மீண்டும் ஒரு சூரிய வம்சமா? கண்ணாலே மிரட்டுகிறாரே பூர்ணிமா.. சமாளிப்பாரா மீனாட்சி!
சென்னை : கலர்ஸ் தமிழ் டிவியில் விரைவில் ஒளிபரப்பாக இருக்கும் எங்க வீட்டு மீனாட்சி என்னும் தொடருக்கான ப்ரோமோ தற்போது ரசிகர்களின் மத்தியில் பரவலாகப் பேசப்பட்டு வருகிறது.
அதிலும் வெள்ளித்திரையில் ஒரு காலத்தில் கொடி கட்டிப் பறந்த பூர்ணிமா பாக்கியராஜ் இந்த சீரியலில் முக்கியமான கேரக்டரில் நடிக்கிறார், அதுவும் இவர் முதல் முதலாக கலர்ஸ் டிவியில் இப்போது தான் காலடி எடுத்து வைத்திருக்கிறார்.
சீரியலின் ப்ரோமோவை பார்க்கும்போதே திரைப்படத்தின் ட்ரெய்லர் போல இருக்கிறது. ஆனால் ஏற்கனவே இதே போல குடும்ப கதைகளை பார்த்து வந்த ரசிகர் இந்த சீரியலிலாவது சுவாரசியத்தை கூடுவார்களா? என்று ஆவலுடன் எதிர்பார்த்து இருக்கின்றனர்.

இதுவும் ஆரோக்கியமான போட்டி தான்
சன் டிவி, விஜய் டிவி போலவே தற்போது கலர்ஸ் டிவி புதிது புதிதாக பல சீரியல்கள் அறிமுகமாகி வருகின்றனது. அதில் பல சீரியல்கள் ரசிகர்கள் கவரும் விதத்தில் அமைந்து விடுகிறது. முன்பு எல்லாம் சன் டிவி, விஜய் டிவி சீரியல்களுக்கு மட்டும்தான் ரசிகர்களிடத்தில் பெரும் வரவேற்பு இருந்தது. ஆனால் தற்போது அதற்கு போட்டியாக புதுசு புதுசாக பல சேனல்கள் புது புது சீரியலோடு அறிமுகமாகி வருகிறது. அதனால் முக்கியமான பெரிய சேனல்களின் டிஆர்பி குறைந்தாலும், நாங்களும் விடமாட்டோம் என்று அவர்களும் புதுசு புதுசாக பல ரியாலிட்டி ஷோக்களும் அறிமுகப்படுத்தி டிஆர்பியை கூட்டுவதில் கவனமாக இருக்கின்றனர். தன்னுடைய ரசிகர்களை எந்த பக்கமும் போய்விடாமல் கவர்ந்து இழுப்பதற்காக ரூம் போட்டு யோசித்து விதவிதமாக சீரியல்களையும் புதுப்புது நிகழ்ச்சிகளையும் அறிமுகப்படுத்தி வருகின்றனர். அதிலும் ஒரு சில நேரத்தில் பல பரிசு திட்டங்களையும் நன்றாக ஓடிக் கொண்டிருக்கும் ஒருசில சீரியல்களை மகா சங்கமம் நடத்தி ரசிகர்களின் கவனத்தை இழுத்து டிஆர்பியை கூட்டுவதில் பார்த்து பார்த்து செய்து வருகின்றனர்.

புதுமுகங்கள் அதிகம் தான்
அந்தவகையில் கலர்ஸ் டிவியும் தற்போது களமிறங்கி இருக்கிறது. நாங்கள் யாருக்கும் சளைத்தவர்கள் அல்ல என்று இந்த சேனலிலும் அதிகமான புதுப்புது நிகழ்ச்சிகளும் ஒளிபரப்பப்பட்டு வருகிறது. ஏற்கனவே இந்த சேனலில் ஒளிபரப்பான திருமணம், இதயத்தை திருடாதே, சில்லுனு ஒரு காதல், அம்மன், நாகினி போன்ற பல சீரியல்களை எடுத்துக்காட்டாக கூறலாம். இந்த சீரியலுக்கு என்று தனி ரசிகர்கள் பட்டாளமே உண்டு. அதிலும் திருமணம் சீரியல் தற்போது முடிந்து விட்டதால் இந்த சீரியலை அதிகமான ரசிகர்கள் மிஸ் பண்ணி வருகின்றனர். இந்த மாதிரி சீரியல் மீண்டும் வராதா என்று கேட்டுக் கொண்டிருக்கின்றனர். அதுபோலதான் இதயத்தை திருடாதே சீரியலும், இந்த சீரியல் திடீரென்று முடிக்கப்பட்டு மீண்டும் இரண்டாவது சீசன் ஒளிபரப்பப்பட்டு வருகிறது. அதற்கும் தொடர்ந்து சீரியலின் ரசிகர்கள் ஆதரவு கொடுத்து வருகின்றனர். கலர்ஸ் தமிழ் சேனலில் பிளஸ் என்னவென்றால் இதில் அதிகமான புதுமுக கதாநாயகிகளும் கதாநாயகர்களும் அறிமுகமாகின்றனர். அதுமட்டுமல்லாமல் இளஞ்ஜோடிகள் அதிகமாக இந்த சீரியலின் இடம்பெறுகின்றனர் .அதனாலே தற்போது இளைஞர்களும் இந்த சேனலில் ஒளிபரப்பாகும் சீரியலுக்கு ரசிகர்களாக மாறிவிட்டனர்.

