Eeramana rojave serial: மீசை வச்ச மாமா உன் மேல் ஆசை வச்சேண்டா... அடடா அடடா!
சென்னை: நடு காட்டில் இளம் ஜோடி.. டென்ட் கொட்டகை... எரியும் நெருப்பு என்று இந்த சூழ்நிலை மூடில் இருப்பவர்களுக்கும், அதை பார்ப்பவர்களுக்கும் என்ன தோன்றும்?
சும்மா ஜிவ்வுன்னு ஏறாது காதல் போதை.. அது மட்டுமா? கூடவே கொடியிலே மல்லிகைப் பூ மணக்குதே மானே என்று இசை ஞானியும் சேர்ந்துக் கொண்டால் எப்படி இருக்கும்.
அப்படித்தான் இருக்கிறது நடு காட்டில் மாட்டிக்கொண்ட மலர் வெற்றியின் ஜோடியின் கதகதக்கும் காதல் நினைவுகள்.

கல்யாண காதல்
மலர் வெற்றியின் காதல் என்பது கல்யாண காதல் என்பது போல கல்யாணத்துக்குப் பிறகு இருவரும் காதலிக்கிறார்கள். ஆனால், கல்யாணமாகி ஒரு வருடமாகியும் இருவரும் இன்னும் ஒன்று சேரவில்லை. இதில் வரதட்சணை பிரச்சனையால் பிரிந்து வேற இருக்கிறார்கள். இந்த நேரம் பார்த்து ஏற்காடு டூர் கூடி வருகிறது.

காட்டு புராஜெக்ட்
ரிசார்ட்டில் நடு காட்டில் ஜோடிகளை தனி ஜோடிகளாக அங்கங்கு விட்டுவிட்டு, காலையில் ரிசார்ட் வந்து சேர வேண்டும் என்கிற டாஸ்க். தேவையானதையும் கொடுத்து விட்டுப் போகிறார்கள். அப்போதுதான் மலர் வெற்றி ஏற்கனவே ஒருத்தருக்கு ஒருத்தர் காதல் போதையில் இருக்க இரவு வந்துவிடுகிறது.

கொட்டகை அமைத்து
டென்ட் கொட்டகை அமைத்து விறகு போட்டு தீ மூட்டி இருவரும் ஒருவரை ஒருவர் நோக்கிக் கொண்டு இருக்க, பிடிச்ச பொண்ணோட இப்படி நடு காட்டில் என்று வெற்றி ஆரம்பிக்க, மாமா யார் மாமா பிடிச்ச பொண்ணுன்னு குசும்பாக கேட்கிறாள் மலர். என்ன மலர் நீதான் மலர் அதுன்னு காதல் போதையில் சொல்கிறான் வெற்றி.

ஒரு பாட்டு
சரி மாமா இந்த நேரத்தில் ஒரு பாட்டு போட்டால் எப்படி இருக்கும் இல்லை மாமான்னு கொஞ்சுகிறாள். கரெக்ட் மலர்..நான் நினைச்சேன் நீ சொல்லிட்டே என்று சொல்லும் வெற்றி, செல்போனை எடுத்து பாட்டை ஆன் செய்கிறான். அந்த பாட்டுத்தான் கொடியிலே மல்லிகைப் பூ மணக்குதே மானே என்கிற பாடல்...அது ஒலிக்குது. காட்சி என்னவோ மவுனராகம், பாட்டு என்னவோ கடலோர கவிதைகள்!

மாமா உன்மேல
டென்ட் கொட்டகையில் படுத்து வெற்றி தூங்கிவிட அவனை ரசித்து பார்க்கிறாள் மலர். அப்போதுதான் வெற்றியின் மீசையை முறுக்கிவிட்டு, மீசை வச்ச மாமா உன் மேல ஆசை வச்சேண்டா என்று சொல்லி, இப்படியே உன்னை பார்த்துகிட்டே இருக்கணும் போல இருக்கு மாமான்னு புலம்புகிறாள்.
-
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம்












Click it and Unblock the Notifications