விஜய் பேசும்போது எமோஷனலான திரிஷா.. கண்கலங்கி கையெடுத்து கும்பிட்ட எஸ்.ஏ சந்திரசேகர்

Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழக அரசியல் வரலாற்றில் முக்கியமான நாளாக அமைந்த விஜயின் பதவியேற்பு விழா, அரசியல் செய்தியாக மட்டுமல்லாமல் சினிமா ரசிகர்களிடமும் பெரும் பேசுபொருளாக மாறியுள்ளது. அந்த விழாவில் நடிகை திரிஷா கலந்து கொண்ட விதமும், அதைச் சுற்றி உருவான பல்வேறு சர்ச்சைகளும் தற்போது சமூக வலைதளங்களில் தீவிரமாக பேசப்பட்டு வருகின்றன.

Vijay Trisha S A Chandrasekhar Shoba Chandrasekhar

திரிஷா வருகை

விஜயின் பதவியேற்பு விழாவிற்காக திரிஷா தனது வீட்டிலிருந்து கிளம்பிய தருணத்திலேயே அவரது கார் வீடியோ இணையத்தில் வெளியானது. அந்த வீடியோ சில நிமிடங்களில் வைரலானது. குறிப்பாக, அவரது காரின் உள்ளே இருந்த சிலுவை சின்னம் பலரது கவனத்தை ஈர்த்தது. இது புதிய விஷயம் அல்ல என்றாலும், தேர்தல் வாக்குப்பதிவு நாளில் கூட இதே விஷயம் குறித்து விமர்சனங்கள் எழுந்திருந்ததால், இந்த முறை அது மீண்டும் பெரிய விவாதமாக மாறியது.

சிலர் மத அடையாளத்தை முன்னிறுத்தி பிராமண பெண்ணான திரிஷா காரில் சிலுவையா என்று விமர்சித்த நிலையில், திரிஷாவின் ரசிகர்கள் அதற்கு கடுமையாக எதிர்ப்பு தெரிவித்தனர். ஒரு நபரின் தனிப்பட்ட நம்பிக்கை மற்றும் விருப்பங்களை விமர்சிப்பது தவறு என்றும், காரில் சிலுவை வைத்திருப்பது அவரின் தனி சுதந்திரம் என்றும் அவர்கள் வலியுறுத்தினர். இந்த விவாதம் சமூக வலைதளங்களில் நீண்ட நேரம் ட்ரெண்டாகியது. இதற்கிடையில், அதே சிலுவையுடன் பதவியேற்பு விழாவிற்கு திரிஷா வந்தது, விமர்சனங்களுக்கு நேரடி பதிலாகவே பார்க்கப்படுகிறது.

விழாவில் நடந்த தருணம்

விழா நடைபெறும் இடத்திற்கு வந்த திரிஷா, முதல் வரிசையில் அமர்ந்து நிகழ்ச்சியை கவனித்தார். அந்த நேரத்தில் விஜயின் அம்மா ஷோபா சந்திரசேகரை பார்த்ததும் எழுந்து சென்று மரியாதையுடன் வணக்கம் தெரிவித்தார். இருவரும் சிரித்தபடி பேசிக் கொண்டதுடன், ஒரு கட்டத்தில் அன்புடன் கட்டிப்பிடித்துக் கொண்டனர். இந்த காட்சி நிகழ்வில் இருந்தவர்களையும், பின்னர் அந்த வீடியோவை பார்த்த ரசிகர்களையும் ஈர்த்தது.

இந்த ஒரு காட்சியே பின்னர் பல்வேறு கருத்துக்களுக்கு வழிவகுத்தது. சிலர் இதை ஒரு சாதாரண மரியாதை என எடுத்துக் கொண்டாலும், மற்றவர்கள் இதை வைத்து பல்வேறு ஊகங்களையும் முன்வைத்தனர். குறிப்பாக, முன்பிருந்த சில சர்ச்சைகளுடன் இந்த சம்பவம் இணைக்கப்பட்டு பேசப்பட்டது.

குடும்பம் குறித்த பேச்சுகள்

இந்த நிகழ்வுடன் சேர்த்து விஜய்யின் குடும்ப வாழ்க்கை குறித்த விவாதங்களும் மீண்டும் அதிகரித்துள்ளன. அவரது மனைவி சங்கீதா விழாவில் கலந்து கொள்ளாதது, மகன் ஜேசன் சஞ்சய் வராதது போன்ற விஷயங்கள் ரசிகர்களிடையே கேள்விகளை எழுப்பியது. சிலர், குடும்பம் முழுவதும் கலந்து கொண்டிருக்க வேண்டிய ஒரு முக்கிய தருணம் இது என வருத்தம் தெரிவித்தனர்.

மற்றொரு தரப்பு, ஜேசன் சஞ்சய் தனது தாயுடன் இருப்பதை முன்னிறுத்தி அவரை பாராட்டியும் கருத்து தெரிவித்தது. இதனால், இந்த விழா ஒரு அரசியல் நிகழ்வைத் தாண்டி, தனிப்பட்ட வாழ்க்கை தொடர்பான விவாதங்களையும் கிளப்பியுள்ளது.

எமோஷனலான தருணங்கள்

விஜய் பதவியேற்று பேசும் போது நிகழ்ச்சியில் இருந்த பலரும் உணர்ச்சி வசப்பட்டனர். திரிஷா கண்கலங்கிய வீடியோக்கள் சமூக வலைதளங்களில் பரவியுள்ளன. அதேபோல், விஜயின் தந்தை எஸ்.ஏ. சந்திரசேகர் தனது மகன் அந்த உயர்ந்த பதவியில் பேசுவதைக் கண்டு பெருமையுடன் பார்த்துக் கொண்டு இருந்தார் அப்போது எமோஷனலாக கடவுளுக்கு நன்றி தெரிவித்தபடி கையெடுத்து கும்பிட்டபடி இருந்த காட்சிகளும் இணையத்தில் வைரலாகி வருகிறது.

ஒரு அரசியல் விழாவாக இருந்தாலும், விஜயின் பதவியேற்பு நிகழ்ச்சி பல்வேறு கோணங்களில் பேசப்படும் ஒரு பெரிய சம்பவமாக மாறியுள்ளது. திரிஷாவின் வருகை, அவரது காரில் இருந்த சிலுவை, விஜயின் குடும்பம் தொடர்பான விவாதங்கள், விழாவில் நடந்த உணர்ச்சி மிகுந்த தருணங்கள் என பல அம்சங்கள் ஒன்றோடொன்று இணைந்து தற்போது சமூக வலைதளங்களில் பரவலாக பேசப்பட்டு வருகின்றன.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+