சன் டிவி நடிகருக்கும் ஜீ தமிழ் நடிகைக்கும் எங்கேஜ்மென்ட்.. அதுவும் யாருன்னு பாருங்க!
சென்னை: சன் டிவியில் மிஸ்டர் மனைவி சீரியலில் முக்கிய கேரக்டரில் நடித்துக் கொண்டிருக்கும் நடிகர் அஸ்வத்துக்கும் சீரியல் நடிகை கண்மணி மனோகரனுக்கும் நேற்று (ஜூலை 3) எங்கேஜ்மென்ட் நடைபெற்று இருக்கிறது. இதில் எடுத்த புகைப்படங்கள் இணையத்தில் அதிகமாக பகிரப்பட்டு வருகிறது.
பொதுவாக சீரியலிலோ அல்லது சினிமாவிலோ ஒன்றாக நடிக்கும் போது காதலித்து திருமணம் செய்தவர்கள் ஏராளமான பிரபலங்கள் இருக்கின்றனர். ஆனால் இப்போது சன் டிவி பிரபலமொருவருக்கும் ஜீ தமிழ் நடிகை ஒருவருக்கும் எங்கேஜ்மென்ட் நடைபெற்று இருப்பது இணையத்தில் அதிகமாக பேசப்பட்டு வருகிறது.

சன் டிவியில் தொகுப்பாளராகவும், நடிகராகவும் இருக்கும் அஸ்வத்துக்கும் விஜய் டிவி மற்றும் ஜீ தமிழில் கதாநாயகியாக நடிக்கும் நடிகை கண்மணி மனோகரனுடன் எங்கேஜ்மென்ட் நடைபெற்று இருக்கிறது. இதில் சின்னத்திரை பிரபலங்கள் பலரும் கலந்து கண்டு இவர்களை வாழ்த்தி இருக்கிறார்கள்.

சன் டிவியில் காலை வணக்கம், ரஞ்சிதமே போன்ற நிகழ்ச்சியில் தொகுப்பாளராக இருக்கும் அஸ்வத் மிஸ்டர் மனைவி சீரியலிலும் முக்கிய கேரக்டரில் நடித்து வருகிறார். இவர் தான் இப்போது விஜய் டிவியில் பாரதிகண்ணம்மா சீரியலில் அஞ்சலி கேரக்டரில் நடித்து பிரபலமடைந்த நடிகை கண்மணி மனோகரனை எங்கேஜ்மென்ட் செய்து இருக்கிறார்.

கண்மணி மனோகரன் ஆரம்பத்தில் பாரதி கண்ணம்மா சீரியலில் நடித்து பிறகு அந்த சீரியலில் இருந்து விலகி ஜீ தமிழில் ஒளிபரப்பான அமுதாவும் அன்னலட்சுமியும் சீரியலில் கதாநாயகியாக நடித்திருந்தார். இவருக்கு இணையத்திலும் அதிகமான பாலோவர்ஸ் இருக்கின்றனர். இன்ஸ்டாகிராமில் அடிக்கடி புகைப்படங்கள் மற்றும் ரீல்ஸ் வீடியோக்களை வெளியிட்டு ரசிகர்கள் மத்தியில் பிரபலமாக இருக்கும் இவருக்கு அதிகமான இளைஞர்கள் பாலோவர்களாக இருக்கிறார்கள்.

இந்த நிலையில் கண்மணிக்கு அஸ்வத்துடன் எங்கேஜ்மென்ட் முடிவடைந்து இருக்கும் நிலையில் ரசிகர்கள் இது இன்ப அதிர்ச்சியாக இருக்கிறது என்று கூறி வாழ்த்துக்கள் கூறி வருகிறார்கள். அதே நேரத்தில் இவர்களுடைய திருமணம் எப்போது என்பது பற்றி இவர்கள் இன்னும் அறிவிக்கப்படவில்லை.

இவர்களின் எங்கேஜ்மென்ட் இருக்கு எதிர்நீச்சல் சீரியல் நடிகை மதுமிதா சிறகடிக்க ஆசை சீரியல் சல்மா போன்ற பலரும் வந்திருந்தனர். சிறகடிக்க ஆசை சீரியல் சல்மா, அமுதாவும் அன்னலட்சுமியும் சீரியலில் நடிகை கண்மணியின் ( அமுதா) அண்ணியாக வில்லி கேரக்டரில் நடித்திருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது
-
டாஸ்மாக் தனியார் மயம் ஆகிறதா? மிகப்பெரிய சீர்திருத்தம் வரப்போகிறது.. அமைச்சர் விக்னேஷ் தகவல் -
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
சென்னை பஸ் ஸ்டாண்ட் புரட்சி.. களமிறக்கப்படும் புதிய டெர்மினல்கள்.. 2000+ இ-பஸ்கள்.. அடியோடு மாறுது -
டிகே சிவக்குமாருக்கு முதல் அடி! பதவியேற்ற 2 நாளில் கர்நாடக சீனியர் அமைச்சர் ராமலிங்க ரெட்டி ராஜினாமா -
ஒரே கல்லில் 2 மாங்காய்.. விசிகவை வளைக்க திமுக போட்ட மாஸ்டர் பிளான்.. தமிழக அரசியலில் பெரும் பரபரப்பு -
இன்போசிஸ், ஹெச்சிஎல் செய்த வேலையை பாத்தீங்களா.. இந்திய ஐடி ஊழியர்கள் தான் கிங்மேக்கர்! -
இனி திமுக- அதிமுக போல் தான் பாஜகவையும் பார்ப்பேன்.. புதிய இயக்கத்தை தொடங்கியதுமே அண்ணாமலை அதிரடி -
கே.என்.நேரு மீது லஞ்ச ஒழிப்புத்துறை வழக்கு.. விஜய் அரசின் முதல் ஆக்சன்.. அடித்து ஆடும் அருண் ஐபிஎஸ் -
இர்ஃபானின் பிரியாணி பக்கெட்டை பிரித்ததுமே ஆடிப்போன கஸ்டமர்ஸ்.. 4 கிலோவுக்கு இவ்வளவுதானா ஆட்டுக்கறி? -
பாஜகவுக்கு ஷாக்.. முக்கிய நிர்வாகிகள் அடுத்தடுத்து விலகல்.. அண்ணாமலையுடன் பயணிக்கப்போவதாக அறிவிப்பு! -
அண்ணாமலை 'லீடர்' இயக்கம்.. நிமிடத்திற்கு 35 பேர், மொத்தம் 8 லட்சம் பேர் இணைந்தனர்.. அடுத்த விஜய் மொமென்ட்? -
பெரிய சதியை முறியடிச்சிட்டோம்.. திமுகவை வீழ்த்திய 2 மாஸ்டர்மைண்டுகள்.. இரவோடு இரவாக பறந்த போன்












Click it and Unblock the Notifications