ச்சீ..கண் கூசும் லிப் லாக் முத்தக்காட்சி..இதுல இந்த ட்விஸ்ட் வேற..பிரபல சீரியலை திட்டும் ரசிகர்கள்

Subscribe to Oneindia Tamil

சென்னை: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் ஈரமான ரோஜாவே சீரியலில் வெளியான முதல் இரவு காட்சிகள் குறித்து சமூக வலைத்தளத்தில் நெட்டிசன்கள் திட்டி வருகிறார்கள்.

இந்த சீரியலில் ரம்யா மற்றும் ஜேகே இருவருக்கும் நடைபெற்ற முதல் இரவு குறித்த சமூக வலைத்தளத்தில் அதிகமான மீம்ஸ்கள் கிளம்பி வருகிறது.

டிவியில் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை பலரும் ஒன்றாக பார்க்கும் சீரியலில் இந்த மாதிரி முத்த காட்சிகள், முதலிரவு காட்சிகள் வருவது அபத்தம் என்று நெட்டிசன்கள் திட்டுகிறார்கள்.

Eeramana rojave serial season 2 Episode Ramya and JKs first night Fans are cursing

சின்னத்திரை சீரியல் என்றாலே வீட்டில் இருக்கும் குடும்ப பெண்கள் மட்டும்தான் ஒரு காலத்தில் பார்த்து வந்தனர். ஆனால் இப்போது இருக்கும் சூழ்நிலையில் கையில் இருக்கும் மொபைல் போனில் அனைவருமே சீரியல் பார்த்துக் கொண்டிருக்கின்றனர். அந்த வகையில் நாளுக்கு நாள் சீரியல்களும் அதிகரித்துக் கொண்டே இருக்கிறது.

அதே நேரத்தில் பல சீரியல்களில் அரைத்த மாவு கதை தான் அரைக்கப்பட்டு வருகிறது. ஒரு சேனலில் எடுக்கப்படும் கதை கொஞ்சம் வெற்றியடைய தொடங்கியதும் மறு சேனலில் அதற்கு போட்டியாக அதேபோல கதை தொடங்கி விடுகிறார்கள். தற்போது சின்ன திரையில் அதிகமாக ஏழை குடும்பத்தைச் சார்ந்த கதாநாயகி பணக்கார வீட்டு கதாநாயகனுக்கும் இடையில் ஏற்படும் மோதல்கள் பிறகு இருவருக்கு விருப்பம் இல்லாமல் நடக்கும் திருமணம் திருமணத்திற்கு பிறகு இருவரும் சேர்ந்து வாழ்வார்கள்.

இதுதான் இப்போது பல சேனல்களில் எடுக்கப்படும் பல சீரியல்களின் கதை கருவாக இருக்கிறது. இதுவெல்லாம் ஒரு கதையா என்று வீட்டில் இருக்கும் ஆண்கள் மற்றும் சீரியல் பார்க்காத ரசிகர்கள் கூட நொந்து போய் இருக்கும் நிலையில் இப்போது அதற்கு ஒரு படி மேலே போய் முதலிரவுக்கு காட்சிகளையும் அப்பட்டமாக டிவி சீரியல்களில் பாட்டு போட்டு கொண்டாடிக் கொண்டிருக்கின்றனர். அதிலும் கட்டி பிடித்தல், முத்தக்காட்சிகள் என இவர்கள் செய்யும் அலும்பல்கள் பார்க்க முடியவில்லை என்று பல பொது நல விரும்பிகள் கருத்து தெரிவித்து வருகிறார்கள்.

Eeramana rojave serial season 2 Episode Ramya and JKs first night Fans are cursing

அதற்குக் காரணம் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் ஈரமான ரோஜாவே சீசன் 2 தான். இந்த சீரியலில் ஜேகே மற்றும் ரம்யா கல்யாணம் சமீபத்தில் நடைபெற்றது. அம்மாவின் எதிர்ப்பையும் மீறி ஜேகேவை ரம்யா திருமணம் செய்து கொண்டார். ஜேகே தன் மீது வைத்திருக்கும் காதலை உணர்ந்து கொண்ட ரம்யா தான் இத்தனை நாட்களாக காதலித்து வந்த பார்த்திபனின் காதலை தூக்கி எறிந்து விட்டு ஜேகேவை மனதார ஏற்றுக் கொண்டிருக்கிறார்.

இவர்களுடைய முதல் இரவு காட்சி கிளுகிளுப்பாக எடுக்கப்பட்டிருக்கிறது. தற்போது அதற்கான ப்ரோமோவும் வெளியாகி இருக்கிறது. இதனை குடும்பத்தோடு பார்க்கும் ரசிகர்கள் முகம் சூளித்து திட்டி தீர்த்து வைக்கின்றனர். அந்த அளவிற்கு அந்த வீடியோவில் லிப்லாக் காட்சிகளும், கட்டிப்பிடித்தலும் அளவுக்கு அதிகமான ரொமான்ஸோடு இருக்கிறது என்று நெட்டிசன்கள் திட்டி வருகிறார்கள். தற்போது மீம்ஸ்களில் கூட இந்த சீரியலின் முதல் இரவு காட்சிகள் தான் இடம் பிடித்திருக்கிறது.

காரணம் இந்த சீரியலில் கதாநாயகன் ஜீவா மற்றும் பார்த்தி இருவருக்கும் கூட இன்னும் முதலிரவு நடக்கவில்லை ஆனால் வில்லன் ஜேகே விற்கு பிரம்மாண்டமாக முதலிரவு நடக்கிறதே என்று பலர் கருத்து தெரிவித்து வருகிறார்கள். அது மட்டும் அல்லாமல் சில எபிசோடுகளுக்கு முன்பு ஜீவா மற்றும் பார்த்தி இருவருக்கும் இந்த மாதிரி தான் ரொமான்ஸ் முதலிரவு ஏற்பாடு செய்து வீடியோக்களை வெளியிட்டு இருந்தனர். அப்போதும் நெட்டிசன்கள் திட்டி இருந்தார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+