மீண்டும் சூரியவம்சமா?
மீண்டும் இந்த சேனலில் புதுமுக நடிகர்கள் அதிகமாக பங்குபெறும் ஒரு சீரியல் விரைவில் ஒளிபரப்பப்போகிறது. அதற்கான ப்ரோமோ வெளியிடப்பட்டு விட்டது. அந்த சீரியலின் பெயர் கூட "எங்க வீட்டு மீனாட்சி" இந்த சீரியலின் பல புதுமுக நடிகர்கள் நடித்து இருந்தாலும் அதில் வெள்ளித்திரையில் கலக்கிய பூர்ணிமா பாக்கியராஜ் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துக்கொண்டிருக்கிறார். அவர்தான் இந்த வீட்டின் நாட்டாமை போல இருக்கிறார். தற்போது முதல்முறையாக கலர்ஸ் டிவியிலும் வள்ளியம்மை கேரக்டரில் காலடி எடுத்து வைத்திருக்கிறார். இந்த சீரியலில் ப்ரோமோவில் ரசிகர்களுக்கு சீரியல் கேரக்டர்கள் அனைவரையும் அறிமுகப்படுத்தும் நடிகை ஸ்ரீதா சிவதாஸ் தான் இந்த சீரியலின் கதாநாயகி அவர் மீனாட்சி என்னும் பெயரில் இதில் நடிக்கிறார்.

இதை ஏற்கனவே பார்த்தாச்சு
ஒரு கூட்டு குடும்பமாக பலர் ஒன்றாக வாழும் பாரம்பரிய மிக்க குடும்பத்தில் இவர் ஒரு டீச்சராக இருக்கிறார். ஆனாலும் வீட்டில் உள்ள குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரின் மனதிலும் நல்ல இடத்தைப் பிடித்திருக்கும் இவரை, வீட்டின் நாட்டாமை வள்ளியம்மைக்கும் பிடித்திருக்கிறது. குடும்ப உறுப்பினர்கள் அனைவரையும் போட்டோ எடுக்க கூப்பிடும் போது இவர் மட்டும் தயங்கி நிற்க, நீயும் எங்கள் குடும்பத்துப் பொண்ணு தான் வா என்று உரிமையாக கூப்பிட அவர் கண்ணாலே அந்த வீட்டின் சிதம்பரமாக நடிக்கும் ஜீவாவை கூப்பிடுகிறார். ஆனால் சிதம்பரத்தை வள்ளியம்மை போட்டோ எடுக்க வரக்கூடாது என்று கூறவும் அவர் தனியாக சென்று விடுகிறார். இந்த சீனை நாங்க ஏற்கனவே சூரிய வம்சம் படத்தில் பார்த்து விட்டோமென்று ரசிகர்களின் மைண்ட் வாய்ஸ் கமெண்டுகளில் கொட்டுகிறது. இருந்தாலும் மீண்டும் இந்த சீனை சீரியலிலும் வைத்திருக்கிறார்கள் இருந்தாலும் எதுக்காக இவருக்கு மட்டும் இப்படி ஒரு தண்டனை என்று ரசிகர்கள் ஆர்வமுடன் காத்திருக்க தான் செய்கிறார்கள். பொறுத்திருந்து பார்த்தால்தான் தெரியும் எங்க வீட்டு மீனாட்சி எல்லோரும் வீட்டிலும் வாசம் செய்வாலா? என்று என்று ரசிகர்கள் ஆர்வமுடன் காத்திருக்கின்றனர்.
-
பணிகள் கிட்டத்தட்ட ஓவர்.. இனி 4 வழி இல்லை.. சென்னையின் முக்கிய பகுதியில் மிகப்பெரிய 6 வழி சாலை -
அலர்ட்..! 10000 ரூபாய்க்கு மேல் பணம் அனுப்பினால் 'லாக்'.. ஆர்பிஐ கொண்டு வரும் புது ரூல்ஸ்! -
தங்கத்தை மிஞ்சப்போகும்.. பலரின் வீட்டிலேயே இருக்கும் ஒரு குட்டி உலோகம்.. அடிக்குது ஜாக்பாட்! -
தென்னிந்திய தர்காக்கள் மற்றும் பள்ளி வாசல்கள் சங்கம் அதிமுகவிற்கு ஆதரவு! -
கடலூரில் நாளை விஜய் பிரச்சாரத்தால் உதயநிதி ஸ்டாலின் பிரச்சாரத்திற்கு அனுமதி மறுப்பு.. நடந்தது என்ன? -
ஐடி ஊழியர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த TCS.. மாச மாசம் பணம் சொளையா வரப்போகுது! -
சிறகடிக்க ஆசை: மீனாவிடம் முத்து மறைக்கும் உண்மை! விஜயா பற்றி அண்ணாமலைக்கு தெரிந்த பெரிய ரகசியம்! -
அமெரிக்காவை அலறவிட்ட பிரான்ஸ்! 129 டன் தங்கத்தை மீட்க "கோல்டன்" ஸ்கெட்ச்.. அப்போ இந்தியா பிளான் என்ன -
விஜய்யுடன் சேர்ந்து முதல்வராக முயன்ற எடப்பாடி! நான்தான் முறியடித்தேன்.. போட்டு உடைத்த செங்கோட்டையன் -
சிறகடிக்க ஆசை: விஜயாவின் மாற்றம்! முத்து, மீனாவை பெருமையாக பேசுறாங்களே! குடும்பத்தில் கொண்டாட்டம் -
ஈரான் வேலையை காட்டியது.. ஹார்முஸ்-ல் கப்பல் செல்ல அனுமதி மறுப்பு.. அமெரிக்கா ஷாக்! -
ரஷ்யா மாஸ்டர் பிளான்: இந்தியாவுக்கு ஜாக்பாட்.. சீனா உதவி.. ஒன்று கூடிய BRICS நாடுகளால் டிரம்ப் ஷாக்!












Click it and Unblock the Notifications