சன் டிவியின் சீரியலுக்கு வரும் ஈரமான ரோஜாவே நடிகைகள்.. அடுத்தடுத்து நடக்கும் சம்பவம் இதுக்கு தானா?
சென்னை: விஜய் டிவியில் ஒளிபரப்பான ஈரமான ரோஜாவே சீசன் 2 சீரியலின் மூலம் பிரபலம் அடைந்த நடிகை சுவாதி சன் டிவியில் விரைவில் ஒளிபரப்பாக இருக்கும் சீரியலில் கமிட் ஆகி இருப்பதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது. அது பற்றி விரிவாக பார்க்கலாம்.
ஆரம்ப காலகட்டத்தில் தொலைக்காட்சி மக்கள் மத்தியில் பிரபலம் அடைய தொடங்கிய காலகட்டத்தில் தூர்தர்ஷன் மட்டுமே இருந்து வந்த நிலையில் அந்த நேரத்தில் சன் டிவி புதியதாக சேனல் தொடங்கி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுவிட்டது. ஆரம்பத்திலேயே மக்களை கவரும் விதத்தில் செய்திகள் மற்றும் சீரியல்கள் சன் டிவியில் ஒளிபரப்பானதால் ரசிகர்கள் மத்தியில் தனக்குன்னு ஒரு இடத்தை பிடித்து விட்டது.

சன் டிவிக்கு போட்டியாக எத்தனையோ சேனல்கள் புதியது புதியதாக தொடங்கினாலும் இப்ப வரைக்கும் டிஆர்பியில் சன் டிவி சீரியல்களை அடித்துக் கொள்ள முடியாது என்ற நிலைமை தான் இருக்கிறது. ஆனாலும் சமீபத்தில் விஜய் டிவி சீரியல்கள் மற்றும் நிகழ்ச்சிகள் இளைஞர்கள் மத்தியில் வரவேற்பு ஏற்பட்டு கொண்டிருக்கிறது.

இந்த நிலையில் விஜய் டிவியில் நடிக்கும் பல நடிகர்கள், நடிகைகள் தொடர்ச்சியாக சன் டிவி சீரியல்களுக்கு மாறிக் கொண்டிருக்கிறார்கள். சில வருடங்களுக்கு முன்பு விஜய் டிவியில் ராஜா ராணி சீரியலில் பெரிய அளவில் பேசப்பட்ட நிலையில் அந்த சீரியலில் நடிகை ஆலியா மானசா சன் டிவியில் இனியா சீரியலுக்கு மாறியிருக்கிறார். அவருடைய கணவர் கயல் சீரியலில் நடித்துக் கொண்டிருக்கிறார்.

அதுபோல விஜய் டிவி மற்றும் ஜீ தமிழில் நடித்துக் கொண்டிருந்த நடிகை சைத்ரா ரெட்டி சன் டிவியில் சீரியலுக்கு மாறியிருக்கிறார். இந்த நிலையில் விஜய் டிவியில் ஒளிபரப்பான ஈரமான ரோஜாவே சீசன் 2 சீரியலில் பிரபலமடைந்த கேப்ரில்லா மருமகள் சீரியலில் சன் டிவியில் நடிக்கிறார். அதுபோல ஈரமான ரோஜாவே சீசன் 2 சீரியலில் கேப்ரில்லாவின் அக்காவாக நடித்த நடிகை சுவாதி சன் டிவியில் புது சீரியலில் நடிக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது.

சுவாதிக்கு ஏற்கனவே ஈரமான ரோஜாவே சீரியலின் மூலமாக அதிகமான ரசிகர்கள் உருவாகிவிட்டனர். இந்த நிலையில் தொடர்ச்சியாக விஜய் டிவி நடிகர் நடிகைகள் சன் டிவிக்கு வந்து கொண்டிருப்பது அதிகமாக விமர்சிக்கப்பட்டு வருகிறது. அதே நேரத்தில் சுவாதி நடிக்கும் சீரியலில் பெயர் தேவதை என்று பெயர் வைக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. ஆரம்பத்தில் இந்த சீரியலுக்கு வாரணம் ஆயிரம் என்று பெயர் வைக்கப்பட்டதாகவும் பிறகு தேவதை என மாற்ற பட்டதாகவும் கூறப்படுகிறது.
ஏற்கனவே விஜய் டிவியில் ஒளிபரப்பான குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் இருந்து பலர் சன் டிவியில் டாப் குக்கு டூப் குக்கு நிகழ்ச்சிக்கு வந்திருக்கின்றனர். இந்த நிலையில் தொடர்ச்சியாக விஜய் டிவி பிரபலங்கள் சன் டிவிக்கு வருவது விமர்சிக்கப்படுகிறது. அதே நேரத்தில் சுவாதி நடிக்கப் போகும் சீரியல் இனி எப்படி இருக்க போகிறது என்று பொறுத்திருந்து பார்க்கலாம்.
-
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்?












Click it and Unblock the Notifications