்டிலாகப் போறேன்..நீங்களும் என் கூட வந்துருங்கன்னு சொல்றான்

அதிர்ச்சி
ஈஸ்வரி அம்மா அதிர்ச்சியாகறங்க... உன் அண்ணன் கதிருக்கு கிடைச்ச வாய்ப்புத்தான் அமெரிக்கா போறது. அவன் போகமாட்டேன்னு சொன்னதாலதான். நீ அங்கே போனே..அதை மறந்துட்டு,அவனோட சேர்த்து வச்சு உன்னை பேசாத சண்முகம். நீ கோயிலோடு சேர்த்து நிலத்தை வித்துக்கோ . ஆனா,என்னை கூப்பிடாத..நான் வர மாட்டேன்னு சொல்றாங்க.

தெய்வானை
இதை தன்னுடன் வந்திருந்த பசங்க மூலமா தெரிஞ்சுக்கிட்ட தெய்வானை, சண்முகத்திடம் கோயிலோட சேர்த்து கோயில் நிலத்தை விக்கறதா கேள்விப்பட்டேன்.. தயவு செய்து அப்படி வித்துட்டாத சண்முகம். அதை நம்பித்தான் நூத்து கணக்கான குடும்பங்கள் இருக்கு.

எல்லாரும் நடுத்தெருவுக்கு
இப்படி செய்யாத சண்முகம்.. நாங்க எல்லாரும் திடீர்னு அனாதைகளாகிருவோம்..பிறந்ததில் இருந்தே அங்கதான் வாழ்ந்துகிட்டு இருக்கோம். நீ வித்துட்டா எல்லாரும் நடுத் தெருவுக்கு வந்துருவோம் சண்முகம்னு சொல்ல,குழந்தைகள் சண்முகத்தின் காலில் விழுந்து விக்கக்கூடாதுன்னு கெஞ்சறாங்க.

சண்முகம் சத்தியம்
இதைப் பார்த்த ஈஸ்வரி அம்மா,சண்முகம் நில்லு.. நீ ஆசைப்பட்டபடி நான் அமெரிக்கா வந்துடறேன் .ஆனா,நீ முருகன் கோயில்,அந்த கோயிலை சுத்தி இருக்கற இடத்தை விக்கக்கூடாது. விக்க மாட்டேன்னு சத்தியம் பண்ணு..நீ பிறந்ததிலிருந்து இதுவரைக்கும் உன்கிட்ட நான் எதுவும் கேட்டது இல்லைன்னு கையை நீட்டறாங்க.

சத்தியம் செய்யறான்
சண்முகமும் சத்தியம் செய்ய, தெய்வானை சந்தோஷமாகி ஈஸ்வரி அம்மாவை கை எடுத்து கும்பிடறா. உங்க குடும்ப விஷயத்துல நான் தலையிடறேன்னு நினைக்காதீங்கம்மா. அத்தனை குடும்பங்கள் உங்களுக்கு நன்றி கடன் பட்டு இருக்குமான்னு சொல்றா.

நான் இப்படி
நீ அப்படி சொல்றே...ஆனா, அத்தனை குடும்பங்களின் பாவ சாபத்தில் இருந்து என் பிள்ளை சண்முகத்தை நீ காப்பாத்தி இருக்கேம்மான்னு சொல்றாங்க.
திகில் சீரியல்னாலும், இப்படி நிறைய சென்டிமென்ட்ஸ் இருக்கறது பார்க்க நல்லாருக்கு.
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து!












Click it and Unblock the Notifications