Eeramana Rojave Serial: அகிலாவா...எந்த அகிலா? சப்பை மூக்கின்னு சொல்லு!

Subscribe to Oneindia Tamil

சென்னை: விஜய் டிவியின் ஈரமான ரோஜாவே சீரியலில் வரதட்சணைபிரச்சனை தம்பதிகளை பிரிச்சு வைத்து, அவர்களை வேதனைக்கு உள்ளாக்கி வருகிறது.

வெற்றிக்கு அக்கா மலரையும்,பு கழுக்கு தங்கை அகிலாவையும் கல்யாணம் செய்து வைக்க நேரிடுகிறது. ஆனால், சீர் செனத்தி எதுவும் ரெண்டாவது பொண்ணுக்கு உடனடியாக செய்து போட முடியவில்லை பெண் வீட்டாரால்.

மறு வீட்டு அழைப்புக்கு செய்து போடுகிறோம் என்று சொல்கையில் பெரிய இக்கட்டில் மாட்டிக்கறார் பெண்களின் அப்பா. அதற்குண்டான 20 லட்சம் ரூபாய் பணத்தையும் மாப்பிள்ளைகள் அப்பா மனைவிக்கு தெரியாமல் கொடுத்து உதவுகிறார்.

விஷயத்தை அஞ்சலி

விஷயத்தை அஞ்சலி

விஷயத்தை அஞ்சலி மாப்பிள்ளையின் அம்மா,அக்காக்களிடம் சொல்லிவிட பெரிய பூதாகரமாகி விடுகிறது இந்த விஷயம். ஊருக்கே பெரிய குடும்பம் மணப்பெண்ணின் அப்பா வீட்டுக்கு நடந்தே போயி திட்டித் தீர்த்து அவமானப்படுத்தி விட்டு, வந்துடறாங்க. மருமக பெண்களையும் வாழா வெட்டியாக அவங்க வீட்டுக்கே அனுப்பி வச்சுடறாங்க.

மலர் வெற்றி

மலர் வெற்றி

முதலில் வெற்றியின் அண்ணனைத்தான் மலர் காதலிச்சு கல்யாணம் செய்துகொள்வதாக இருந்தது. கல்யாணத்துக்கு முதல்நாள் மாப்பிள்ளை இறந்து விட, உடனடியாயாக தாலி கட்டியவன்தான் வெற்றி. ஒரு வருடத்துக்குள் வெற்றிக்கும், மலருக்கும் காதல் வந்து ஒரு வழியாக நெருங்க ஆரம்பிப்பதற்குள் இந்த பிரச்சனை.

புகழ் அகிலா

புகழ் அகிலா

அகிலாவை கல்யாணம் செய்துக்க இருந்தவன், அகிலாவின் உடை மாற்றும் வீடியோவை திருட்டுத்தனமாக எடுத்து மாப்பிள்ளையிடம் காண்பிக்க கல்யாணம் நின்னு போகுது. அப்போது அதே மேடையில் உடனடியாக தாலி கட்டியவன் முதல் மாப்பிள்ளை வெற்றியின் தம்பி புகழ். அவனுக்கும் அகிலா மீது இன்னும் நெருக்கம் வரவில்லை.எப்போது பார்த்தாலும் குடிச்சுட்டு வரும் புருஷன் புகழை திட்டி திட்டி திருத்தி இப்போது ஃபூட் ஹோம் டெலிவரி செய்யும் வேலை பார்க்கிறான்.

நினைத்து ஏங்க

நினைத்து ஏங்க

அக்கா மலர் புருஷனை நினைத்து ஏங்கிக் கொண்டு இருக்க, தனது புருஷன் புகழுக்கு போன் செய்கிறாள் அகிலா. புருஷனுக்கு போன் செய்துட்டு, நான்தான் அகிலா பேசறேன்னு சொல்ல, ஹாய் சொல்லு அகிலா... கடைசியா ஸ்கூல் படிக்கும்போது பார்த்தது.இப்போதுதான் என் நினைவு வந்துச்சான்னு வேணும்னே நடிக்கிறான்.

சப்பை மூக்கி

சப்பை மூக்கி

நான் அகிலா பேசறேன்.. உன்க பொண்டாட்டியா பக்கத்துல உட்கார்ந்து கழுத்துல தாலியை வாங்கிக்கிட்டேனே அந்த அகிலான்னு சொல்றா. ஓ... சப்பை மூக்கின்னு சொன்னாத்தானே எனக்கு தெரியும்.எனக்கு தெரிஞ்ச ஒரே சப்பை மூக்கி நீதான்னு சொல்றான்.இப்படி இவங்க வாழ்க்கை தமாஷா போயிகிட்டு இருந்தாலும், வரதட்சணை கொடுமையால் இப்போ அம்மா வீட்டில் பெண்கள் இருப்பது என்பது எத்தனை கொடுமை!

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+