கோபி- சுதாகர் மேல எனக்கு என்ன பொறாமை? மேடையில் நடந்த அந்த விஷயம் தெரியுமா? ஈரோடு மகேஷ் எமோஷனல்
சென்னை: விஜய் டிவியில் பல நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி வரும் ஈரோடு மகேஷ் தன்னை பற்றிய விமர்சனங்களுக்கு பதிலடி கொடுத்திருக்கிறார். அதாவது கோபி சுதாகர் வளர்ச்சியை பார்த்து நான் பொறாமைப்படுகிறேன் என்று சிலர் கூறி வருகிறார்கள், அப்படி எல்லாம் கிடையாது. அவர்கள் வளர்ச்சியை நான் தடுக்கவில்லை என்று விளக்கம் கொடுத்திருக்கிறார்.
இணையத்தின் பயன்பாடு அதிகரிக்க அதிகரிக்க இணையத்தால் பலர் புகழின் உச்சத்துக்கு வளர்ந்து கொண்டிருக்கிறார்கள். சினிமாவில் கூட இப்பொழுது இணையத்தில் அதிகமான பாலோவர்ஸ் வைத்திருப்பவர்களுக்கு வாய்ப்பு கிடைக்கிறது.

அதுபோல சிலர் சமூக வலைத்தளத்தில் சமூகத்திற்கு தேவையான மற்றும் ட்ரெண்டாக இருக்கும் விஷயத்தை எடுத்து பேசி பிரபலமாகி விடுகிறார்கள். சிலர் ஆபாசமான உடை அணிந்து பலரை முகம் சுளிக்க வைத்து பிரபலமாகி கொண்டிருக்கிறார்கள். ஆனால் ஒரு சிலர் மட்டும்தான் அரசியல், சமுதாய அவலங்கள் போன்றவற்றையும் நையாண்டி கலந்து காமெடியாக பேசி தனித்து நிற்கிறார்கள்.
அந்த வரிசையில் இணையத்தை பயன்படுத்தும் பலருக்கும் பரீட்சையமாக கோபி சுதாகரும் இருக்கிறார்கள். இவர்கள் இருவரும் கல்லூரி காலத்தில் இருந்தே நண்பர்களாக இருக்கிறார்கள். அதோடு தங்களுடைய திறமையை நிரூபிப்பதற்காக விஜய் டிவியில் வாய்ப்பு கேட்டு போயிருந்த நிலையில் அவர்கள் அந்த நிகழ்ச்சியில் அவமானப்பட்டு வெளியேற்றப்பட்டு இருந்தார்கள்.
கலக்கப்போவது யாரு நிகழ்ச்சியில் இவர்கள் கலந்து கொண்ட போது நடுவர்களாக இருந்த ஈரோடு மகேஷ், தாடி பாலாஜி போன்றவர்கள் இவர்களை நிராகரித்து இருக்கிறார்கள். இந்த விஷயங்கள் வெளியே தெரிய வந்த பிறகு விஜய் டிவியை எதிர்த்து பல மீம்ஸ்கள் வெளியிட்டு வந்ததை பார்க்க முடிந்தது.
ஆனால் பரிதாபங்கள் youtube சேனலில் நிர்வகித்து வரும் கோபி சுதாகர் அடுத்தடுத்து தங்களுடைய வாழ்க்கையில் முன்னேறி போய்க்கொண்டே இருக்கிறார்கள். இந்த நிலையில் ஈரோடு மகேஷ் பேட்டி ஒன்றில் பேசும்போது தன் மீது சுமத்தப்படும் குற்றச்சாட்டுகளுக்கு பதிலடி கொடுத்து இருக்கிறார்.
அதில் எனக்கு கோபி சுதாகர் மீது என்ன பொறாமை? அவங்ககிட்ட இருந்து நான் பணத்தை திருடினேனா? இல்ல அவங்க சேனலை ஏதாவது சொன்னேனா? அதெல்லாம் எதுவும் இல்லை. அவங்க விஜய் டிவி நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள வந்தாங்க. அந்த மேடையில் அவங்க நல்லா அவங்களோட பங்களிப்பை கொடுத்து இருந்தா அவங்க ரெண்டு பேரும் அடுத்த கட்டத்துக்கு போயிருப்பாங்க.
அவங்க அப்படி பண்ணல, அதனால ரிஜக்ட் ஆகி இருப்பாங்க. உதாரணத்துக்கு சொல்லனும்னா கலக்கப்போவது யாரு சீசன் 5 நிகழ்ச்சியில் குரேஷி செமி பைனல் முடிச்சிட்டு பைனலுக்கு போக வேண்டியது ஆனால் அங்க இருந்த சிலருக்கு குரேஷியோட பங்களிப்பு பிடிக்கல அதனால அவரை செலக்ட் பண்ணல.
அந்த சமயத்தில் குரேஷி எனக்கு யாருன்னு தெரியாது. ஆனா அவருக்காக நான் பேசினேன். அவர் பைனலுக்கு போய் டைட்டில் வின் பண்ணாரு அன்னைக்கு வந்த அத்தனை பேரில் குரேஷி தன்னுடைய வேலையை நல்லா பண்ணுனாரு. அதனால்தான் அவருக்கு துணையாக நின்னேன்.
சமீபத்தில் கூட ஒரு நிகழ்ச்சியில் கோபியையும் சுதாகரையும் நான் சந்தித்தேன். அப்போ அவங்க ரெண்டு பேரும் நல்லா பண்றாங்கன்னு சொல்லி கட்டிப்பிடித்து வாழ்த்திட்டு வந்தேன். இதுதான் நான். வெளியே இருந்து பார்க்கிறவங்களுக்கு இதை என்னால் நிரூபிச்சிட்டு இருக்க முடியாது.
நாங்க நடுவர்களாக இருக்கும்போது யாருக்கும் மார்க் போட மாட்டோம். எல்லோரும் பேசி முடிவு பண்ணி ஒருத்தரை மட்டும் நிகழ்ச்சிக்கு டைட்டில் வின்னரா கொண்டு வருவோம்னு பேசிக்கிறாங்க. ஆனா அது எல்லாம் உண்மை கிடையாது. நாங்க மார்க் போடுறதற்கு ரெக்கார்ட் எல்லாம் இருக்கு என்று அந்த பேட்டியில் எமோஷனலாக ஈரோடு மகேஷ் பேசி இருக்கிறார்.












Click it and Unblock the Notifications