விடுதலை பட வாத்தியார் விஜய் சேதுபதி பாணியில்.. எதிர்நீச்சல் சீரியலில் "ஜீவானந்தம்" என்ட்ரி!
சென்னை: "இன்று எது உங்களுடையதோ நாளை அதுவே மற்றொருவருடையது..நாளை மறுநாள் அதுவே வேறொருவருடையது" என்று பகவத் கீதையில் கண்ணன் சொன்ன வசனத்தை பேசி எதிர் நீச்சல் சீரியலில் மாஸ் என்ட்ரி கொடுத்திருக்கிறார் ஜீவானந்தம். மக்கள் நிலத்தை திரும்ப கொடுங்க. மக்கள் சார்பாக நான் வந்திருக்கிறேன் என்று சொல்கிறார் ஜீவானந்தம். அப்பத்தா ஏன் அடிக்கடி ஜீவானந்தம் பெயரை சொல்கிறார் என்பதற்கான விடை இனி வரும் எபிசோடுகளில் தெரிய வரும்.
சன் டிவியில் ஒளிபரப்பாகும் எதிர்நீச்சல் சீரியல் பரபரப்பான கட்டத்தை எட்டியுள்ளது. எப்ப அப்பத்தா வருவீங்க என்று ஜனனி அழும் போது ஜீவனந்தத்தை பார்த்தியா என்று கேட்கிறார் அப்பத்தா. அதைக்கேட்டு திடுக்கிடுகிறார் ஜனனி. என்ன செய்றது எங்க போறதுன்னு தெரியலை? யார் அந்த ஜீவானந்தம் என்று ஜனனி கேட்க காரில் இருந்து இறங்கி மாஸ் என்ட்ரி தருகிறார் ஜீவானந்தம்.

ஒரு தொழிலதிபரிடம் நிலத்தை எழுதி கேட்கிறார்கள். அவர் தனது நிலத்தை தர முடியாது என்று சொல்ல அப்போது ஜீவானந்தம் வந்து பேசுகிறார். கொடைக்கானலில் 100 ஏக்கர் நிலத்தை தனது பெயருக்கு மாற்றித்தரச்சொல்லி கேட்கிறார் ஜீவானந்தம். கோவண துணிக்கு அல்லாடிக்கிட்டு இருக்கான் எங்க இருக்குன்னு தெரியாம ஏக்கர் கணக்கில நிலம் வாங்கி போட்டிருக்கீங்க. அது எல்லாமே என் மக்களிடம் இருந்து பிடுங்கப்பட்ட நிலம் என்று சொல்கிறார்.
இன்று எது உங்களுடையதோ நாளை அதுவே மற்றொருவருடையது..நாளை மறுநாள் அதுவே வேறொருவருடையது. மக்கள் நிலத்தை திரும்ப கொடுங்க. மக்கள் சார்பாக நான் வந்திருக்கிறேன். என் பேரில் நிலத்தை பதிவு செய்து கொடுங்கள் என்று கேட்கிறார். நம்ம நாடு மாதிரி வினோதமான வாய்ப்பு. ஒரு பக்கம் கோடீஸ்வரர்கள் இருக்கிறார்கள். பட்டினி சாவும் நடக்கிறது. உங்களை மாதிரி உண்டு கொழுத்த பெரு முதலாளிகள் எவ்வளவு பேர் இருக்கீங்க..நீங்க மனசு வைச்சா நானும் கோடீஸ்வரன் ஆகலாம். நாட்டில் 1000 புதிய கோடீஸ்வரர்கள் உருவாவார்கள். சமத்துவம் உயரும்
நான் ரவுடியிசம், கட்டப்பஞ்சாயத்து செய்வதாக சொல்கிறீர்கள். உங்கள் கிட்ட நீங்க நான் பேசலை வீடியோ பாருங்க உங்களுக்கு தெரியும் என்று சொல்லி வீடியோவை காட்டுகிறார். வெளிநாடுகளில் உங்கள் பிள்ளைகளை எங்கள் ஆட்கள் ஃபாலோ செய்கிறார்கள். நீங்கள் கையெழுத்து போடாவிட்டால் ஃபாலோ செய்பவர்கள் பைனல் செய்து விடுவார்கள் என்று ஜீவானந்தம் சொன்னதை கேட்டு கையெழுத்து போடுகிறார் ராகேஷ்.
இந்த காட்சியால் ஜீவானந்தம் நல்லவரா? கெட்டவரா? இருப்பவர்களிடம் இருந்து பறித்து இல்லாதவர்களுக்கு கொடுக்கும் ஹீரோவா என்று கேட்கின்றனர் எதிர்நீச்சல் சீரியல் ரசிகர்கள். அப்பத்தா ஏன் அடிக்கடி ஜீவானந்தம் பெயரை சொல்கிறார் என்பதற்கான விடை இனி வரும் எபிசோடுகளில் தெரிய வரும்.
