Eeramana rojave serial: அந்த பக்கம் திரும்புங்க குளிக்கறதை போயி... சிணுங்கிய மலர்!

Subscribe to Oneindia Tamil

சென்னை: விஜய் டிவியின் ஈரமான ரோஜாவே சீரியலில் வரதட்சணை, சீர் வரிசை பிரச்சனையால் மலர் வெற்றி, புகழ் அகிலா ஆகிய ஜோடிகள் பிரிந்து பிறந்த வீட்டில் இருக்கிறார்கள்.

என்னதான் அவசர கல்யாணம், கட்டாய கல்யாணம் என்று இரு அக்கா தங்கைகள், இரு அண்ணன் தம்பிகளை கல்யாணம் செய்துகொண்டாலும், இரு ஜோடிகளும் இன்னும் சேர்ந்து வாழ ஆரம்பிக்கவில்லை.

இதில் மலர் வெற்றி ஜோடி கிட்டத்தட்ட காதலிக்கும் நிலைக்கு வந்துவிட, இடையில் இந்த சீர் வரிசை, வரதட்சணை, கடன் வாங்கியது என்று பிரச்சனை வந்துவிடுகிறது. இதனால் மாமியாரால் மருமகள்கள் பிறந்த வீட்டுக்கு அனுப்பி வைக்கப்படுகிறார்கள்.

வெற்றி மலர்

வெற்றி மலர்

வெற்றி மலர் இருவரும் இப்போதுதான் காதலராகி இருந்த நேரத்தில், வெற்றியால் மலரின் பிரிவை தாங்கிக்க முடியலை. அவள் பள்ளிக்கு வேலைக்கு போகும்போது அவள் பின்னால் அலைவது, என்று சீன் போடுகிறான். மலர் இனிமே என் பின்னால் இப்படி வராதீங்க. இதுக்கும் உங்க வீட்டில் எங்களைத்தான் குத்தம் சொல்வாங்கன்னு சொல்றா.

அனுமதி மாமனாரிடம்

அனுமதி மாமனாரிடம்

வெற்றி நேராக போயி, மாமனாரிடம் மாமா நான் உங்க வீட்டு மாப்பிள்ளை. அந்த உரிமையில் உங்க வீட்டுக்கு நான் வந்து போகலாமான்னு கேட்கறான். என்ன மாப்பிள்ளை இப்படி சொல்லிட்டீங்க. இந்த வீட்டுக்கு வர உங்களுக்கு எல்லா விதத்திலும் உரிமை இருக்கு.தினம் வாங்க மாப்பிள்ளைன்னு சொல்றார்.

காபி அப்பா

காபி அப்பா

முகத்தை மறைத்துக் கொண்டு பேப்பரை படித்துக்கொண்டு இருந்த அப்பாவிடம் மலர் அப்பா இந்தாங்க காப்பின்னு சொல்ல, பேப்பரை எடுத்தால் வெற்றி உட்கார்ந்து இருக்கான். இந்த வீட்டுக்கு என்னை யாரும் வர கூடாதுன்னு சொல்ல முடியாதுன்னு சொல்றான். மலர் ஒன்றும் பேச முடியாமல் சிரிச்சுகிட்டே போயிடறா.

மலர் குளியல்

மலர் குளியல்

மலர் மற்ற டீச்சர்களுடன் சேர்ந்து சாப்பிட்டு கொண்டு இருக்க, இங்கு வயற்காட்டில் வெற்றி மலரை நினைச்சுகிட்டு இருக்கான். அப்போது மலர் தொட்டியில் குளிக்க ஆசைப்பட்டு, மோட்டாரை ஓடவிட்டு சொன்னது.தொட்டி தண்ணீருக்குள் மூழ்கி மூழ்கி குளித்தது. வெட்கப்பட்டு குளிக்கறதை பார்க்காதீங்கன்னு சொன்னது எல்லாத்தையும் நினைக்கிறான்.

மாப்பிள்ளை என்ன

மாப்பிள்ளை என்ன

என்ன மாப்பிள்ளை கூப்பிட கூப்பிட பேசாம நிக்கறேன்னு நண்பன் கேட்க, மலர் நினைவு வந்துருச்சுன்னு சொல்றான். ரொம்ப மலரை நினைக்காதே..அவளுக்கு புறை ஏறும்னு சொல்றான். இங்கு பார்த்தால் சாப்பிட முடியாமல் மலருக்கு புறை ஏறுது..

உங்க வீட்டுக்காரர் உங்களை நினைக்கிறார் டீச்சர்னு ஒரு டீச்சர் சொல்ல, அப்படியா சொல்றீங்கன்னு கேட்கறா. ஆமாம் டீச்சர் இப்போ வேணும்னா உங்க வீட்டுக்காரருக்கு போன் செய்து கேட்கறேன் பாருங்கன்னு சொல்லி போனை போட்டு கேட்டால், நிஜமா மலருக்கு புறை ஏறுச்சான்னு கேட்கிறான் வெற்றி.

லவ் எப்படி ஒர்க் அவுட் ஆகுது பாருங்க!

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+