Eeramana Rojave Serial: வாங்க பழகலாம்னும் கூப்பிட்டுக்கறாங்க கடுப்பா இருக்குதுங்க...!
சென்னை: விஜய் டிவியின் ஈரமான ரோஜாவே சீரியல் கதை ரொம்ப எளிமையாக இருப்பதால் அனைவரும் விரும்பிப் பார்க்கும் சீரியலாக இது இருக்கிறது.
கட்டின பெண்டாட்டியை பிரிஞ்சு இருந்தால் அல்லது பெற்றோர் பிரித்து வைத்தால் அவர்கள் படும் பாடு என்னவாக இருக்கும் என்பதை அவர்களுக்கே உரிய பாணியில் எளிமையாக சொல்லி இருக்கிறார்கள்.
அதாவது இதன் கதை உங்கள் வீட்டில் இல்லை எங்கள் வீட்டில் அன்றாடம் நடக்கும் நிகழ்ச்சிகளை இங்கு காட்சி படுத்தி காண்பிப்பதால் எல்லாருக்கும் பிடிக்கிறது போலும்!

அம்மா பிள்ளைகள்
அம்மா பிள்ளைகள் நன்றாக வாழ வேண்டும் என்றுதானே நினைப்பார்கள். ஆனால், இந்த சீரியலில் சீர் வரிசை செய்யலை என்றும், அதோடு 20 லட்சம் ரூபாய் தனக்கு தெரியாமல் சம்பந்தி வீட்டுக்கு கணவரும் மாமனாரும் சேர்ந்து கொடுத்துட்டாங்க என்றும் கோபத்தில் இருக்காங்க மாமியார். விளைவு மருமகள்களை பிறந்த வீட்டுக்கு அனுப்பி வச்சுடறாங்க.

தைரியம் இல்லையே
என்னதான் வெற்றிக்கு பொண்டாட்டி மேல் ஆசை இருந்தாலும், அம்மாவை எதிர்த்து பேசி, பொண்டாட்டியை வீட்டுக்கு அழைச்சுக்கிட்டு வர அளவுக்கு தைரியமில்லையே..அப்படி என்ன அம்மா சென்டிமெண்ட் கட்டிப்போட்டு வச்சு இருக்குதோ தெரியலை. அம்மாவையும், பொண்டாட்டியையும் பேலன்ஸ் பண்ண தெரிஞ்சுக்கறதே ஒரு கலை போலும்.இல்லேன்னா இவங்க மாதிரி பொண்டாட்டியை பிரிஞ்சு திண்டாட வேண்டியதுதான்.

இப்படியும் மருமகள்கள்
அம்மா மலரை திட்டிட்டாங்க என்று கோபித்துக் கொண்டு, வீட்டை விட்டு வெளியேறி போறான் வெற்றி. வெற்றியை காணலைன்னு சொல்லி அதுக்கும் மாமியார் மலருக்கு போன் செய்துதான் திட்டறாங்க. இந்த காலத்தில் மாமியார் திட்டி கேட்கும் மருமகள்களும் இருக்கிறார்கள் சீரியல்களில். .பொண்டாட்டி மலரின் நினைவு வந்துவிட வீட்டுக்கே போயி பார்த்துடலாம் என்று கிளம்பறான் வெற்றி

திருட்டுத் தனமாக
ராத்திரி நேரத்தில் எல்லாரும் தூங்கிய பின்னர் மலரைப் பார்த்து பேசலாம் என்று வீட்டுக்குள் திருடன் போல வருகிறான். ஒவ்வொருத்தரையா போர்வையை விலக்கிப் பார்த்துட்டு கடைசியா மலரிடம் வருகிறான்.அப்போதும் காதலர்கள் போல வசனம் பேசுகிறார்கள். சேர்ந்து வாழ்வது குறித்து பேசாமல் பார்க்கமல் இருக்க முடியலை..என்னை பாரு தினமும் என்னுடன் பேசுன்னு பேசிக்கறாங்க.
வாங்க பழகலாம்னும் கூப்பிட்டுக்கறாங்க கடுப்பா இருக்குதுங்க...!
-
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம்












Click it and Unblock the Notifications