ஆதி குண சேகரன் வீட்டில் கல்யாண ஏற்பாடுகள் நடந்து கொண்டிருக்கின்றன. குளியலறை மட்டுமே நாங்கள் சுதந்திரமாக இருக்கும் இடம் என்று சொல்லி ஆதங்கப்படுகிறாள் நந்தினி. அப்போது குணசேகரன் நந்தினி என்று சத்தம் போடவே..காபியோட போகணும் இல்லைன்னா அதுக்கும் கத்துவாரு என்று சொல்லிக்கொண்டே போகிறாள்.
ஆதிரையின் திருமணத்தில் மிகப்பெரிய ட்விஸ்ட் நடக்கப்போகிறது. கல்யாண மண்டபத்திற்கு செல்ல எல்லோரும் தயாராகி வருகின்றனர். ஜனனியும் சக்தியும் வரக்கூடாது என்று குணசேகரனும் கதிரும் சொல்கின்றனர். கரிகாலனை திருமணம் செய்ய நான் சம்மதம் சொல்லிட்டேனே ஜனனியும் சக்தியும் வந்தால்தான் நான் வருவேன் என்று சொல்லி அழுகிறாள் ஆதிரை. உன் பேத்திக்கு நாளைக்கு கல்யாணம் என்று அப்பத்தாவிடம் குணசேகரன் பேசுகிறார். மாப்பிள்ளைதான் மாறிப்போச்சு என்று சொல்கிறார்.
தாயே மீனாட்சி நீயே எனக்கு எதிரா நின்னாலும் இந்த கல்யாணம் நடந்தே தீரும் என்று சொல்கிறார் குணசேகரன். அதைக்கேட்டு ஞானம் முகம் சுளிக்கிறார். மகளின் கல்யாணம் நடக்கப்போகும் சூழ்நிலையில் விசாலாட்சி கவலையோடு இருக்கிறார். கரிகாலனுடன் கல்யாணம் செய்து வைக்க குணசேகரன் முயற்சி செய்ய அருணுடன் திருமணம் செய்து வைக்க திட்டமிடுகிறார் ஜனனி.
கல்யாண மண்டபத்திற்கு அனைவரும் போக அருண் ஆதிரை திருமணத்தை எப்படி நடத்துவது என்று திட்டத்தை கூறுகிறாள் ஆதிரை. திருமணத்திற்கு பிறகும் நடக்கும் எதையும் சந்திக்க நான் தயாராக இருக்கிறேன் என்று சொல்கிறாள் ஜனனி. அப்பத்தா சொன்ன வார்த்தைக்காகத்தான் நான் இங்கே இருக்கிறேன். அவருடைய பிரச்சினை தீர்க்க நான் எது வந்தாலும் சமாளிப்பேன் என்று சொல்கிறாள் ஜனனி.
அதைக்கேட்ட விசாலாட்சி.. நீ நல்லா இருப்ப. மத்தவங்க சொல்றாங்க என்று இவளை விட்டுக் கொடுத்துறாதே சக்தி என்று சொல்லி நீ நல்ல இருப்ப ஜனனி என்று ஆசிர்வாதம் செய்கிறாள். அப்பத்தா ரூமுக்கு எல்லோரும் போகின்றனர். ஜனனி, விசாலாட்சி, ஆதிரை ஆகியோர் அப்பத்தா இருக்கும் ரூமுக்கு வந்துள்ள நிலையில் விசாலாட்சி, உங்க பேத்திக்கு அருணோட கல்யாணம் நடக்க போகுது, ஆசிர்வாதம் பண்ணுங்கனு கேட்கிறார்.
இன்னொரு பக்கம் குணசேகரன், ஞானம், கதிர் ஆகியோர் எஸ். கே.ஆர் கம்பெனிக்கு சென்று சண்டை போடுகின்றனர். கதிர் ஓவராக பேச சாருபாலா அமைதியாக இருக்க சொல்கிறார். இல்லனா என்ன பண்ணுவீங்கனு கதிர் சத்தம் போட நாளைக்கு நடக்க போற கல்யாணத்தை நடக்க விடாமல் பண்ணிடுவேன் என அதிர்ச்சி கொடுக்கிறார் சாருபாலா. ஜனனிக்கு ஒரே லட்சியம் ஆதிரை திருமணத்தை அருணுடன் நடத்த வேண்டும் என்பதுதான். ஜனனி நினைத்தது நடக்குமா? ஜீவானந்தத்தை சந்தித்து பேசுவாளா என பல திருப்பங்களுடன் இன்றைய எபிசோடு ஒளிபரப்பாகும் என எதிர்பார்க்கலாம்.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications