ஆரம்பத்துல அண்ணன், வளர்ந்த பிறகு முகத்துக்கு நேரா அப்படி பேசுவாங்க! ஈரோடு மகேஷ் சொன்னது அந்த நடிகர் தானா?
சென்னை: விஜய் டிவியில் பல நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி பிரபலமடைந்த ஈரோடு மகேஷ் சமீபத்தில் நடிகர் ராஜூ நடித்த பட்டர் ஜாம் திரைப்படத்தின் ப்ரோமோஷனில் பேசி இருந்தார் அப்போது "சிலர் ஆரம்பத்தில் அண்ணன் என்று சொல்லுவாங்க, அப்புறம் கொஞ்சம் வளர்ந்ததும் ப்ரோன்னு கூப்பிடுவாங்க, அதற்குப் பிறகு அவர்களுடைய பேச்சு தோரணையே மாறிவிடும்" என்று பேசி இருந்தார். ஆனால் அது அவர் சொன்னது நடிகர் சிவகார்த்திகேயன் தான் என்று சிலர் கூறி வருகிறார்கள். என்ன நடந்தது என்று பார்க்கலாம்.
விஜய் டிவி பிரபலமும் பிக்பாஸ் டைட்டில் வின்னருமான ராஜு முதல் முறையாக பட்டர் ஜாம் என்ற படத்தில் கதாநாயகனாக நடித்திருக்கிறார்க். இந்த திரைப்பட விரைவில் வெளியாக இருக்கிறது. இந்த திரைப்படத்தை பாராட்டி நடிகர் விஜய் பேசியிருந்தார் அது குறித்து விஜயோடு எடுத்த புகைப்படத்தை ராஜு பகிர்ந்து விஜய் தனக்காக செய்த உதவி குறித்து நெகிழ்ந்து இருந்தார். தான் படம் நடித்த படத்திற்காக விஜய் தனக்கு போன் செய்து பாராட்டியதாகவும், அதோடு தன்னுடைய தொண்டர்களிடம் இந்த படத்திற்கு ஆதரவு கொடுக்கும்படி கேட்டுக் கொண்டதாகவும் ராஜு கூறியிருந்தார்.

யாரும் எனக்காக செய்யாத உதவியை விஜய் அண்ணா செய்திருக்கிறார் என்று ராஜு கூறியிருந்தார். இந்த நிலையில் பட்டர் ஜாம் திரைப்படத்தின் பிரமோஷனின் போது விஜய் டிவி பிரபலமான ஈரோடு மகேஷ் கலந்து கொண்டார். அவர் பேசும்போது ராஜூவை எனக்கு சுமார் 15 வருடங்களாக தெரியும். அவர் அவருடைய வாழ்க்கையில் என்ன முயற்சிகள் எடுத்தாலும் அதை என்னிடம் சொல்லுவாரு. இந்த விஷயத்தை நான் செய்யப் போறேன் என்று சொல்லும் போது எனக்கு அவ்வளவு சந்தோஷமாக இருக்கும்.
பொதுவாக ஒரு சிலர் நம்மிடம் அறிமுகமாகும் போது அண்ணா என்று சொல்லுவாங்க. பிறகு கொஞ்சம் கொஞ்சமாக அவர்கள் வளர தொடங்கியதும் ப்ரோன்னு சொல்ல தொடங்கிடுவாங்க. அதற்குப் பிறகு சில வருடங்கள் கழித்து நாம் அவர்களை பார்க்கும்போது என்னை எப்படி போயிட்டு இருக்குது.. முன்ன மாதிரி உங்களால வர முடியலையே ஏன்னு கேட்பாங்க. அப்ப அண்ணனும் இருக்காது ப்ரோவும் இருக்காது. ஆனால் அவர்களுடைய பேச்சு தோரணை மாறி இருக்கும்.
அவங்க அவங்களோட சொந்த முயற்சியில் வளர்ந்து வராங்க, வெற்றியடையுறாங்க. அதை நான் தப்புன்னு சொல்லல. ஆனா அவர்களுடைய பேச்சு ஆரம்பத்தில் இருந்தது போல இல்லையே என்பது எனக்கு சில நேரங்களில் தோன்றும். ஆனால் இதையெல்லாம் நான் பெருசாக எடுத்துக்கற ஆளு கிடையாது. நான் எப்போதும் ஒரே போல தான் இருப்பேன். அதனால் எனக்கு சிலருடைய வித்தியாசமான நடவடிக்கைகள் பார்க்கும்போது கொஞ்சம் வியப்பாக இருக்கும். ஆனால் இப்போ எல்லாம் பழகி போய்விட்டது என்று ஈரோடு மகேஷ் பேசி இருந்தார்.
ஆனால் ஈரோடு மகேஷ் சொன்னது நடிகர் சிவகார்த்திகேயனை தான் என்று பலரும் கமெண்ட் கொடுத்திருக்கிறார்கள். காரணம் சிவகார்த்திகேயன் போலவே ஈரோடு மகேஷ் மாடுலேஷனில் அதில் பேசியிருக்கிறார். அதனால் சிவகார்த்திகேயன் வளர்ந்து வருவது குறித்து ஈரோடு மகேஷுக்கு பொறாமை என்று சிலர் கூறியிருக்கிறார்கள். இன்னும் ஒரு சிலர் சிவகார்த்திகேயனை பற்றி ஈரோடு மகேஷ் அப்படி சொல்லவில்லை, விஜய் டிவியில் இருந்து வேறு ஒரு சிலரும் இப்போ சினிமாவில் இருக்கிறார்களே அவர்களைப் பற்றி கூட சொல்லி இருக்கலாமே என்று ஈரோடு மகேஷுக்கு சப்போர்ட் செய்து இருக்கிறார்கள்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications