சீரியலில் அறிமுகமாகும் நீயா நானா கோபிநாத்.. அதிரடியாக மாற்றப்பட்ட கதை.. இதுதான் கேரக்டராமே
சென்னை: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் நீயா நானா நிகழ்ச்சியின் மூலம் பிரபலம் அடைந்த கோபிநாத் முதல் முறையாக விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் சீரியலில் அறிமுகம் ஆகிறார்.
அதுவும் சீரியலில் கோபிநாத்தின் என்ட்ரியால் அதிரடியான மாற்றங்கள் நடக்கப்போகிறது என்று தெரிகிறது.

அதுபோல கெஸ்ட் ரோலில் கோபிநாத் கலந்து கொண்டு இருக்கிறாரா? அல்லது சீரியலில் தொடர போகிறாரா என்று பல்வேறு கேள்விகளும் குவிகிறது.
விஜய் டிவியில் 10 வருடங்களுக்கு மேலாக ஒளிபரப்பாகி வரும் நீயா நானா நிகழ்ச்சி இப்போது பலருடைய ஃபேவரைட் நிகழ்ச்சியாக இருந்து வருகிறது. இந்த நிகழ்ச்சியில் வெற்றிக்கு காரணம் இதை சிறப்பாக தொகுத்து வழங்கி பலருடைய நன்மதிப்பை பெற்ற கோபிநாத் என்பது பலருக்கும் தெரிந்த கதைதான்.
ஒரு பிரச்சனை நடைபெறுகிறது என்றால் உடனடியாக அதில் தன்னுடைய கருத்தை உடனடியாக கூறி இரண்டு தரப்பில் இருக்கும் பிரச்சனைகளுக்கு தகுந்த மாதிரி எந்த பக்கத்தில் சரியான கருத்து இருக்கிறதோ அங்கு தன்னுடைய ஆதரவை கொடுத்து எதிர்பக்கத்தில் இருப்பவர்களின் கருத்துகளையும் கேட்டு அவர்களுக்கு உடனடியாக பதிலடி கொடுப்பதுதான் கோபிநாத்தின் வழக்கமாக இருந்து வருகிறது.

அதனால்தான் இந்த நிகழ்ச்சிக்கு போட்டியாக எத்தனையோ ரியாலிட்டி நிகழ்ச்சிகள் வந்தாலும் இந்த அளவிற்கு எந்த நிகழ்ச்சிகளும் தாக்கு பிடிக்க முடியாமல் போய்க் கொண்டிருக்கிறது. கோபிநாத் நிகழ்ச்சி தொகுப்பாளராக மட்டுமல்லாமல் மோட்டிவேஷன் ஸ்பீக்கர் ஆகவும் இருந்து வருகிறார். பல கல்லூரி விழாக்களிலும் சிறப்பு விருந்தினராக கலந்து கொள்ளும் கோபிநாத் உடைய பேச்சு பலருக்கும் ரோல் மாடலாகவும் இருக்கிறது.
இந்த நிலையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் ஈரமான ரோஜாவே சீரியலின் வெளியாகி இருக்கும் ப்ரோமோவில் கோபிநாத் அந்த சீரியலில் என்ட்ரி கொடுத்து இருக்கிறார். இந்த சீரியலில் பிரியா நடத்தி வரும் முதியோர் இல்லத்தில் சர்வதேச முதியோர் தினம் கொண்டாடி கொண்டிருக்கின்றனர். அதில் சிறப்பு விருந்தினராக கோபிநாத் கலந்து கொண்டிருக்கிறார். இப்படியாக புது பிரமோ ஒன்று வெளியாகி இருக்கிறது.
சீரியல் கதைப்படி ஜீவாவை வீட்டை விட்டு தனியாக பிரியா பிரித்துக் கொண்டு வந்திருக்கிறார். காரணம் ஜீவா தன்னுடைய தங்கை காவியாவை காதலித்தது எல்லோருக்கும் தெரியவந்தது. ஆனாலும் அதற்குப் பிறகு காவியாவிற்கு ஒரு பிரச்சனை என்றால் ஜீவா உடனே உதவி செய்வது பிரியாவிற்க்கு பிடிக்கவில்லை. அதே நேரத்தில் ஜீவாவின் அத்தையும் ஜீவா மற்றும் காவியாவை சேர்த்து வைத்து பிரியாவிடம் போட்டுக் கொடுக்க இனி இந்த வீட்டில் இருந்தால் தினமும் இவர்கள் இருவரும் மீண்டும் சந்தித்துக் கொண்டு இருப்பார்களே என்று நினைத்து ஜீவாவை தனி குடித்தனம் கூட்டிட்டு போவதற்காக பிரியா முயற்சி செய்து கொண்டிருக்கிறார்.

கதை இப்படியாக போய்க்கொண்டிருக்கும் நிலையில் இன்றைய பிரமோவில் கூட ஒரு கூட்டு குடும்பம் சிதைவதற்கு மருமகள் தான் காரணம் என்று யாரும் முடிவுக்கு வர முடியாது. ஒரு தனி குடித்தனத்தில் கிடைக்கக்கூடிய முடிவெடுக்கும் அதிகாரம் சுதந்திரம் எல்லாவற்றையும் எதிர்பார்த்து வரும் பெண்ணுக்கு கூட்டு குடும்பத்தில் இதுவெல்லாம் கிடைக்காத போது இதில் சம்பந்தப்பட்ட கணவர்மார்கள் அதை அவர்களுக்கு செய்து கொடுக்காத போது தான் பெண்கள் தனி குடித்தனம் போகணும்னு நினைக்க போறாங்க என்று அதில் பேசியிருக்கிறார்.
தற்போது இந்த பிரமோவை பார்த்த ரசிகர்கள் பலர் கோபிநாத்துக்காகவே இந்த நிகழ்ச்சியை பார்ப்பதற்காக நாங்கள் ரெடி என்று காத்திருப்பதாக கருத்து கூறி வருகின்றனர். அதே நேரத்தில் அதிகமான ரசிகர்கள் இந்த ப்ரோமோவை பார்க்கும் போது கூட இது நீயா நானா ப்ரோமோ போலவே இருக்கிறதே என்றும் கூறி வருகின்றனர்.












Click it and Unblock the Notifications