53 வயதிலும் பிட்டாக இருக்கும் "செண்பகமே செண்பகமே”... இவங்க பிரபல நடிகையோட தங்கைதானாம்!
நடிகர் ராமராஜன் உடன் எங்க ஊரு பாட்டுக்காரன் திரைப்படத்தில் நடித்த நடிகை சாந்திப்பிரியா தற்போதைய புகைப்படத்தை வெளியிட்டு ரசிகர்களின் மத்தியில் இன்ப அதிர்ச்சி கொடுத்திருக்கிறார்.
சென்னை: நடிகர் ராமராஜன் உடன் செண்பகமே செண்பகமே எனும் பாடலில் நடித்த நடிகை சாந்தி பிரியா 54 வயதில் தற்போதைய புகைப்படத்தை வெளியிட்டு இருக்கிறார்.
நடிகை சாந்தி பிரியா நடிகை பானுப்ரியாவின் சகோதரி தானாம்.
54 வயதிலும் சாந்தி பிரியா வொர்க் அவுட் செய்யும் புகைப்படங்களையும் சைக்கிளிங் செய்யும் புகைப்படங்களையும் வெளியிட்டு ரசிகர்களின் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறார்.

தமிழில் முதல் திரைப்படம்
80ஸ் கிட்ஸ் ஃபேவரிட் திரைப்படங்களில் ஒன்றாக இருக்கும் நடிகர் ராமராஜன் நடித்த எங்க ஊரு பாட்டுக்காரன் திரைப்படத்தை யாரும் அவ்வளவு எளிதாக மறந்துவிட முடியாது. இந்த திரைப்படம் 1987 ஆம் ஆண்டு கங்கை அமரன் இயக்கத்தில் வெளியானது. இதில் கதாநாயகனாக ராமராஜனும் கதாநாயகியாக நிஷாந்தி என்னும் சாந்தி பிரியா நடித்திருப்பார் .முதல் திரைப்படம் சாந்திப்ரியாவுக்கு இதுதான் என்று சொல்ல முடியாத அளவிற்கு இந்த திரைப்படத்தில் இவருடைய நடிப்பு எதார்த்தமாக இருக்கும். இந்த நடிப்பின் மூலமாகவே தமிழக மக்களின் மத்தியில் தனக்கென்று ஒரு இடத்தையும் பிடித்து விட்டார்.

நடிப்பிலிருந்து சிறு பிரேக்
இதைத்தொடர்ந்து பல முன்னணி நடிகர்களோடு தொடர்ந்து படங்களில் நடித்திருக்கிறார். தமிழ் தெலுங்கு ஹிந்தி என பழமொழி திரைப்படங்களிலும் இவர் நடித்திருக்கிறார். அது மட்டுமல்லாமல் நடிகை பானுப்ரியாவின் தங்கைதானாம். இந்த நிலையில் இவருக்கு தமிழில் திரைப்பட வாய்ப்புகள் குறைய தொடங்கியதும் ஹிந்தி டிவி சீரியல்களில் நடிக்க சென்று இருக்கிறார். இந்த நிலையில் 1994 ஆம் ஆண்டு இவர் ஒரு இந்தி திரைப்படத்தில் நடித்துவிட்டு அதற்குப் பிறகு திரை உலகை விட்டு விலகி இருக்கிறார்.

மீண்டும் நடிப்பு
இந்த நிலையில் மீண்டும் தற்போது இவர் நடிக்க இருப்பதாக சமூக வலைத்தளத்தில் தகவல்கள் வெளியாகி இருக்கிறது. தற்போது சாந்தி பிரியா ஜி ஸ்டுடியோ நிறுவனம் எம் எஸ் எக்ஸ் பிளேயர் காண முன்னணி நடிகர்கள் நடித்து பிரம்மாண்டமாக தயாராகும் வெப் சீரிஸில் முக்கியமான கேரக்டரில் நடிக்க இருக்கிறார். அது மட்டுமல்லாமல் இந்த வெப் சீரிஸ் தமிழில் மட்டுமல்லாமல் ஹிந்திலும் தயாராக இருக்கிறதாம். இதற்கான அறிவிப்பு கூடிய விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

பெரிய வாய்ப்பு
இந்த நிலையில் சமூக வலைத்தளத்தில் ஆக்டிவாக இருக்கும் சாந்திப்பிரியா 26 ஆண்டுகள் கழித்து இந்தியாவின் நைட்டிங்கேல் என்று அழைக்கப்படும் சரோஜினி நாயுடு வாழ்க்கை வரலாறு திரைப்படத்தில் நடிக்கப் போவதாக தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தெரிவித்து இருக்கிறார். அதை குறித்து அவர் வெளியிட்ட பதிவில், "இந்த நாட்டை தட்டி எழுப்பி தடைகளை உடைத்து சுதந்திரத்திற்காக பெரும் பங்காற்றிய ஒரு லட்சிய பெண்ணின் கதாபாத்திரத்தில் நடிக்க எனக்கு வாய்ப்பு கிடைத்தது. மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது என்று குறிப்பிட்டு இருக்கிறார். தற்போது இந்த பதிவிற்கு ரசிகர்கள் பலர் பாராட்டு தெரிவித்து வாழ்த்தி வருகின்றனர்.
-
"40 வயசுல 25 வயசு மாதிரி இல்லை..." சர்ச்சைகளுக்கு மத்தியில் திரிஷா போட்ட பதிவு! யாருக்கு கொடுத்த பதில்? -
உருவத்தை பார்த்து சிரித்தவர்கள் இன்று மகளை பார்த்து வியக்கிறார்கள்... டிஷ்யூம் பட நடிகர் கின்னஸ் பக்ரு நெகிழ்ச்சி -
அஜித் மாதிரி யாராலும் இருக்க முடியாது.. சூட்டிங் ஸ்பாட்டில் நடந்த சம்பவம்.. ரகசியங்களை உடைத்த பிரபலம் -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு!












Click it and Unblock the Notifications