என்னங்க சொல்றீங்க ஈரமான ரோஜாவே சீரியல் முடிய போகுதா!
சென்னை : ரசிகர்களுக்கு ரொம்பவே பிடித்த ஈரமான ரோஜாவே சீரியல் முடியப் போகிறது என்று அந்த சீரியலின் நடிகை வெளியிட்ட போட்டோவை பார்த்து அதிர்ச்சியாகியுள்ளார்கள் ரசிகர்கள்.
நம்பவே முடியலையே இப்படி ஒரு வார்த்தையை சொல்லிட்டீங்களே. இன்னும் கொஞ்ச நாள் இந்த சீரியலை கொண்டு போய் இருக்கலாமே என பீல் பண்ணும் ரசிகர்கள் மனதை பிழிகிறார்கள்.
அந்த சீரியலின் அகிலா வெளியிட்ட போட்டோவை பார்த்து அதிர்ச்சியில் கவலையோடு கமெண்ட் போடும் ரசிகர்களின் பீலிங்கை பார்க்கும் போதுதான் இந்த சீரியலை ரசிகர்கள் எவ்வளவு ரசித்து இருக்கிறார்கள் என்று தெரிகிறது.

திடீரென ஏன் இப்படி ஒரு முடிவு
விஜய் டிவியில் ஒளிபரப்பாகிவரும் ஈரமான ரோஜாவே சீரியல் திடீரென்று இப்போது முடியப்போகிறது என்று கேள்விப்பட்டதுமே ரசிகர்கள் பெரிய ஷாக்கில் இருக்கின்றனர். இந்தநிலையில் அந்த சீரியலில் நடிக்கும் சாய் காயத்ரி தன்னுடைய இன்ஸ்டாகிராமில் ஒரு சில போட்டோஸ்களை அப்லோட் பண்ணி இருக்கிறார். அதில் அனைத்தும் முடிந்தது! இன்று கடைசி நாள் ஈரமான ரோஜாவே படப்பிடிப்பு. ரொம்பவே எல்லோரையும் மிஸ் பண்ணுகிறோம் என்றும் கூறியிருக்கிறார். இதை கேள்விப்பட்டதும் இதை பார்த்ததும் ரசிகர்கள் தங்களுடைய வருத்தங்களை தெரிவித்து வருகின்றனர். நாங்களும் உங்களை ரொம்பவே மிஸ் பண்ணுகிறோம் அதுவும் டாம் அண்ட் ஜெர்ரி ஜோடியை நாங்கள் இழப்போம் என்று தங்களுடைய கவலைகளை தெரிவித்திருக்கின்றனர்.

மனதில் நின்ற கேரக்டர்
இந்த சீரியல் 2018 ஆம் ஆண்டு ஜூலை மாதம் ஒன்பதாம் தேதி முதல் விஜய் டிவியில் ஒளிபரப்பப்பட தொடங்கியது. இப்ப வரைக்கும் இந்த சீரியல் டிஆர்பி ரேட்டிங்கில் நல்ல இடத்தில் தான் வலம் வந்து கொண்டிருக்கிறது. அதனால் தான் இதற்கு ரசிகர்கள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றனர். இந்த சீரியலில் பல நடிகர்கள் நடித்து இருந்தாலும் வெற்றி மலர் ஜோடியையும் ,புகழ் அகிலா ஜோடியையும் அனைவருக்குமே பிடிக்கும். ஒருவருக்கு ஒருவர் யாருமே சளைத்தவர்கள் அல்ல என்று தங்களுடைய காதலும் சிறு சிறு சண்டைகளாலும் ஓவர்ஆக்டிங் இல்லாமல் நடித்து வருகின்றனர் . இவர்களின் நடிப்பை பார்ப்பதற்காகவே பலர் இந்த சீரியலை தொடர்ந்து பார்த்துக் கொண்டிருக்கின்றனர்.

மாறாத அன்பு
ரசிகர்களின் பேராதரவோடு இப்ப வரைக்கும் இந்த சீரியல் வெற்றிகரமாக சென்று கொண்டிருந்தாலும் திடீர் என்று இந்த சீரியலை நிறுத்த போகிறார்களாம். ஏற்கனவே இப்ப தான் இந்த சீரியலில் விறுவிறுப்பு கூடியிருக்கிறது. வெற்றிக்கும் மலருக்கும் அழகான ஆண் குழந்தை பிறந்து வீட்டில் சந்தோஷம் தவழும் நிலையில் புகழும் அகிலாவும் தங்களுடைய காதலை மனதிற்குள் வைத்துக் கொண்டு வெளியில் பிகு பண்ணி கொண்டிருக்கின்றனர். இந்த டாம் அண்ட் ஜெர்ரி சண்டை கூட நன்றாகத்தான் இருக்கிறது என்று ரசிகர்களும் ரசித்து வருகின்றனர். ஒருவர் விட்டுக் கொடுத்தால் இன்னொருவர் விடாப்பிடியாக இருப்பது சிலருக்கு கடுப்பாக இருந்தாலும் அழுகை சீனுக்கு இது எவ்வளவோ பெட்டர் என்று ரசித்து வருகின்றனர்.

பீலிங்ஸ் ஆறாக ஓடுதே
விறுவிறுப்பான கதைக்களத்துடன் ஜாலியாக சென்று கொண்டிருந்த இந்த சீரியலை ஆர்வமுடன் எதிர்பார்த்து கொண்டிருக்கும் ரசிகர்களிடம் கடைசி நாள் சூட்டிங் போட்டோ போட்டு ஷாக் கொடுத்துவிட்டனர். அதுவும் உண்மையிலேயே இது சீரியலின் கடைசி சூட்டிங் போட்டா தானா அல்ல சும்மா விளையாடுறாரா என்று பலர் நம்பாமல் கேட்டு வருகின்றனர். ஆனால் அதிகமானோர் இந்த சீரியலை முடிப்பதால் தங்களுடைய மனக்கவலைகளை ஏக்கத்தோடு கமெண்டுகளில் கொட்டி வருகின்றனர். என்ன இருந்தாலும் ஜாலியாக சென்று கொண்டிருந்த இந்த சீரியலை இப்படி முடிக்க போறீங்களே என்று தான் பலர் சண்டை இடுகின்றனர்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications