Eeramana Rojave Serial: சப்பை மூக்கி ஜம்முன்னு கிளம்பி இங்கே நிக்கறாளே!
சென்னை: விஜய் டிவியின் ஈரமான ரோஜாவே சீரியலில் அண்ணன் தம்பி, அக்கா தங்கையை கல்யாணம் செய்துக் கொள்கிறார்கள். இருவருக்கும் இது எதிர்பாராத கல்யாணம்தான்.
அண்ணன் வெற்றி, அக்கா மலர் ஜோடியின் கல்யாணம் வாழக்கை இன்னும் ஆரம்பிக்கவில்லை என்றாலும், அவர்களுக்குள் இப்போது காதல் இதமாக மலர்ந்து இருக்கிறது.
தம்பி புகழ், தங்கை அகிலாவின் கல்யாண வாழ்க்கையும் இன்னும் ஆரம்பிக்கவில்லை என்றாலும்,இருவருக்குள்ளும் சுகமான சண்டைகள் அரங்கேறுவது வியூவர்ஸுக்கு பிடிச்சுதான் இருக்குன்னு சொல்லணும்.

பிரிவு வரதட்சணை
வரதட்சணை கொடுக்கவில்லை என்பதால், மாமியார் இரு ஜோடிகளை பிரிச்சு, மருமகள்களை பிறந்த வீட்டுக்கு அனுப்பி வச்சுடறாங்க. இந்த நிலையில்தான் இரு பெண்களின் கணவன்மார்களும் மனைவியை ரொம்ப நேசிக்கிறாங்க. மலர் என்னன்னா சாப்பாடு சமைச்சு விவசாயம் பார்க்கும் கணவனுக்கு ஆசையா சாப்பாடு எடுத்துக்கிட்டு வர்றா.

என்ன நாள்
மலர் அடுத்த வாரம் ஒரு நாள் வருந்து என்ன நாள் சொல்லு பார்ப்போம்னு வெற்றி கேட்க, என்ன நாள்னு இவள் திருப்பி கேட்கிறாள்.இவ்ளோதானா நம்ம வாழ்க்கைன்னு சலிச்சுக்கறான் வெற்றி. என்னங்க இதை மறப்பேனா கல்யாண நாள்னு சொல்றா.யாருக்கு? மொட்டையா சொன்னா எப்படின்னு கேட்கிறான்.உங்களுக்குன்னு கையை காண்பிக்கிறாள்.அப்போ நான் யார் கழுத்திலே தாலி கட்டினேனேனோ தெரியலையேன்னு இவன் சொல்ல, பாருங்க.. இப்படி எல்லாம் பேசக் கூடாது. உங்களுக்கும் எனக்கும் கல்யாணம் ஆன நாளுங்கன்னு சொல்றான்.

மலர் சேலை
மலர் நீ கட்டி இருக்கும் இந்த ப்ளூ கலர் சேலை நல்லாயிருக்கு. வந்த உடனே சொல்லணும்னு நினைச்சேன். நீ அதை நான் சொல்லுவேன்னு செய்த சேட்டைகள் ரொம்ப பிடிச்சு இருந்துச்சு. அதனால ரசிச்சுட்டு மெதுவா சொல்லலாம்னு நினைச்சேன்னு சொல்றான்.அவன் சாப்பிட்டுட்டு எழுந்து போக, அவன் மிச்சம் வைத்திருந்த சாப்பாட்டு பருக்கைகளை எடுத்து சாப்பிட வாயருகே கொண்டு போனவள்.எப்போ என்னை உனக்கு பிடிச்சு,காதல் வருதோ,அப்போதான் இதை நான் சாப்பிடுவேன்னு சொல்லிக்கறா.
அவன்தான் ராத்திரி நேரம் வந்து என் கூட பேசாம இருக்காதே மலர். உன்னை பார்க்காம பேசாம இருக்கமுடியாதுன்னு சொல்லி வாங்க பழக்கலாம்னு கூப்பிட்டுக்கிட்டு காதல் பேசினாங்க. இப்போ என்னடானா இன்னும் காதல் வரலை வரட்டும், எச்ச சோறு சாப்பிடலாம்னு சொல்லிக்கறா. ஒண்ணும் புரியலை.

புகழ் அகிலா
இங்கே புகழ் அகிலா ரெண்டு பேரும் பூனையும், எலியும் போல சண்டை போட்டுக்கொண்டு இருந்தாலும் காதல் மலர்வது நன்றாக இருக்கிறது. அவன் வண்டியில் வந்து கொண்டு இருக்கும்போது, பஸ்சுக்காக காத்துக்கொண்டு இருக்க, சப்பை மூக்கி எதுக்கு இங்கே நிக்கிறான்னு நினைச்சு எதுக்கு நிக்கறேன்னு கேட்கறான். பஸ்ஸுக்கு நிக்கறேன்னு சொல்ல, பஸ்ஸு பஞ்சராகி நின்னு போச்சு.வராதுன்னு சொல்லிட்டு போனவன் திரும்பி வந்து வாடி சப்பை மூக்கி உன்னை கொண்டு போயி இறக்கி விட்டுடறேன்னு சொல்றான்.
போடா முட்டை போண்டான்னு சொல்லி வண்டியில் எறிக்கறா பார்த்தால் எதிரில் நாத்தனார் சைக்கிளில் வந்துகிட்டு இருக்கிறாள். இப்போது புகழ் பயப்படுவானா, தைரியமா பொண்டாட்டியை வண்டியில் ஏத்திக்கிட்டு போவானா?
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications